Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Murugan Name Reason in Tamil: தமிழ் கடவுள் முருகனின் பெயர்க் காரணம் தெரியுமா!

Manoj Krishnamoorthi April 26, 2022 & 16:15 [IST]
Murugan Name Reason in Tamil: தமிழ் கடவுள் முருகனின் பெயர்க் காரணம் தெரியுமா!Representative Image.

கல்தோன்றி மண்தோன்றா காலத்து மூத்த மொழியான தமிழ்மொழியின் கடவுள் என்று அழைக்கப்படும் எம்பெருமான் முருகனின் பெயர்க் காரணம் மற்றும் தமிழ் கடவுளாகக் கருதும் காரணம் பற்றிய கதையை இந்த பதிவில் காண்போம்.  

முருகன் (Murugan Name Reason in Tamil)

கைலாச நாதன் மற்றும் அன்னை பார்வதி தேவியின் இளைய மைந்தனான கார்த்திகேயன், சர்வ உலகத்தின் அதிபதியான சிவனின் நெற்றிக்கண்ணிலிருந்து பிறந்தது அனைவரும் அறிந்த இதிகாசமாகும். 

ஈசனின் நெற்றிக்கண்ணில் இருந்து அவதரித்த கந்தன் தேவர்களின் படைத்தளபதி ஆகும், பன்னிரு கரங்களுடன் தன்னை நாடி வரும் பத்தர்களுக்கு அருளைப் பொழியும் ஆறுமுகம் தந்தைக்குப் பாடம் சொன்ன ஆசானும் ஆவார். அறுபடை வீடுகள் கொண்டு பக்தர்களுக்கு அருள்பாலிக்கும் முருகப் பெருமானுக்கு கார்த்திகை விரதம், சஷ்டி விரதம் கடைப்பிடிக்கப்படும். கந்தனின் முக்கியமான விஷேசம் தைப்பூசம், பங்குனி உத்திரம், வைகாசி விசாகம் ஆகும்.  

முருகன் பெயர்க் காரணம் (Murugan Name Reason in Tamil)

ஈசனின் நெற்றிக்கண்ணில் இருந்து ஆறுமுகனாகத் தோன்றிய கார்த்திகேயனின் அழகான தோற்றத்துக்கு முருகன் என்ற பெயர் வந்தது. ‘முருகு’ என்றால் அழகு, இளமை என்பது பொருளாகும்,இன்’ என்பதன் பொருள் இறைவன் ஆகும். இதுவே  முருகு+ இன்= முருகன் என்றானது.

மிகவும் அழகான தோற்றம் கொண்ட கந்தன் மக்கள் அனைவராலும் அன்போடு முருகன் என்று அழைக்கப்படுகிறார். தமிழ்மொழியின் வல்லின, மெல்லின, இடையின மெய் எழுத்துடன் சேரும் “உ” என்னும் உயிரெழுத்து முருகு (ம்+உ= மு, ர்+உ= ரு, க்+உ= கு) என்ற வார்த்தை உருவாக்குகிறது. இந்த வார்த்தையின் மகத்துவம் யாதனின் இச்சா சக்தி, கிரியா சக்தி, ஞான சக்தி ஆகிய மூன்று சக்திகளைக் குறிக்கும். 

விசாகம் நட்சத்திரத்தில் தோன்றிய முருகனுக்கு விசாகன் என்ற பெயரும் உண்டு.இதுபோல தமிழ் கடவுள் முருகனின் வேறுபெயர்களைப் பற்றி அறிய இங்கு க்ளிக் செய்யவும்.

முருகன் தமிழ் கடவுள் காரணம் (Murugan Tamil God Reason in Tamil)

சைவ சமயத்தில் பல கடவுள் இருந்தாலும், தமிழ் மொழி மீது மிகுந்த ஈடுபாடு கொண்ட முருகப்பெருமான் தமிழ் கடவுளாக கருதக் காரணம் யாதனின் ஔவையார், அகத்தியர் போன்ற புலவர்களால் புகழப்பட்டதே ஆகும். 

இதற்கு சான்றாக “முத்தமிழால் வைதாரையும் வாழவைப்பான் முருகன்” என்ற அருணகிரிநாதரின் சொல்லே ஆகும்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில்  Search Around  Web பக்கமான எங்களைப் பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்...

 

  

 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்