Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

ஆத்தாடி! வெறும் 28 மணிநேரத்துல 1 லட்சம் ஆர்டரா? அடிச்சி புடிச்சி வாங்கப்பட்ட Samsung ஸ்மார்ட்போன்.. | Samsung Galaxy Z Bookings

Nandhinipriya Ganeshan Updated:
ஆத்தாடி! வெறும் 28 மணிநேரத்துல 1 லட்சம் ஆர்டரா? அடிச்சி புடிச்சி வாங்கப்பட்ட Samsung ஸ்மார்ட்போன்.. | Samsung Galaxy Z BookingsRepresentative Image.

ப்ரீமியம் ரக ஸ்மார்ட்போன்கள் தயாரிப்பில் முன்னணி நிறுவனமான வலம் வரும் சாம்சங் (Samsung), அவ்வப்போது புதிய மாடல்களை வெளியிடுவது வழக்கம். அப்படி சமீபத்தில் அதன் ஐந்தாம் தலைமுறை ஃபோல்டபிள் ஸ்மார்ட்போன்களை வெளியிட்டது. அந்த இரண்டு ஸ்மார்ட்போன்களின் விற்பனையானது அந்நிறுவனமே எதிர்பார்க்காத வகையில் மிகப்பெரிய ஆச்சர்யத்தை ஏற்படுத்தியிருக்கிறதாம். அந்த தகவலை சாம்சங் நிறுவனமே வெளியிட்டுள்ளது. அதென்ன தகவல்?, அதென்ன மாடல்? என்பதை விரிவாக பார்க்கலாம்.

சாம்சங் நிறுவனம் அதன் சாம்சங் கேலக்ஸி இஸட் ஃபிளிப் 5 (Samsung Galaxy Z Fold 5) மற்றும் சாம்சங் கேலக்ஸி இஸட் ஃபோல்ட் 5 (Samsung Galaxy Z Flip 5) என்ற இரண்டு ஃபோர்டபிள் ஸ்மார்ட்போன்களை கடந்த ஜூலை 27 ஆம் தேதி அறிமுகப்படுத்தியது. மேலும், இவ்விரு ஸ்மார்ட்போன்களுக்குமான முன்பதிவும் அன்றே தொடங்கப்பட்டது. 

Also Read | புதுசோ புதுசு! சாம்சங் கேலக்ஸி இசட் ஃபோல்ட் 5 மற்றும் கேலக்ஸி இசட் ஃபிளிப் 5 தெறிக்கவிடும் அம்சங்கள்.. | Samsung Galaxy Z

அதன்படி, முன்பதிவுகளுக்கு கிடைக்கப்பெற்ற முதல் 28 மணி நேரத்திற்குள் 100,000க்கும் மேற்பட்ட இந்திய வாடிக்கையாளர்கள் சாம்சங் கேலக்ஸி இஸட் ஃபிளிப் 5 (Samsung Galaxy Z Flip 5) மற்றும் சாம்சங் கேலக்ஸி இஸட் ஃபோல்ட் 5 (Samsung Galaxy Z Fold 5) மாடல்களை ஆர்டர் செய்துள்ளனர். இந்த எண்ணிக்கையானது முந்தைய தலைமுறை மாடல்கள் (அதாவது சாம்சங் கேலக்ஸி இஸட் ஃபிளிப் 4 மற்றும் சாம்சங் கேலக்ஸி இஸட் ஃபோல்ட் 4) உடன் ஒப்பிடும்போது, முன்பதிவுகளில் 1.7 மடங்கு அதிகமாகும். 

இந்த விற்பனை எண்ணிக்கையானது மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன்கள் மீது இந்திய பயனர்களின் விருப்பத்தை சுட்டிக்காட்டுகிறது என்று நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில், இவ்விரு ஸ்மார்ட்போன்களும் வருகின்ற ஆகஸ்ட் 18 ஆம் தேதி முதல் இந்திய சந்தையில் விற்பனைக்கு வரும் என்பது குறிப்பிடத்தக்கது. விலை விவரங்களை பொறுத்தவரை, கேலக்ஸி இஸட் ஃபிளிப் 5 ஸ்மார்ட்போனின் ஆரம்ப விலை ரூ.99999 (8ஜிபி ரேம் + 256 ஜிபி ஸ்டோரேஜ்) மற்றும் கேலக்ஸி இஸட் ஃபோல்ட் 5 ஸ்மார்ட்போனின் ஆரம்ப விலை ரூ.1,54,999 (12ஜிபி ரேம் + 256 ஜிபி ஸ்டோரேஜ்) என்பது குறிப்பிடத்தக்கது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்