Fri ,Apr 19, 2024

சென்செக்ஸ் 73,088.33
599.34sensex(0.83%)
நிஃப்டி22,147.00
151.15sensex(0.69%)
USD
81.57
Exclusive

How To: ஆன்லைனில் மின் இணைப்பு எண்ணுடன் ஆதாரை இணைப்பது எப்படி? எளிமையான வழிமுறைகள்..

Nandhinipriya Ganeshan Updated:
How To: ஆன்லைனில் மின் இணைப்பு எண்ணுடன் ஆதாரை இணைப்பது எப்படி? எளிமையான வழிமுறைகள்..Representative Image.

மின் இணைப்பை ஆதார் எண்ணுடன் இணைத்தால் மட்டுமே மின் கட்டணத்தை செலுத்த முடியும் என்று திடீர் நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது மின்சார வாரியம். அதன்படி, ஆதார் எண்ணை இணைக்காத நவம்பர் 24 முதல் நவம்பர் 30 ஆம் தேதி வரை மின்கட்டணம் செலுத்த வேண்டிய தாழ்வழுத்தப் பிரிவு மின்நுகர்வோர்களுக்கு 2 நாட்கள் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. எனவே, இன்னும் இணைக்காதவர்கள் உடனே ஆன்லைனில் இணைத்துவிடுங்கள். இதோ எளிய வழிமுறைகள்..

Online-ல் ஆதாரை மின்இணைப்பு எண்ணுடன் இணைப்பது எப்படி?

முதலில் https://adhar.tnebltd.org/Aadhaar/  இணையப்பக்கத்திற்கு செல்லவும்.

அதில், Link your service connection with Aadhar என்று இருக்கும் பகுதியை க்ளிக் செய்து கொள்ளவும்.

அதன் பிறகு அடுத்த பக்கத்தில், Service Connection Number என்று கேட்கப்படும் அதில் உங்களுடைய மின் இணைப்பு எண் (E.B. consumer number) பதிவிடவும்.

தொடர்ந்து Enter கொடுக்கும் போது, அடுத்ததாக திறக்கும் பக்கத்தில், பதிவு செய்யப்பட்ட உங்களது மொபைல் எண்ணின் கடைசி எண் உங்களுக்காக தெரியும். அதனை சரியானதா என்று பார்த்து கொள்ளவும், உடனே அந்த பக்கம் சமர்பிக்கப்பட்டவுடன் அந்த எண்ணிற்கு OTP அனுப்பப்படும்.

அதனை உள்ளிடவும் (உங்களுடைய எண் Register செய்யப்படவில்லை எனில் Tangedco -ன் முகப்பு பக்கத்தை மீண்டும் திறந்து, அதில் Billing Service என்ற பகுதியை கிளிக் செய்து அதில் இருக்கும் Mobile Number Registration என்ற பகுதியை ஓபன் செய்து பதிவு செய்யவும்.

அதற்கு அடுத்ததாக, இந்த இடத்தில், Owner or Tenant என்ற பகுதி இருக்கும். அதனை நிரப்பவும், தொடர்ந்து Enter கொடுக்கும் பட்சத்தில் உங்களுடைய எண் பதிவாகிவிடும்.

OTP உள்ளிட்ட பிறகு, Enter கொடுத்த பின் திறக்கும் பக்கத்தில், உங்களுடைய தனிப்பட்ட தகவல்கள் அதில் காட்டப்படும். அங்கு கேட்கும் கேப்ட்சாவை உள்ளிடவும். அங்கு உங்களுடைய ஆதார் எண் தகவல்கள் கேட்கப்பட்டிருக்கும். அதனை சரியாக நிரப்பிய பின்னர், Declaration கேட்கப்படும்.

அதனை கிளிக் செய்து Submit கொடுத்தால் வெற்றிகரமாக பதிவு செய்யப்பட்டதாக காண்பிக்கும். 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்