Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

இவ்ளோ கம்மி விலையில Tablet-ஆ.. சூப்பரான அம்சங்களுடன் Nokia T10 Tablet…

Gowthami Subramani September 28, 2022 & 13:10 [IST]
இவ்ளோ கம்மி விலையில Tablet-ஆ.. சூப்பரான அம்சங்களுடன் Nokia T10 Tablet…Representative Image.

நோக்கியா நிறுவனம் நோக்கியா T10 என்ற புதிய ஆன்ட்ராய்டு Tablet-ஐ இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. இது உலகளவில் இந்த ஆண்டு ஜூலை மாதம் முதலே அறிமுகப்படுத்தப்பட்டது. நோக்கியாவின் இந்த புதிய டேப்லட் வகை 8 இன்ச் அளவிலான டிஸ்பிளேயைக் கொண்டுள்ளது. மேலும், இதன் சிறப்பம்சங்கள், இந்தியாவில் இதன் விலை குறித்த விவரங்களைப் பற்றிக் காண்போம்.

Nokia T10 Tablet அம்சங்கள் (Nokia T10 Tablet Specifications and Features)

டிஸ்பிளே

8 இன்ச் டிஸ்பிளே

பிக்சல் அளவு

1280x800 பிக்சல்

Memory Storage

இரண்டு வகை Memory Storage (Expandable Upto 512GB)

3GB + 32GB

4GB + 64GB

ஆன்ட்ராய்டு வெர்சன்

ஆன்ட்ராய்டு 12

கேமரா

முன்பக்க கேமரா: 2MP

பின்பக்க கேமரா: 8MP

Battery

5250mAh with 10W சார்ஜிங்

Headphone Jack

3.5mm

 

Nokia T10 Tablet, சாஃப்ட்வேட் அப்டேட்டிற்கு இரண்டு வருடங்கள் மற்றும் 3 ஆண்டிற்கு செக்யூரிட்டி அப்டேட்டையும் வழங்குவதாகக் குறிப்பிட்டுள்ளது.

இதன் முக்கிய அம்சமாக இருப்பது Face Unlock with Mask Mode. அதாவது, முகத்தில் மாஸ்க் அணிந்து கொண்டு மொபைலை Unlock செய்யலாம்.

Nokia T10 Tablet விலை (Nokia T10 Tablet Price in India)

இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்ட நோக்கியா டி10 டாப்லெட் விலை இரண்டு Memory வகைகளைப் பொறுத்து குறிப்பிடப்படுகிறது. அதன் படி, 3GB + 32GB கொண்ட Nokia T10 Tablet விலை ரூ.11,799 –க்கும், 4GB + 64GB கொண்ட Nokia T10 Tablet விலை ரூ.12,799 –க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இது Single Ocean Blue நிறத்தில் காணப்படுகிறது. வாடிக்கையாளர்கள் இதனை Amazon மற்றும் Nokia-வின் அங்கீகரிக்கப்பட்ட தளத்திலிருந்து பெற்றுக் கொள்ளலாம்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்