Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

ட்விட்டர், இன்ஸ்டகிராமைத் தொடர்ந்து தற்போது வாட்ஸ்அப்-லயும் இந்த சூப்பரான வசதி..! | Whatsapp Username Feature

Gowthami Subramani Updated:
ட்விட்டர், இன்ஸ்டகிராமைத் தொடர்ந்து தற்போது வாட்ஸ்அப்-லயும் இந்த சூப்பரான வசதி..! | Whatsapp Username FeatureRepresentative Image.

வாட்ஸ்அப் நிறுவனம் தங்களது பயனர்களுக்கு உதவும் வகையில், பல்வேறு விதமான அம்சங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. சமீப காலமாக, தொடர்ந்து அப்டேட்டுகளை வாட்ஸ்அப் நிறுவனம் வெளியிட்டு வருகிறது. அதன் படி, வாட்ஸ்அப்-ல் தனிப்பட்ட சேட்களை மட்டும் லாக் செய்யும் வசதி, செய்திகளை எடிட் செய்யும் வசதி போன்றவை அறிமுகப்படுத்தப்பட்டது. மேலும், தற்போது வாட்ஸ் அப் பயனர் பெயர் உருவாக்குவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

சேட்லாக் வசதி

இந்த வசதி மூலம், வாட்ஸ் அப் பயனர்கள் தங்களது தனிப்பட்ட சேட்களை லாக் செய்து கொள்ளலாம். இவ்வாறு லாக் செய்யப்படும் சேட் ஆனது, வாட்ஸ் அப் முகப்புப் பக்கத்தில் இருக்காது. இது பயனர்களுக்கு மிகவும் ஏற்ற வசதியாக இருக்கும் எனக் கூறப்படுகிறது.

வாட்ஸ்அப் எடிட் அம்சம்

இந்த வசதியானது, தவறாக மெசேஜ் செய்து விட்டால், அதனை அழிக்காமல், அந்த மெசேஜையே எடிட் செய்து கொள்ளும் வசதியாகும். ஆனால், இதற்கென ஒரு குறிப்பிட்ட நேரம் உண்டு. அதாவது, மெசேஜ் அனுப்பிய 15 நிமிடத்திற்குள் எடிட் செய்து விட வேண்டும். இல்லையெனில் அதற்கு மேல் எடிட் செய்ய முடியாது. இந்த வசதி பயனர்களுக்கு உதவியாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

வாட்ஸ்அப் பயனர் பெயர்

ட்விட்டர், இன்ஸ்டகிராம் போன்றவற்றில் பயனர்கள் தங்களுக்கென ஒரு User Name-ஐ Create செய்து கொள்ளலாம். அது போலவே, வாட்ஸ்அப்பிலும் தங்கள் கணக்குகளுக்கு தனிப்பட்ட பயனர் பெயர்களை வைட்த்துக் கொள்ளலாம்.

WhatsApp tracker WABetaInfo-ன் படி, இந்த வாட்ஸ்அப் பயனர் அம்சமானது வளர்ச்சியில் இருப்பதாகவும், இதனை App settings-ல் Access செய்ய முடியும் எனவும் எனக் கூறப்படுகிறது.

வாட்ஸ்அப்-ல் வர உள்ள இந்த அம்சம் எப்படி செயல்படும் என்பதைக் காணலாம்.

பயனர் பெயரைத் தேர்ந்தெடுக்கும் போது, வாட்ஸ்அப் பயனர்கள் தங்கள் கணக்கிற்கு ஒரு படி அதிகமான பாதுகாப்பைப் பெறுவார்கள். அதாவது, வாட்ஸ் அப்-ல் ஒருவரைத் தேடுவதற்கு அவர்களது தொலைபேசி எண்களை மட்டும் பயன்படுத்துவதற்குப் பதில், பயனர்களின் தனிப்பட்ட பயனர் பெயரைத் தேர்வு செய்து தேடிக்கொள்ளலாம் என WABetaInfo கூறியுள்ளது.

மேலும், இதில் அவர்களது தொலைபேசி எண்களைப் பயன்படுத்தாமல் பயனர் பெயர்களை Enter செய்து வாட்ஸ்அப்பில் இணைத்துக் கொள்ளலாம். இது விரைவில் பயன்பாட்டுக்கு வரும் என கூறப்படுகிறது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்