Mon ,Sep 26, 2022

Exclusive

உங்க போனை பக்கத்தில் வைத்துக்கொண்டு தூங்கினால் என்ன விபரீதம் நடக்கும் தெரியுமா?

Priyanka Hochumin September 09, 2022 & 16:15 [IST]
Representative Image. Representative Image.

ஸ்மார்ட்போன் இல்லாத காலகட்டத்தில் ஏதேனும் தகவல்களை தெரிவிப்பதற்கு மட்டுமே பயன்படுத்தினார்கள். ஆனால் இந்த ஸ்மார்ட்போன் வந்தாலும் தான் வந்தது 24 மணியை நேரமும் அதை கைல வச்சிக்கிட்டே சுத்திட்டு இருக்காங்க. இது எந்த அளவிற்கு நம்முடைய உடலை பாதிக்கிறது என்று தெரியுமா? அது உங்களுள் நிறைய பேத்துக்கு நன்றாகவே தெரியும். இருப்பினும் அலட்சியத்தால் அதனை கண்டுகொள்ளாமல் விட்டுவிடுகின்றனர். இது காலப்போக்கில் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் என்று முதலில் தெரிந்துகொள்ளுங்கள்.


சரி இப்ப மேட்டருக்கு வருவோம். நீங்கள் ரொம்ப நேரம் போன் யூஸ் பண்றது அல்லது தூங்கும் போது போனை உங்களுக்கு பக்கத்தில் வைத்துக்கொண்டு தூங்கும் இனத்தை சேர்ந்தவர்களா? அப்ப இந்த பதிவு உங்களுக்கானது. ஏனெனில் அதனால் ஏற்படும் கோளாறுகளைப் பற்றி தான் இந்த பதிவு விளக்கமாக கூறப்போகிறது.


அது என்ன கதிர்கள்?

ஸ்மார்ட்போன் மட்டுமல்லாது அதுபோன்ற சாதனங்கள் RF என்ற ரேடியோ கதிர்கள் மூலம் இயங்குகின்றதாம். எனவே தான் நாம் ஸ்மார்ட்போன் பயன்படுத்தும் போது அந்த கதிர்கள் நம்மீது படுகிறது. அது நம்முடைய உடலில் இருக்கும் நல்ல ஆரோக்கியமான செல்களை அழிக்கும் வல்லமை கொண்டதாகத் திகழ்கிறது. இதற்காகத் தான் மொபைல் போன்களை சற்று தொலைவில் வைத்து பயன்படுத்த வேண்டும் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

இதனால் ஆண்களுக்கு என்ன பிரச்சனை?

ஆண்கள் ஜீன்ஸ் பேண்ட் மற்றும் சட்டை பாக்கெட்டில் ஸ்மார்ட்போனை வைத்துக்கொள்ளும் பழக்கம் கொண்டவர்களாக இருந்தால் உடனே மாற்றிவிடுங்கள். ஏனெனில் அது அவர்களுக்கு ஆண்மை கோளாறு மற்றும் மன அழுத்தத்தை ஏற்படுத்தும் என்று கண்டறியப்பட்டுள்ளது. இப்ப தெரியுதா இது எவ்ளோ சீரியஸ் மேட்டர் என்று. காரணம்! போனில் இருந்து வெளியாகும் கதிர்வீச்சுகள் உங்கள் உடலை தாக்குவதோடு, செல்களையும் கொஞ்சம் கொஞ்சமாக அழிக்கிறது. மேலும் அதனின் வெப்பம் அதிகரிப்பதால் ஆண்கள் தங்களின் பேண்ட் அல்லது சட்டையில் வைத்திருக்கும் போது அதனின் வெப்பம் உயிரணுக்களை பாதிக்கிறது.

அப்ப பெண்களுக்கு!

இதுவே பெண்களுக்கு என்றால், மார்பக புற்று நோய் உருவாவதற்கும் வழிவகுக்கிறதாம். மேலும் தூங்கும் போது போனை கட்டி அணைத்து அல்லது தலையணைக்கு அருகில் வைத்துக்கொண்டு தூங்கும் போது போனில் இருந்து வெப்பம் வெளியேற முடியாமல் ஓவர் ஹீட் ஆகிவிடும். இது அப்படியே தொடர்ந்தால் போன் சூடாகி தீ பற்றி எறிய ஆரம்பிக்கும். இன்னும் சிறிது நேரத்தில் போன் வெடித்து சிதறவும் வாய்ப்புள்ளது. இது எவ்ளோ பெரிய ஆபத்தை ஏற்படுத்தும் என்று இப்பொழுது உங்களுக்கு புரியும் என்று நம்புகிறோம்.

இதற்கு தீர்வு...

தற்போது ட்ரெண்டாக இருக்கும் ப்ளூடூத் சாதனங்களை பயன்படுத்துங்கள். அது உங்களை போனில் இருந்து சற்று தூரமாக வைத்திருக்க உதவும். அதே போல் நீண்ட நேர பயன்பாட்டை குறைத்து தேவைக்கு ஏற்ப பயன்படுத்த ஆரம்பியுங்கள். போனை நீங்கள் கட்டுப்படுத்துங்கள், போன் உங்களை கட்டுப்படுத்தும் அளவிற்கு அனுமதிக்காதீர்கள்.

Tag: Sleeping Next To Smartphone | Sleeping With Phone Near Head | Sleeping Next To Phone Cancer | How To Avoid Phone Radiation While Sleeping | Problems Faced While Sleeping Next To Smartphone | What Happens When You Place Your Smartphone Next To You | Keeping Mobile Near Head While Sleeping | Technology News Tamil | Latest Technology News. .


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

Related Posts