Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

ChatGPT-ன் அடுத்த டார்கெட் Android யூசர்ஸ் தான் | OpenAI ChatGPT iOS App Launched

Priyanka Hochumin Updated:
ChatGPT-ன் அடுத்த டார்கெட் Android யூசர்ஸ் தான் | OpenAI ChatGPT iOS App LaunchedRepresentative Image.

ஓப்பன்ஏஐ (OpenAI) நிறுவனம் அடுத்து ஆண்ட்ராய்டு பயனர்களை டார்கெட் செய்வதாக தகவல் வெளியாகியுள்ளது. அது குறித்த முழு விவரத்தையும் இந்த பதிவில் பாப்போம்.

தற்போது மக்கள் மத்தியில் பரவலாக பேசப்படும் தொழில்நுட்ப கண்டுபிடிப்பு தான் சாட்ஜிபிடி (ChatGPT). அது ஆர்டிபிஷியல் இன்டெலிஜென்ஸ் சாட்பாட்டை (Artificial Intelligence Chatbot) உருவாக்கிய நிறுவனமான ஓப்பன்ஏஐ (OpenAI) அடுத்து ஆண்ட்ராய்டு போன் பயனப்டுத்தும் மக்களுக்கு முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதாவது, ஓப்பன்ஏஐ iOS பயனர்களுக்கு ChatGPT App-ஐ அறிமுகப்படுத்தியது. இது கூடிய விரைவில் ஆண்ட்ராய்டு வெர்சனில் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளதாக புதிய தகவலை வெளியிட்டுள்ளது.

அப்படி ஒருவேளை இந்த ChatGPT App பயன்பாட்டிற்கு வந்தால் அதனை Free Download செய்ய முடியுமா? அல்லது சந்தா பணம் செலுத்த வேண்டுமா? என்றும் நீங்க யோசிக்கலாம். இந்த ஆப்பை முற்றிலும் இலவசமாக (Free) பயன்படுத்தலாம் என்றும், இது பலவகையான டிவைஸ்களுக்கு இடையே உள்ள ஹிஸ்டரியை சிங்க் செய்யும் (Sync history Across Devices) என்றும் ஓப்பன்ஏஐ நிறுவனம் தெரிவித்துள்ளது.

ChatGPT App பற்றிய விவரங்கள்

ஓப்பன்ஏஐ நிறுவனத்தின் ஓப்பன்-சோர்ஸ் ஸ்பீச்-ரிகக்னைசேஷன் சிஸ்டம் (Open-source Speech-recognition System) ஆன விஸ்பர் (Whisper) உடன் இந்த ஆப் வருகிறது. இதில் விஸ்பர் என்பது சாட்ஜிபிடி உடன் ஸ்பீச்-டூ-டெக்ஸ்ட் (Speech-to-text) அடிப்படையிலான உரையாடல்களை நிகழ்த்த உதவும் ஒரு டூல் அல்லது அம்சமாகும். நீங்கள் சாட்ஜிபிடி பிளஸ் (ChatGPT Plus) சந்தாதாரர்களாக இருந்தால் ஜிபிடி-4 வெர்ஷனில் (GPT-4 Version) உள்ள திறன்களுக்கான பிரத்யேக அணுகல் கிடைக்கும் என்றும் ஓப்பன்ஏஐ நிறுவனம் கூறியுள்ளது. அதாவது புதிய அம்சங்களுக்கான முன்கூட்டிய அணுகல் (Early access to features) மற்றும் விரைவான ரெஸ்பான்ஸ் டைம் (Faster response times) போன்ற முன்னுரிமை அம்சங்கள் கிடைக்கும். இதில் GPT-4 Version மிகவும் சக்திவாய்ந்த நுண்ணறிவு மாடலாகும். இது போன்று பல சிறப்பம்சங்களை கொண்டு வருகிறது இந்த ChatGPT App.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்