Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Tokenization of Cards RBI: கிரெடிட் அல்லது டெபிட் கார்டுகளின் தரவுகளை ஆடையப்போடுபவர்களுக்கு வச்சாங்க ஒரு ஆப்பு!

Priyanka Hochumin August 09, 2022 & 14:00 [IST]
Tokenization of Cards RBI: கிரெடிட் அல்லது டெபிட் கார்டுகளின் தரவுகளை ஆடையப்போடுபவர்களுக்கு வச்சாங்க ஒரு ஆப்பு!Representative Image.

Tokenization of Cards RBI: சம்பாதிக்கும் பணத்தை கையில் எடுத்து செலவு செய்யும் பொழுது தான் அதனின் அருமை தெரியும் என்று பெரியவர்கள் சொன்னது சரி தான். இருப்பினும் இந்த கொரோனா காலத்தில் சோசியல் டிஸ்டன்ஸ் அதாவது சமூக இடைவெளி விட்டு வாழும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இந்த மாறி சமயத்தில் கையில் பணத்தை எடுத்து செலவு செய்வது எவ்ளோ ஆபத்தாக முடியும் என்று நமக்குத் தெரியும்.

அதான் டிஜிட்டல் ஆகிடிச்சுள்ள...

இந்த மாறி சிரமமான காலத்தில் தான் டிஜிட்டல் முறையில் செய்யும் அனைத்து வேலைகளும் எவ்ளவோ பரவால்ல என்று தோன்றும். அதில் ஒரு முக்கிய பங்காக பணம் செலுத்தும் முறை பெரும் வளர்ச்சியை அடைந்துள்ளது. அதனின் விளைவு தான் டிஜிட்டல் பேமெண்ட், தற்போது நம் வாழ்வில் முக்கிய அங்கமாக மாறியுள்ளது. இதனால் லட்சக்கணக்கான வாடிக்கையாளர்கள் பயனடைந்துள்ளனர்.

இவ்ளோ பரிவர்த்தனையா?

உங்களுக்கு ஒன்று தெரியுமா? 2022 ஆம் ஆண்டில் மட்டும் சுமார் 7,422 கோடி டிஜிட்டல் பரிவர்த்தனை இந்தியாவில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனை பார்த்தவுடன் உங்களுக்கு தெரிந்திருக்கும் எந்த அளவிற்கு டிஜிட்டல் பேமெண்ட் பயன்படுத்தப்படுகிறது என்று. இது முந்தைய ஆண்டை விட 33 சதவீதம் அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகியது. 

பிளஸ் இருந்தாலும் மைனஸ் இருக்குல்ல...

எந்த ஒரு விஷயமாக இருந்தாலும் அதில் ஒரு சில குறைபாடுகள் இருக்கும் என்று நமக்குத் தெரியும். அதே போல் தான் டிஜிட்டல் பேமெண்ட்டின் பயன்பாடு சுலபமாக இருந்தாலும் கிரெடிட் அல்லது டெபிட் கார்டுகளின் தகவல் கசிவு போன்ற அச்சுறுத்தல் இருக்கிறது. எனவே, அடிக்கடி டிஜிட்டல் பேமெண்ட் முறையை பயன்படுத்துபவர்கள் தங்களின் டேட்டாக்களை பத்திரமாக வைத்திருப்பது மிகவும் அவசியம்.

அதுக்கு தான் இது!

இது போன்ற பிரச்சனைகளில் இருந்து வெளிவருவதற்காகவே உருவாக்கப்பட்டது தான் டோக்கனைசேஷன். அப்படி என்றால் என்ன? டோக்கனைசேஷன் என்பது கார்டில் உள்ள கார்டு ஹோல்டரின் ஒப்புதலுடன் 16 இலக்கு எண்ணுக்குப் பதிலாக கார்டு நெட்வொர்க் ஒரு டோக்கனை வழங்குகிறது. இது ஒவ்வொரு தனிப்பட்ட நபர்களுக்கு அதாவது கார்டு ஹோல்டருக்கும் தனிப்பட்டதாகும். இது முற்றிலும் பாதுகாப்பானது எப்படின்னா, அவர்கள் கொடுக்கப்படும் டோக்கன் நம்பர் உண்மையான கிரெடிட் அல்லது டெபிட் கார்டுகளின் தரவு இல்லை.

இதனைப் பயன்படுத்தி நீங்கள் ஒவ்வொரு முறை பரிவர்த்தனை செய்யும் பொழுதும் CVV மற்றும் OTP-க்களை குறிப்பிட்ட வேண்டும். இந்த புது வழிமுறையானது ரிசர்வ் வங்கியின் உத்தரவுக்கு இணங்க "கார்டு-ஆன்-ஃபைல்" டோக்கனைசேஷனை இயக்கியுள்ளதாக மாஸ்டர் கார்டு வலியுறுத்தியுள்ளது.   

Tokenization of Cards RBI, tokenization of cards in india, tokenization of cards axis bank, tokenization of cards icici bank, tokenization of cards hdfc bank, tokenization of cards news, what is tokenization in cards, tokenization of cards upsc, tokenization of cards rbi upsc, tokenization of credit cards, tokenization of cards rbi, tokenization in banking.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்