Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Vodafone Idea Latest News: VI-வெளியிட்ட பகீர் அறிவிப்பு…! மீண்டும் கட்டணத்தை உயர்த்துவதில் தயங்காது…. விஐ சிஇஓ தக்கர் அதிரடி….!

Gowthami Subramani June 01, 2022 & 17:30 [IST]
Vodafone Idea Latest News: VI-வெளியிட்ட பகீர் அறிவிப்பு…! மீண்டும் கட்டணத்தை உயர்த்துவதில் தயங்காது…. விஐ சிஇஓ தக்கர் அதிரடி….!Representative Image.

Vodafone Idea Latest News: தொலைத் தொடர்பு நிறுவனமாக விளங்கும் வோடாஃபோன், ஒரு நாளைக்கான சராசரி பயனர்கள் முந்தைய ஆண்டை விட அதிகரித்திருக்க வேண்டும் என அந்நிறுவனத்தின் சிஇஓ குறிப்பிட்டுள்ளார்.

வோடாஃபோன் ஐடியா CEO ஆன ரவீந்தர் தக்கர், ஒரு பயனருக்கான தொழில்துறை சராசரி வருவாய் (ARPU) குறைந்து வருவதைச் சுட்டிக் காட்டியுள்ளார். அவரின் கருத்துப் படி, 2016 ஆம் ஆண்டு ARPU ரூ. 200-205 ஆக இருந்த நிலையில், தற்போது, ரூ. 350-400 ஆக இருக்க வேண்டும். ஆனால், தற்போதைய சூழலில் மிகவும் குறைவாக உள்ளதைக் கூறியுள்ளார் (Vodafone Idea Latest News).

மேலும், வோடஃஃபோன் ஐடியா, கட்டணத்தை உயர்த்துவதற்கு தயங்காது என்றும் கூறியுள்ளார். தொலைத்தொடர்பில் வரக் கூடிய அடுத்த ஐந்து ஆண்டுகளில் தொழில்துறையினுடைய ARPU கணிசமாக உயரும் என நம்பப்படுகிறது (Vodafone Idea News).

இருந்தபோதிலும், கடந்த 2016 ஆம் ஆண்டை ஒப்பிடும் போது, தற்போது மிகக் குறைந்த அளவில் காணப்படுவதை எடுத்துக் கூறினார். தொலைத்தொடர்பு நிறுவனங்களில் முன்னிலை வகிக்கக் கூடிய ஜியோ தனது ARPU-வை ரூ. 178 மற்றும் ரூ. 168 ஆக உள்ளது (Jio Recharge Option). ஏர்டெல்லின் ARPU இலக்குகளில் அதே புள்ளி விவரங்களுடன் காணப்படுகிறது. இதனை முந்தியடிக்க வோடஃபோன் ஐடியா நிறுவனம் மிகக் குறுகிய காலத்தில் ரூ. 200 ஐ அடைய வேண்டும். அதன் பின்னர், ரூ. 250 ஐ அடைய வேண்டும் என்றும் கூறினார். அதனைத் தொடர்ந்து நீண்ட காலத்திற்கு ரூ. 300- ஆக மாற்றவும் விரும்புகிறது. இவ்வாறு படிப்படியாக முன்னேற விரும்புவதாக வோடாஃபோன் ஐடியா நிறுவன CEO தக்கர் அவர்கள் குறிப்பிட்டுள்ளார் (VI Recharge Price).

இன்றைய நிலவரப்படி, வோடாஃபோன் ஐடியா மிகக் குறைவாக அதாவது ரூ.124-ஐ ARPU ஆக வைத்துள்ளது. ஏர்டெல் நிறுவனத்துடன் ஒப்பிடும் போது இது மிகவும் பின் தங்கியுள்ளதைக் குறிப்பிடுகிறது (Airtel Recharge Options).

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.....


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்