Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Nokia | 60 ஆண்டுகளுக்கு பிறகு நோக்கியா கொண்டு வந்த புதிய மாற்றம்.. ரசிகர்களுக்கு சர்பிரைஸ்..

Nandhinipriya Ganeshan Updated:
Nokia | 60 ஆண்டுகளுக்கு பிறகு நோக்கியா கொண்டு வந்த புதிய மாற்றம்.. ரசிகர்களுக்கு சர்பிரைஸ்..Representative Image.

உலகின் முன்னணி செல்போன் தயாரிப்பு நிறுவனமாக விளங்கி வந்தது தான் பின்லாந்தை சேர்ந்த நோக்கிய நிறுவனம். அந்த காலத்தில் மொபைல் துறையின் ராஜா என்றே சொல்லலாம். குறிப்பாக, 90ஸ் கிட்ஸ்களுக்கு முதன் முதலில் செல்போன் என்ற ஆசையை தூண்டியதே இந்த நோக்கியா ஃபோன் என்று சொன்னால் மறுப்பதற்கு இல்லை. ஆனால், காலப்போக்கில் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்கள் வருகையால் நோக்கிய மெல்ல மெல்ல பின்னுக்கு தள்ளப்பட்டுவிட்டது.

Nokia | 60 ஆண்டுகளுக்கு பிறகு நோக்கியா கொண்டு வந்த புதிய மாற்றம்.. ரசிகர்களுக்கு சர்பிரைஸ்..Representative Image

தற்போது ஸ்மார்ட்போன் சந்தையில் ஆப்பிள், சாம்சங், மோட்டோரோலா போன்ற நிறுவனங்களும், ரெட்மி, விவோ, ஓப்போ, ஒன்பிளஸ் போன்ற சீன நிறுவனங்களும் ஆதிக்கம் செலுத்தி வருகின்றன. இந்த போட்டிக்கு மத்தியில் நோக்கியா தன்னை புதுப்பித்துக்கொள்ள முயற்சித்து வருகிறது. அதன் ஆரம்பமே இந்த லோகோ மாற்றம். சுமார் 60 வருடங்களாக பயன்படுத்தி வந்த லோகோவை முதல்முறையாக பிப்ரவரி 26ஆம் தேதி நோக்கியா நிறுவனம் மாற்றியுள்ளது.

ஏற்கனவே இருந்த நீல் நிற வடிவம் முற்றாக நீக்கப்பட்டு 5விதமான தோற்றத்தில் நோக்கியா என்ற எழுத்துக்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன. மீண்டும் சந்தையை பிடிப்பதற்கான யுக்தியை தனது லோகோவிலிருந்தே தொடங்கியுள்ள நோக்கியா நிறுவனம் மீண்டும் பொதுமக்களின் கவனத்தை ஈர்க்குமா என்பதை காலம் தான் முடிவு செய்ய வேண்டும். 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்