Sat ,Apr 20, 2024

சென்செக்ஸ் 73,088.33
599.34sensex(0.83%)
நிஃப்டி22,147.00
151.15sensex(0.69%)
USD
81.57
Exclusive

இது என்ன போன மிஞ்சிய அளவுக்கு இருக்கே! அப்ப கண்டிப்பா வாங்கணும்!

Priyanka Hochumin September 20, 2022 & 12:35 [IST]
இது என்ன போன மிஞ்சிய அளவுக்கு இருக்கே! அப்ப கண்டிப்பா வாங்கணும்!Representative Image.

வரும் அக்டோபர் மாதத்தில் Redmi Pad ஆனது சீன நிறுவனத்தால் Xiaomi 12T சீரிஸ் உடன் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில் அக்டோபர் மாதம் வெளியாகும் Redmi Pad இன் வருகையை மீண்டும் ஒரு அறிக்கை தெரிவித்துள்ளது. அதே போல் சியோமி குவைத்தின் இன்ஸ்டாகிராம் அக்கவுண்டில் தற்போது நீக்கப்பட்ட போஸ்ட் மூலம் புதிய டேப்லெட்டின் விலை மற்றும் வடிவமைப்பு வெளியிடப்பட்டுள்ளது.

விலை பாத்தீங்களா?

MySmartPrice அறிக்கையின்படி மற்றும் Xiaomi Kuwait இன் இன்ஸ்டாகிராம் போஸ்ட் மூலம் Redmi Pad இன் வெளியீட்டை டீஸ் செய்யப்பட்டுள்ளது. Xiaomi துணை பிராண்டின் இந்த டேப்லெட்டின் விலை KWD 71.9 (தோராயமாக ரூ. 18,500) ஆகும். இந்த டேப்லெட் மின்ட் கிறீன் நிறத்தில் வரலாம். மேலும் மற்றொரு டிப்ஸ்டர் தெரிவித்ததை வைத்து பார்க்கையில் இந்த டேப்லெட் மின்ட் கிறீன், கிராஃபைட்  கிரே மற்றும் மூன்லைட் சில்வர் ஆகிய நிறங்களில் வரலாம் என்பர் கூறப்படுகிறது.

இதெல்லாம் தான் இருக்கா?

Redmi Pad ஆனது மேல் இடது மூலையில் ஒரு செவ்வக கேமரா மாட்யூலைக் கொண்டிருக்கக்கூடும், மேலும் தட்டையான விளிம்பு வடிவமைப்புடன் (flat edge design) வரலாம். வரப்போகும் இந்த லேட்டஸ்ட் டேப்லெட் 3 ஜிபி ரேம் + 64 ஜிபி ஸ்டோரேஜ் மற்றும் 4 ஜிபி ரேம் + 64 ஜிபி ஸ்டோரேஜ் என்று இரண்டு உள்ளமைவு விருப்பங்களுடன் வரலாம். மேலும் 8 மெகாபிக்சல் சிங்கிள் ரியர் கேமரா இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. Redmi Pad ஆனது இதற்கு முன்னர் சான்றிதழ் தளமான, சீனாவின் கட்டாய சான்றிதழ் (3C) இல் காணப்பட்டது. இது 22.5W ஃபாஸ்ட் சார்ஜிங்கிற்கான ஆதரவுடன் 7,800mAh பேட்டரியை பேக் செய்ய முடியும். இந்த டேப்லெட் MediaTek Helio G99 SoC மூலம் இயக்கப்படலாம். இதில் 11.2 இன்ச் ஐபிஎஸ் டிஸ்ப்ளே இடம்பெறும் என தெரிகிறது. இவை தான் இதுவரை நமக்கு கிடைத்த தகவல். இன்னும் துல்லியமான விவரங்களை தெரிந்துகொள்ள டேப்லெட் வெளியாகும் வரை காத்திருக்கலாம்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்