Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Oneplus Nord 3 தெறிக்கவிடும் லுக்...விலை மற்றும் அம்சம் பற்றிய விவரம் | Oneplus Nord 3 5G Specifications

Priyanka Hochumin Updated:
Oneplus Nord 3 தெறிக்கவிடும் லுக்...விலை மற்றும் அம்சம் பற்றிய விவரம் | Oneplus Nord 3 5G SpecificationsRepresentative Image.

மக்கள் மத்தியில் ஒன்பிளஸ் போனுக்கு என்று தனி மவுசு உள்ளது. அதனை எப்போதும் தக்க வைத்துக்கொள்வதாற்காக அடுத்தடுத்து புது அம்சங்களுடன் ஸ்மார்ட்போன்களை ரிலீஸ் செய்கிறது ஒன்பிளஸ் நிறுவனம். மேலும் ஏற்கனவே கூறியது போல இந்தியாவில், வரும் ஜூன் மாதத்தில் OnePlus Nord 3 5G மாடல் வெளியாகும். ஆனால் சரியான தேதியை நிறுவனம் இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்க வில்லை. தற்போது ட்விட்டரில் ஒன்பிளஸ் நோர்ட் 3 5ஜி போனின் அம்சங்கள், லேட்டஸ்ட் போட்டோ மற்றும் விலை குறித்த விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது.

OnePlus Nord 3 5G அம்சங்கள்

இந்த மாடலானது, 1.5K ரெசொல்யூஷன் கொண்ட 6.74 இன்ச் அமோலெட் (AMOLED) டிஸ்ப்ளே மற்றும் 120Hz ரிப்ரெஷ் ரேட் உடன் வருகிறது. இது 1450 பீக் நிட்ஸ் பிரைட்னஸ் மற்றும் பன்ச் ஹோல் டிஸ்ப்ளே கொண்டுள்ள மாடல் போனாகும். ஆண்ட்ராய்டு 13 மூலம் இயங்கும் இந்த போன் மீடியாடெக் டைமன்சிட்டி 9000 எஸ்ஓசி பிராசஸர் கொண்டுள்ளது. மேலும் ஆக்சிஜன் ஓஎஸ் 13 அம்சமும் அளிக்கப்பட்டுள்ளது. 12GB/16GB என்று இரண்டு வேரியண்ட் ரேம் மற்றும் 256GB இன்டெர்னல் ஸ்டோரேஜ் உடன் வருகிறது.

பின்புறத்தில் 50 எம்பி மெயின் கேமராவானது 8 எம்பி செகன்டரி லென்ஸ், 2 எம்பி சென்சார் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. செல்பீ மற்றும் வீடியோ கால் பயன்பாட்டிற்கு 16 எம்பி கேமரா பொறுத்தப்பட்டுள்ளது. நீண்ட நேர பயன்பாட்டிற்காக 80W பாஸ்ட் சார்ஜிங் ஆதரவை ஆதரிக்கும் 5000mAh பேட்டரி அளிக்கப்பட்டது. இத்தனை சிறப்பான அம்சங்களை கொண்ட ஒன்பிளஸ் நோர்ட் 3 5ஜி மாடல் ரூ.30,000 முதல் ரூ.32,000/-க்குள் இருக்கும் என்று கூறப்படுகிறது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்