Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Jio 5g இன்னும் 50 நகரங்களில் அறிமுகம்...! இனி புயல் வேக டேட்டா தான்..!

Manoj Krishnamoorthi Updated:
Jio 5g இன்னும் 50 நகரங்களில் அறிமுகம்...! இனி புயல் வேக டேட்டா தான்..! Representative Image.

டெலிகாம் நிறுவனங்களில் அதிக வாடிக்கையாளர்களை கொண்டது. 2023 முதல் 5ஜி சேவையை ஒவ்வொரு நகரமாக இந்தியாவில் அறிமுகம் செய்து வருகிறது.  இதுவரை 134 நகரங்களில் 5ஜி சேவை அறிமுகம் செய்த ஜியோ, இன்று 50 நகரங்களில் 5ஜி சேவையை அறிமுகம் செய்துள்ளது. 

ரிலையன்ஸ் ஜியோ 2023 ஜனவரி 7 முதல் ஒவ்வொரு நகரமாக 5ஜி சேவையை வேகமாக வெளியீடு செய்து வருகிறது.  2023 வருடம் முடிவதற்குள் இந்தியா முழுவதும் ஜியோ 5ஜி சேவை அனுபவிக்க முடியும். இதுவரை அஸாம், சத்தீஸ்கர், பஞ்சாப், ஹரியானா, ஜார்கண்ட், மகாராஷ்டிரா, ஒடிசா, மேற்கு வங்கம் என ஒவ்வொரு மாநிலத்திலும் முக்கிய நகரங்களில் 5ஜி சேவையை அறிமுகம் செய்தது. அதேபோல தெற்கே ஆந்திரா, கர்நாடகா, கோவா, தெலுங்கானா மற்றும் தமிழ்நாடு ஆகிய மாநிலங்களிலும் 5ஜி சேவையை படிப்படியாக அறிமுகம் செய்தது.

இந்தியாவில் இதுவரை 17 மாநிலங்களில் 134 நகரங்களில் அறிமுகமான ஜியோ 5ஜி சேவை, இன்று முதல் மேலும் 50 நகரங்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.  இன்று முதல் மேற்குறிப்பிட்ட 17 மாநிலங்களில் 50 நகரங்கள் இந்த ஜியோ 5ஜி சேவையில் சேர்க்கப்படுகிறது. எனவே, தற்போது இந்தியாவில் மொத்தம் 184 நகரங்களில் ஜியோ 5ஜி சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது.

 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்