Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Google Outage Today 2022: கூகுளின் தற்காலிக செயலிழப்பு...உலகம் முடிவுக்கு வருவதாக...மக்கள் அச்சம்!

Priyanka Hochumin August 09, 2022 & 09:55 [IST]
Google Outage Today 2022: கூகுளின் தற்காலிக செயலிழப்பு...உலகம் முடிவுக்கு வருவதாக...மக்கள் அச்சம்!Representative Image.

Google Outage Today 2022: உலக மக்களின் அத்தியாவிசய தேவைகளும் மிகவும் முக்கியமான Google இன் பல சேவைகள் இன்று திடிரென்று செயலிழந்து போனதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் உலகத்தின் மூலை முடிகிள் உள்ள கோடிக்கணக்கான பயனர்கள் நிலைகுலைந்து போகினர். இதற்கான காரணம் என்ன? நிஜமாகவே சேவைகளில் கோளாறா? அல்லது வேறெதுவும் பிரச்சனையா என்று பார்க்கலாம் வாங்க.

எப்ப ஆரம்பிச்சது?

கூகுள் பயன்பாட்டில் இருந்த இத்தனை ஆண்டுகளில் இப்படி ஒரு சிக்கலை யாரும் கண்டிருக்க முடியாது. ஏனெனில் மக்களுக்கு எந்த ஒரு தடங்கலும் இன்றி அவர்கள் விரும்புவதை வழங்க அயலாது உழைத்துக் கொண்டிருக்கிறது கூகுள். இருப்பினும் இப்படி ஒரு நிலை ஏற்பட்டது அனைவர்க்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆகஸ்ட் 9, 2022 அன்று காலை 6.37 (IST) மணிக்கு இந்த பிரச்சனை ஆரம்பமாகியதாக கூறப்படுகிறது. சரி சிறிது நேரத்தில் இது சரியாகிவிடும் என்று பார்த்தால், இந்த பிரச்சனை குறையாமல் அதிகரிக்க ஆரம்பித்துள்ளது. காலை 7 மணிக்குள் இந்த பிரச்சனையை குறித்து கிட்டத்தட்ட 41,000 புகார்கள் வந்துள்ளது.

எந்தெந்த சேவைகளில் பிரச்சனை?

Alphabet Inc-க்கு சொந்தமான Google ஏகப்பட்ட சேவைகளை மக்களுக்கு வழங்கியுள்ளது. அவற்றுள் மக்கள் அதிகம் பயன்படுத்தும் சேவைகளான Google Maps, Google Photos, Google Drive, Google Duo, GMail மற்றும் YouTube போன்றவற்றுள் இந்த பிரச்சனை ஏற்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்த பிரச்சனையின் மொத்த விவரங்களை செயலிழப்பு கண்காணிப்பு இணையதளமான Downdetector.com என்பதில் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

யாருக்கு இந்த பிரச்சனை ஏற்பட்டது?

காலை நேரத்தில் அதிகப்படியான மக்கள் இந்த சேவைகளை பயன்படுத்தியிருக்க வாய்ப்புகள் இல்லை. இருப்பினும் இந்த பிரச்சனை அதிகப்படியாக யாரை பாதித்து இருக்கிறது என்றால் இந்தியா, ஆஸ்திரேலியா மற்றும் அமெரிக்கா ஆகியவையாகும். இந்த நாடுகளில் இருக்கும் பல பயனர்கள் எதிர்பார்த்த தேடல் முடிவுகளைக் (search results) காட்டிலும் இன்டெர்னல் சர்வர் எரர் (internal server error) என்று காட்டும் செய்தியை ஸ்கிரீன் ஷாட் எடுத்து ட்விட்டரில் வெளியிட்டனர்.

எப்பொழுது சரியானது இந்த பிரச்சனை?

என்ன தான் காலை 6.37 மணிக்கு இந்த சிக்கல் ஆரம்பித்தாலும் வெறும் 40 நிமிடங்களில் கூகுள் நிறுவனம் அதனை சரி செய்துவிட்டது. காலை 7.22 மணிக்கெல்லாம் கூகுளின் அனைத்து சேவைகளும் எப்பையும் போல செயல்பட ஆரம்பித்துள்ளது. இருப்பினும் இதற்கான காரணம் என்ன என்று நிறுவனம் இன்னும் வெளியிடவில்லை. மக்களோ அது எதனால் ஏற்பட்டுள்ளது என்று தெரிந்துகொள்ள ஆர்வமாக இருக்கின்றனர். இல்லை என்றால் அந்த 40 நிமிடங்களில் google இல்லாமல் அவர்கள் எந்த அளவிற்கு மன உளைச்சலுக்கு ஆளாக இருப்பதை ட்விட்டரில் வெளியிட்டு இருப்பார்கள். இதோ கூகுள் செயல்பாட்டில் சிக்கல் ஏற்பட்டுள்ளதால் மக்களின் மனநிலை எப்படியெல்லாம் இருக்கிறது என்று பாருங்கள்.

“Google is Down” இனி எப்படி எனக்கு பிடித்த நிகழ்ச்சிகளை பார்ப்பேன் மற்றும் பூனைகள் & எனது தலையில் திரென்று தோன்றும் விஷயங்களைப் பற்றி எப்படி நான் தெரிந்துகொள்வது என்று ட்வீட் போட்டுள்ளார்.

 

உலகம் முடிவுக்கு வருகிறதா? Google Down!

கூகுள் எப்படி செயலிழக்கிறது? இது பேரழிவு

இப்படி ஒரு 40 நிமிடம் காரணம் தெரியாமல் செயலிழந்த கூகுளால் உலகம் முடிவுக்கு வருகிறது என்று மக்கள் பீதி அடைகின்றனர். பார்க்கலாம் இந்த சம்பவத்தைப் பற்றி நிறுவனம் என்ன சொல்லப்போகிறது என்று.

Google outage today 2022, google outage, google outage now, google outage today, google outage map, google outage report, google outage twitter, google outage 2022, google outage Australia, google outage uk, google outage news, google cloud outage today, google maps outage today, google meet outage today, google down today.

உடனுக்குடன் செய்திகளை (Technology News) தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்