Fri ,Nov 08, 2024

சென்செக்ஸ் 79,486.32
-55.47sensex(-0.07%)
நிஃப்டி24,148.20
-51.15sensex(-0.21%)
USD
81.57
Exclusive

Youtube First Video: யூடியூப் ஆரம்பித்து 17 ஆண்டுகள் நிறைவு! முதலில் அப்லோட் செய்யப்பட்ட வீடியோ இது தானாம்!

Priyanka Hochumin June 14, 2022 & 16:00 [IST]
Youtube First Video: யூடியூப் ஆரம்பித்து 17 ஆண்டுகள் நிறைவு! முதலில் அப்லோட் செய்யப்பட்ட வீடியோ இது தானாம்!Representative Image.

Youtube First Video: மக்கள் அதிகம் பயன்படுத்தி வரும் சமூகவலைத்தளங்களில் ஒன்றான யூடியூப் தொடங்கி 17 ஆண்டுகள் நிறைவடைந்துவிட்டது. முதன் முதலில் யூடியூபில் வெளியான வீடியோ என்ன தெரியுமா?

பொதுவாகவே எல்லா விஷயங்களுக்கும் 'முதல் (First)' என்று ஒன்னு இருக்கும். அந்த வகையில் யூடியூப்பில் முதன் முதலில் அப்லோட் செய்யப்பட்ட வீடியோ எது? அதில் யார் இருந்தார்? என்ன பேசினார்? என்ற கேள்விகள் நிறைய இருக்குன்றன. அதற்கான விடையாக இந்த பதிவு இருக்கும் என்று நாங்கள் நம்புகிறோம்.

யூடியூப் ஆரம்பித்து

மக்களுக்கு வருவாய் ஈட்டித் தரும் யூடியூப் ஆரம்பித்து 17 ஆண்டுகள் நிறைவடைந்துவிட்டது. இந்த வலைத்தளம் 2005 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் சாட் ஹர்லி, ஸ்டீவ் சென் மற்றும் ஜவேக் க்ரீம் ஆகிய மூவரால் தொடங்கப்பட்டுள்ளது. ஜவேக் க்ரீம் என்பவர் தான் யூடியூப்பின் துணை நிறுவனர். இவர் பேசிய வீடியோ தான் முதன் முதலில் யூடியூப்பில் அப்லோட் செய்யப்பட்டது என்று அந்த வீடியோவை யூடியூப் நிறுவனம் தங்களின் அதிகாரபூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளனர்.

என்ன இருந்தது?

அந்த வீடியோ டியாகோ உயிரியல் பூங்காவில் எடுக்கப்பட்டது. அங்கு ஒரு பகுதியில் இரண்டு யானைகள் வேலிக்குள் இருக்கிறது, அதற்கு முன்பு நின்று ஜவேக் க்ரீம் பேசுகிறார். அவர் ' சரி, நாம் யானைகளுக்கு முன்னாள் நின்று இருக்கிறோம். அவர்கள் பற்றி கூற வேண்டும் என்றால், அவர்களுக்கு நிஜமாகவே மிக நீளமான தும்பிக்கைகள் உள்ளன. அது அவர்களுக்கு மிகவும் அருமையாக இருக்கிறது. இதற்கு சொல்ல வேண்டியது அவ்வளவு தான்' என்று அவர் யானைகள் குறித்து குறிப்பிடும் வீடியோ தான் யூடியூப்பில் முதன் முதலில் அப்லோட் செய்யப்பட்டது.

இன்ஸ்டாகிராம் ஹாஷ் டேக்

இது குறித்து இன்ஸ்டாகிராமில் #YouTubeFactsFest என்ற ஹாஷ் டேக்கில் இந்த வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. இதில் ஒரு முக்கியமான விஷயம் என்னவென்றால், யூடியூப்பின் துணை இயக்குனர் ஜவேக் க்ரீம் அவர்கள் சரிபார்க்கப்பட்ட (ப்ளூ டிக்) யூடியப் அக்கௌன்டில் அப்லோட் செய்யப்பட்டிருக்கும் ஒரே வீடியோ இதுதான். இந்த வீடியோ 1.8 லட்சத்திற்கும் அதிகமான பார்வையாளர்களை பெற்றுள்ளது.

கூகுள் செய்த செயல்

இப்பேற்பட்ட யூடியூப் நிறுவனத்தை 1.65 பில்லியன் டாலருக்கு கூகுள் நிறுவனம் வாங்கியது, அதுவும் யூடியூப் நிறுவனம் தொடங்கப்பட்டு ஒரே ஆண்டில். கிடைத்த தகவல் படி, 2020 ஆம் ஆண்டில் மட்டும் யூடியூப் நிறுவனம் 19.8 பில்லியன் டாலர் வருவாயை ஈட்டியது குறிப்பிடத்தக்கது. "யூடியூப் ஆட் சென்ஸ் சேவை" மூலம் மக்களுக்கு வருவாய் ஈட்டி தரும் யூடியூப் இவ்ளோ சம்பாதித்தலில் எந்த வித அதிர்ச்சியும் இல்லை.

Youtube First Video, Youtube First Video uploaded date, Youtube First Video description, Youtube First Video introduction, Youtube First Video in the world, Youtube First Video views, Youtube First Video title, youtube first ever video

உடனுக்குடன் செய்திகளை (Technology News) தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்