Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

ஃபோன்னா இப்படி இருக்கனும்...5400mAh பேட்டரி மற்றும்...தெறிக்கவிடும் அம்சங்களுடன் ஒன்பிளஸ் 12 | Oneplus 12 Launch Date in India

Priyanka Hochumin Updated:
ஃபோன்னா இப்படி இருக்கனும்...5400mAh பேட்டரி மற்றும்...தெறிக்கவிடும் அம்சங்களுடன் ஒன்பிளஸ் 12 | Oneplus 12 Launch Date in IndiaRepresentative Image.

சமீபத்தில் ஒன்பிளஸ் பிரியர்களின் கவனத்தை ஈர்த்த 'ஒன்பிளஸ் 12' ஸ்மார்ட்போன் பற்றிய சில முக்கிய விவரக்குறிப்புகள் வெளியாகியுள்ளது. அதாவது மொத்தம் 6 அம்சங்கள் அப்கிரேட் செய்யப்பட்டு அறிமுகமாகிறது. யோகேஷ் ப்ராரின் (@heyitsyogesh) என்னும் நம்பகமான டிப்ஸ்டரின் கூற்றுப்படி தகவல் கிடைத்துள்ளது. அதனைத் தொடர்ந்து ஒன்பிளஸ் 12 ஸ்மார்ட்போனின் விலை, ரிலீஸ் தேதி உள்ளிட்ட விவரங்களை பார்க்கலாம்.

ஸ்னாப்டிராகன் 8 ஜென் 3 சிப்செட் உடன் அறிமுகமாகும் முதல் ஒன்பிளஸ் ஸ்மார்ட்போன் இதுவே ஆகும். இது 50எம்பி மெயின் கேமரா + 50எம்பி இரண்டாம் நிலை கேமரா + 64எம்பி மூன்றாம் நிலை கேமரா என ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப்பை பெறலாம். ஆனால் எது வைட், அல்ட்ரா-வைட், பெரிஸ்கோப் லென்ஸ் (Periscope Lens) என்ற விவரம் இன்னும் வெளியாகவில்லை. அதிக நேரம் பயன்பாட்டிற்கு 5400எம்ஏஎச் பேட்டரி இடம் பெற்றிருக்கலாம். இதில் 100W வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் 50W வயர்லெஸ் ஃபாஸ்ட் சார்ஜிங்கிற்கான ஆதரவு கிடைக்கலாம். மேலும் ஐபி ரேட்டிங் மற்றும் பிரீமியம் பில்ட் உடன் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலே குறிப்பிட்ட அப்கிரேட்களைத் தவிர 2K ரெசல்யூஷன், 120ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் உடனான 6.7-இன்ச் AMOLED டிஸ்பிளேவை கொண்டிருக்கலாம். மேலும் இதில் எல்டிபிஓ டிஸ்பிளே டெக்னாலஜியும் (LTPO Display Technology) சேர்க்கப்படலாம். இத்தனை சிறப்பம்சங்களையும் கொண்ட ஒன்பிளஸ் 12 ஸ்மார்ட்போன் வரும் 2023 இறுதியில் சீனாவில் முதலில் அறிமுகம் ஆக உள்ளது. அதன் பின்னர் 2024 ஜனவரி அல்லது பிப்ரவரி மாதத்தில் இந்தியாவில் அறிமுகம் ஆகலாம். இதனின் விலை ரூ.80,990/-க்கு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலே குறிப்பிட்ட விவரங்கள் அனைத்துமே தரவுகளின் அடிப்படியில் வெளியானது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்