Sat ,Nov 09, 2024

சென்செக்ஸ் 79,486.32
-55.47sensex(-0.07%)
நிஃப்டி24,148.20
-51.15sensex(-0.21%)
USD
81.57
Exclusive

இன்பினிக்ஸின் குளோபல் வேரியண்ட்...எல்லாமே டாப் நாட்ச் அம்சங்கள்..! | Infinix Note 30 VIP Racing Edition Specs

Priyanka Hochumin Updated:
இன்பினிக்ஸின் குளோபல் வேரியண்ட்...எல்லாமே டாப் நாட்ச் அம்சங்கள்..! | Infinix Note 30 VIP Racing Edition SpecsRepresentative Image.

இன்பினிக்ஸ் நிறுவனத்தின் குளோபல் வேரியண்ட் (Infinix Note 30 VIP Racing Edition) ஸ்மார்ட்போன் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது. முதல் முறையாக இன்பினிக்ஸ் மாடலில் 3டி லெதர் லைட்னிங் டெக்னாலஜி பயன்படுத்தப்பட்டுள்ளது. மேலும் இந்த போனின் டிசைனுக்காக, BMW நிறுவனத்தின் டிசைன்வொர்க்ஸ் குழுவுடன் கைக்கோர்த்துள்ளதாக கூறப்படுகிறது. இதனின் பேக் பேனல் லெதர் பினிஷிங் எல்இடி லைட்னிங் டச் கொண்டு வருகிறது. அத்துடன் நோட்டிபிகேஷனுக்காக மேஜிக் ரிங் அம்சம் கொடுக்கப்பட்டுள்ளது.

Infinix Note 30 VIP விவரக்குறிப்புகள்

இன்பினிக்ஸ் நோட் 30 விஐபி ஸ்மார்ட்போன் 6.78-இன்ச் Full HD+ AMOLED டிஸ்பிளேவுடன் வருகிறது. மேலும் 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 580 நிட்ஸ் ப்ரைட்னஸ், 240 ஹெர்ட்ஸ் சாம்ப்ளிங் ரேட் மற்றும் பல்வேறு டிஸ்பிளே அம்சங்களைக் கொண்டுள்ளது. மேலும் இதனுடைய டிஸ்பிளேவில் என்இஜி கிளாஸ் பாதுகாப்பு (NEG Glass Protection) வழங்கப்பட்டுள்ளது. அத்துடன் ஆண்ட்ராய்டு 13 ஓஎஸ் மற்றும் எக்ஸ்ஓஎஸ் 13 கொண்ட மீடியாடெக் டைமன்சிட்டி 8050 எஸ்ஓசி சிப்செட் கொண்டு இயங்குகிறது. மிக முக்கியமாக கேமிங் பிரியர்களுக்கு மாலி ஜி57 ஜிபியு கிராபிக்ஸ் கார்டு கொடுக்கப்பட்டுள்ளது.

கேமராவைப் பொறுத்த வரையில், 108 எம்பி (QVGA) மெயின் கேமரா + 8 எம்பி அல்ட்ரா வைடு கேமரா + 2 எம்பி மேக்ரோ கேமரா கொண்ட டிரிபிள் ரியர் செட்டப் வருகிறது. மேலும் செல்பீ பயன்பாட்டிற்கு 32எம்பி கேமரா செட்டப் அளிக்கப்பட்டுள்ளது. இது 12 ஜிபி ரேம் + 9 ஜிபி விர்ச்சுவல் ரேம் (Virtual RAM) சேர்த்து மொத்தமாக 21 ஜிபி ரேம் உடன் 256 ஜிபி மெமரி உடன் வருகிறது. அத்துடன் 2 டிபி மைக்ரோஎஸ்டி கார்டு சப்போர்டும் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் 68W ஃபாஸ்ட சார்ஜிங் மற்றும் 50W வயர்லெஸ் சார்ஜிங் ஆதரவை அளிக்கும் 5000 எம்ஏஎச் பேட்டரி கொண்டு வருகிறது. இதில் பைபாஸ் சார்ஜிங் (Bypass Charging) டெக்னாலஜி பயன்படுத்தப்பட்டுள்ளது. இது மேஜிக் பிளாக் மற்றும் கிளேசியர் வைட் ஆகிய நிறங்களில் கிடைக்கும். இது ரூ.26,173/-க்கு விற்பனையாகும் என்று கூறப்படுகிறது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்