Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Realme 11 Pro Vs Realme 11 Pro Plus இதுல எது பெஸ்ட்னு பாத்துட்டு வாங்குங்க..! | Realme 11 Pro 5G Vs Realme 11 Pro Plus 5G

Gowthami Subramani Updated:
Realme 11 Pro Vs Realme 11 Pro Plus இதுல எது பெஸ்ட்னு பாத்துட்டு வாங்குங்க..! | Realme 11 Pro 5G Vs Realme 11 Pro Plus 5GRepresentative Image.

ரியல்மி நிறுவனத்தின் அட்டகாசமான சீரிஸ் தொடர்கள் ரியல்மி 11 ப்ரோ மற்றும் ரியல்மி 11 ப்ரோ 5ஜி இரண்டும் கடந்த ஜூன் 8 ஆம் நாள் அறிமுகம் செய்தது. இந்த இரண்டு மாடல் மொபைல்களும் அட்டகாசமான சிறப்பம்சங்களைக் கொண்டிருக்கிறது. இந்தப் பதிவில், ரியல்மி 11 ப்ரோ மற்றும் ரியல்மி 11 ப்ரோ பிளஸ் மொபைல்களின் சில ஒற்றுமை மற்றும் வேறுபாடுகளைக் காணலாம்.

Realme 11 Pro மற்றும் Realme 11 Pro Plus விவரங்கள்

டிஸ்பிளேயைப் பொறுத்து, Realme 11 Pro மற்றும் Realme 11 Pro Plus மொபைல்கள் இரண்டுமே HDR+ உடன் 6.7 இன்ச் அளவு கொண்ட அமோல்டு டிஸ்பிளேயையும், 120 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீதத்தைக் கொண்டிருக்கிறது.

சேமிப்பைப் பொறுத்த வரை, Realme 11 Pro-ல் 8GB RAM + 12 GB RAM  கொண்ட மொபைல் ஆனது, ரூ.23,999 க்கு விற்பனை செய்யப்பட உள்ளது. 8GB + 256GB சேமிப்பு கொண்ட மொபைல் ஆனது ரூ.24,999 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட உள்ளது. மேலும், 12GB + 256GB சேமிப்பி கொண்ட மொபைல் ரூ.27,999-க்கு விற்பனை செய்யப்பட உள்ளது. இது வரும் ஜூன் 16 ஆம் தேதி முதல் பயனர்கள் வாங்கலாம் எனக் கூறப்படுகிறது.

Realme 11 Pro Plus-ல் மொபைல் ஆனது 8GB RAM + 256GB சேமிப்பு கொண்ட மொபைல் ரூ.27,999-க்கும், 12GB RAM + 256GB சேமிப்பு கொண்ட மொபைல் ரூ.29,999-க்கும் விற்பனை செய்யப்பட உள்ளது. ரியல்மி 11 ப்ரோ பிளஸ் மொபைல் வரும் ஜூன் 15 ஆம் தேதி முதல் விற்பனைக்குக் கிடைக்கும் எனக் கூறப்படுகிறது.

கேமராவைப் பொறுத்த வரை, Realme 11 Pro ஆனது இரட்டை பின்புற கேமரா யூனிட்டுடன், முதன்மை சென்சார் 100 மெகாபிக்சல் மற்றும் இரண்டாம் நிலை சென்சார் ஆனது 2 மெகாபிக்சல் அளவையும் கொண்டிருக்கிறது. டிஸ்பிளேயின் மேற்புறத்தில் மையத்தில் 16 மெகாபிக்சல் முன்பக்க கேமரா சென்சாரைக் கொண்டிருக்கிறது.

Realme 11 Pro Plus ஆனது, மூன்று பின்புற கேமரா யூனிட்டுடன், 200 மெகாபிக்சல் HP3 முதன்மை சென்சார் + 8 மெகாபிக்சல் சென்சார் + 2 மெகாபிக்சல் மேக்ரோ சென்சாரைக் கொண்டிருக்கிறது. மேலும், இதன் முன்புற கேமரா ஆனது 32 மெகாபிக்சல் செல்ஃபி கேமராவைக் கொண்டிருக்கிறது.

இந்த இரண்டு மொபைல்களுமே, இரட்டை நானோ சிம் வசதிகளைப் பெற்றுள்ளது. ஆன்ட்ராய்டு 13 அடிப்படையிலான Realme UI 4.0-வில் இயங்குகிறது. இதனைத் தொடர்ந்து, இந்த இரண்டு மொபைல்களும் MediaTek Dimensity 7050 SoC-கள் மூலம் இயக்கப்படுகிறது. மேலும், 5,000 mAh பேட்டரியைக் கொண்டிருக்கிறது.

இரண்டு மொபைல்களும் சார்ஜிங் ஆதரவில் வேறுபடுகிறது. அதாவது, Realme 11 Pro 5G ஆனது 67 வாட் SuperVOOC ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவையும், Realme 11 Pro Plus 5G ஆனது 67 வாட் SuperVOOC ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவையும் கொண்டிருக்கிறது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்