Sun ,May 19, 2024

சென்செக்ஸ் 74,005.94
88.91sensex(0.12%)
நிஃப்டி22,502.00
35.90sensex(0.16%)
USD
81.57
Exclusive

ஐயப்பன் ஆலய மஹா கும்பாபிஷேக விழா: நடிகை ரோஜா பங்கேற்பு

Baskarans Updated:
ஐயப்பன் ஆலய மஹா கும்பாபிஷேக விழா: நடிகை ரோஜா பங்கேற்புRepresentative Image.

செங்கல்பட்டு: சிங்கபெருமாள் கோயில் அருகே ஐயப்பன் ஆலய மஹா கும்பாபிஷேக விழாவில் நடிகையும், ஆந்திர மாநில அமைச்சருமான ரோஜா பங்கேறு சாமி தரிசனம் செய்தார்.

செங்கல்பட்டு மாவட்டம் சிங்கபெருமாள் கோயில் அருகே ஐயப்பன் ஆலய அஷ்டபந்தன கும்பாபிஷேகம் நடைபெற்றது. இந்த ஐயப்பசுவாமிக்கு ஶ்ரீ பால சாஸ்தா ஐயப்பன் என திருநாமம் சூட்டப்பட்டுள்ளது. இந்த கும்பாபிஷேக நிகழ்விற்கு  சிங்கபெருமாள் கோயில், திருக்கச்சூர், மறைமலைநகர் செங்கல்பட்டு மட்டுமல்லாது நீதிபதிகள், அரசியல் பிரபலங்கள்,
சென்னையில் இருந்து சினிமா நட்சத்திரங்கள் நடிகை நமீதா, பேபி அஞ்சு மற்றும்  சின்னத்திரை பிரபலங்கள் நடிகர் கமலேஷ் சின்னத்திரை இயக்குனரும் நடிகருமான திருச்செல்வம் மற்றும் முக்கியமான விஐபிகள் உள்பட இந்த வைபவத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் குடும்பம் குடும்பமாக கலந்து கொண்டு ஐயப்ப சுவாமியின் அருளை பெற்று சென்றனர்.

மேலும் விநாயகர் மற்றும் அம்மன் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டன. இந்த ஆலயம் ஸ்ரீபுதநாத சுவாமி பப்ளிக் சாரிடபிள் அறக்கட்டளையின் கீழ் பொதுமக்களின் ஆதரவோடு மிக சிறப்பாக நடைபெற்றது.  ஐயப்பனுக்கு கலசபூஜை நடத்தப்பட்டது. அதனை தொடர்ந்து சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்