Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

1டிபி ஸ்டோரேஜ்...50எம்பி கேமரா...விலை எவ்ளோ தெரியுமா? | Xiaomi 13t Series Launch Date

Priyanka Hochumin Updated:
1டிபி ஸ்டோரேஜ்...50எம்பி கேமரா...விலை எவ்ளோ தெரியுமா? | Xiaomi 13t Series Launch DateRepresentative Image.

Xiaomi நிறுவனம் லேட்டஸ்ட் Xiaomi 13டி சீரிஸ் ஸ்மார்ட்போன்களை வரும் செப்டம்பர் 26 ஆம் தேதி மாலை 5.30 மணிக்கு அறிமுகம் செய்ய உள்ளனர். இந்த நிகழ்வானது Xiaomi-ன் அதிகாரபூர்வ வலைத்தளமான mi.com இல் நேரடியாக ஒளிபரப்பாகிறது. Xiaomi 13டி சீரிஸில் சியோமி 13டி மற்றும் சியோமி 13டி ப்ரோ ஆகிய இரண்டும் அடங்கும். இந்த பதிவில் Xiaomi 13டி சீரிஸ் ஸ்மார்ட்போன்களின் விலை, அம்சம் மற்றும் விவக்குறிப்புகள் பற்றி பார்க்கலாம்.

1டிபி ஸ்டோரேஜ்...50எம்பி கேமரா...விலை எவ்ளோ தெரியுமா? | Xiaomi 13t Series Launch DateRepresentative Image

சியோமி 13டி அம்சங்கள்

இது 144ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 2600 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் உள்ளிட்ட அம்சங்களுடன் 6.67-இன்ச் 1.5K AMOLED டிஸ்பிளேவைக் கொண்டிருக்கும். இந்த ஸ்மார்ட்போன் டைமன்சிட்டி 8200 அல்ட்ரா 4என்எம் சிப்செட் மூலம் இயக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கேமராவைப் பொறுத்தவரையில் ஓஐஎஸ் 50எம்பி ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப்புடன் வரலாம். செல்பீ கேமரா ஆனது, 20எம்பி லென்ஸ் கேமரா பொறுத்தப்பட்டிருக்கலாம். கூடுதலாக, இதில் இன்-டிஸ்ப்ளே ஃபிங்கர் பிரிண்ட் சென்சார் மற்றும் இன்ஃப்ராரெட் சென்சார் போன்றவை இருக்கலாம். இறுதியாக, 67W பாஸ்ட் சார்ஜிங்கை ஆதரிக்கும் 5000mAh பேட்டரி பொருத்தப்பட்டு இருக்கலாம். இது 8ஜிபி ரேம் + 256ஜிபி ஸ்டோரேஜ் என்னும் சிங்கிள் வேரியண்ட் சுமார் ரூ. 57,400/-க்கு விற்பனையாகலாம்.

1டிபி ஸ்டோரேஜ்...50எம்பி கேமரா...விலை எவ்ளோ தெரியுமா? | Xiaomi 13t Series Launch DateRepresentative Image

சியோமி 13டி ப்ரோ அம்சங்கள்

இந்த ஸ்மார்ட்போன் பற்றிய சில விவரக்குறிப்புகள் மட்டுமே வெளியாகியுள்ளது. இது டைமன்சிட்டி 9200 பிளஸ் 4என்எம் சிப்செட் மூலம் இயங்கலாம். கேமரா ஆனது 50எம்பி Sony IMX707 மெயின் கேமரா கொண்டு வரலாம். முன்பக்கத்தில் 20எம்பி Sony IMX596 சென்சார் இருக்கலாம். 120W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவை வழங்கும் 5000mAh பேட்டரி இடம் பெறலாம். பெரும்பாலும் சியோமி 13டி ப்ரோ மாடல், வெண்ணிலா மாடலில் உள்ள அம்சங்களை கொண்டு வரலாம். இந்த மாடல் 12ஜிபி ரேம் + 512 ஜிபி ஸ்டோரேஜ் மற்றும் 16ஜிபி ரேம் + 1 டிபி ஸ்டோரேஜ் உள்ளிட்ட இரண்டு வேரியண்ட்டில் அறிமுகமாகிறது. இது ரூ.73,000/- மற்றும் ரூ.89,200/-க்கு விற்பனை ஆகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்