Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Tecno Pop 6 Pro Price: ஒரு நல்ல போன் அதுவும் ரூ. 10,000/-குள்ள வாங்கணுமா? அப்ப இந்த போன் தாங்க பெஸ்ட் சாய்ஸ்

Priyanka Hochumin September 19, 2022 & 12:35 [IST]
Tecno Pop 6 Pro Price: ஒரு நல்ல போன் அதுவும் ரூ. 10,000/-குள்ள வாங்கணுமா? அப்ப இந்த போன் தாங்க பெஸ்ட் சாய்ஸ்  Representative Image.

Tecno Pop 6 Pro Price: டெக்னோ நிறுவனத்தின் முக்கிய நோக்கமே மக்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்வதாகும். அந்த வகையில் அடுத்தடுத்து மாடல் போன்களை வெளியிட்டு மக்களை  எந்நேரமும் பரபரப்பாகவே வைத்திருக்கிறது டெக்னோ. அந்த வகையில் இன்று அறிமுகமாகிறது டெக்னோ பாப் 6 ப்ரோ ஸ்மார்ட்போன். இதனின் விவரக்குறிப்புகள் மற்றும் பிற தகவல்களை தெரிந்துகொள்ள தொடர்ந்து படியுங்கள்.

விலை பற்றிய தகவல்

பங்களாதேஷ் டெக்னோ பிரான்ச் வெப்சைட்டில் Tecno Pop 6 Pro ஸ்மார்ட்போனின் விலை ரூ. 8,900/- என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டியது இந்த மாடல் ஸ்மார்ட்போன் Peaceful Blue and Polar Black கலர் ஆப்ஷனில் கிடைக்கிறது. மேலும் இந்தியாவில் டெக்னோ பாப் 6 ப்ரோ மாடல் அமேசான் வழியாக விற்பனைக்கு வரும் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது.

அசத்தும் டிஸ்பிளே

Tecno Pop 6 Pro வின் முன்பக்க கேமராவை வைக்க டாட் நாட்ச் கட்அவுட்டுடன் 6.6 இன்ச் HD+ (720x1,612 பிக்சல்கள்) டிஸ்ப்ளே வடிவமைப்பை கொண்டுள்ளது. மேலும் பின்புறத்தில் டிசைனர் பேக் பேனலைப் பெறுகிறது. இந்த ஸ்மார்ட்போன் ஆனது 3GB RAM உடன் இணைக்கப்பட்ட அடையாளம் தெரியாத ஆக்டா-கோர் SoC மூலம் இயக்கப்படுகிறது.

துல்லியமான கேமரா

நீங்கள் வேற லெவல்ல போட்டோ மற்றும் வீடியோ எடுக்க, டூயல் ரியர் கேமரா பொருத்தப்பட்டுள்ளது. அதிலும் 8 மெகாபிக்சல் மெயின் சென்சாருடன் வருகிறது. இதனுடன் AI-இயங்கும் பெயரிடப்படாத இரண்டாவது சென்சார் மற்றும் இரட்டை ஃபிளாஷ் உள்ளது. அதே போல் செல்பீ மோகத்தில் இருப்பவர்களுக்கு ஃபிளாஷ் உறுதுணையுடன் முன்புறத்தில் 5 மெகாபிக்சல் கேமரா உள்ளது.

பேட்டரி அமைப்பு

இந்த அசத்தலான டெக்னோ பாப் 6 ப்ரோ 32GB இன்-பில்ட் ஸ்டோரேஜை கொண்டுள்ளது. மேலும் நீண்ட நேர பயணப்பாட்டிற்காக 5000mAh பேட்டரி ஆதரவைக் கொண்டுள்ளது. ஸ்மார்ட்போனில் உள்ள இணைப்பு விருப்பங்களில் 4G, GPS, Wi-Fi, ப்ளூடூத், FM மற்றும் OTG ஆதரவு ஆகியவை அடங்கும். உள்பக்க சென்சார்கள் -  கைரோ சென்சார், சுற்றுப்புற ஒளி, தூரம் மற்றும் பக்கவாட்டில் பொருத்தப்பட்ட கைரேகை சென்சார் ஆகியவையாகும்.  


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்