Fri ,Apr 19, 2024

சென்செக்ஸ் 72,718.77
229.78sensex(0.32%)
நிஃப்டி22,047.30
51.45sensex(0.23%)
USD
81.57
Exclusive

இஸ்ரோவுக்குக் கிடைத்த வெற்றி... திட்டமிட்ட படி விண்ணில் பாய்ந்த பிஎஸ்எல்வி சி-54..

Gowthami Subramani Updated:
இஸ்ரோவுக்குக் கிடைத்த வெற்றி... திட்டமிட்ட படி விண்ணில் பாய்ந்த பிஎஸ்எல்வி சி-54.. Representative Image.

இஸ்ரோ இன்று பிஎஸ்எல்வி சி-54 ராக்கெட்டை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது. நேற்றைய தினமான வெள்ளிக்கிழமை காலை தொடங்கிய 25.30 மணி நேர கவுன்ட் டவுன் ஆனது முடிந்து இன்று காலை 11.56 மணிக்கு விண்ணுக்குப் புறப்பட்டது.

இந்தியா சார்பில் அனுப்பப்பட்ட இந்த ராக்கெட்டில் இந்தியாவின் புவி கண்காணிப்பு செயற்கைக்கோள், 8 நானோ செயற்கைக் கோள்கள் அனுப்பப்பட்டுள்ளன. இதன் மொத்த எடை 1,117 கிலோ ஆகும். இது, ஓசோன்சாட் வரிசையில் விண்ணில் அனுப்பக் கூடிய 4 ஆவது ஆய்வுக் காலம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பயன்கள்

விண்ணிற்கு இந்த ராக்கெட்டில் உள்ள இஓஎஸ்-06 மூலம், கடலின் தன்மை மற்றும் அதன் மேற்பரப்பு, வெப்பநிலை, காற்றின் திசை மாறுபாடுகள் உள்ளிட்ட பல்வேறு தகவல்களைத் தொடர்ந்து கண்காணித்து அளிக்கும். மேலும், இந்த பிஎஸ்எல்வி சி-54 ராக்கெட்டுடன், அமெரிக்காவின் ஆஸ்ட்ரோகாஸ்ட் (4 செயற்கைக் கோள்கள்), இந்தியா – பூடான் கூட்டு தயாரிப்பிலான ஐஎன்எஸ்-2பி, துருவா ஸ்பேஸ் நிறுவனத்தின் தைபோல்ட் (2 செயற்கைக் கோள்கள்) மற்றும் பிக்சலின் ஆனந்த் உள்ளிட்ட 8 நானோ செயற்கைக் கோள்களும் அனுப்பப்பட்டுள்ளது.

 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்