Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

சோபகிருது தமிழ் புத்தாண்டு 2023 பிறக்கும் நேரம்.. | Sobhakritu Tamil New Year Timings 2023

Nandhinipriya Ganeshan Updated:
சோபகிருது தமிழ் புத்தாண்டு 2023 பிறக்கும் நேரம்.. | Sobhakritu Tamil New Year Timings 2023Representative Image.

தமிழர் பாரம்பரியத்தில் தமிழ் புத்தாண்டிற்கு ஒரு தனிச்சிறப்பு உண்டு. ஒவ்வொரு வருடமும் தமிழ் வருடப்பிறப்பன்று சித்திரை கனி காண்பது மிகவும் விஷேசம். அதுமட்டுமல்லாமல், அன்றைய தினம் எந்த மங்கலகரமான செயல்களை செய்தாலும் அது மெம்மேலும் உயரும் என்பது தமிழர்களின் நம்பிக்கையாகும். அதேபோல், சித்திரை புத்தாண்டு அன்று அதிகாலையில் நேரமாக குளித்து புத்தாடை அணிந்து கோயிலுக்கு சென்று வழிபாடு செய்தும், பெரியவர்களிடம் இருந்து ஆசீர்வாதம் பெருவதும் வழக்கம். ஆனால், இவை அனைத்தும் செய்வதற்கு என்று ஒரு குறிப்பிட்ட நேரம் என்பது உண்டு. அவை என்ன என்பதை பார்க்கலாம்.

தமிழ் வருடப்பிறப்பு 2023:

இந்த வருடம் பிறக்கவிருக்கும் தமிழ் புத்தாண்டிற்கு 'சோபகிருது வருடம்' என்று பெயர். சமஸ்கிருதத்தில் சோபகிருது என்றால் மங்கலம் என்பது பொருள். அந்தவகையில், இந்தாண்டு மிகப்பெரிய நன்மைகளையும், சுப நிகழ்வுகளும் நடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

வருடம் பிறக்கும் நேரம்:

நிகழும் மங்கலகரமான சோபகிருது வருடம் உத்தராயண புண்ணிய கால வசந்த ருதுவில் பிருகு வாரமாகிய வெள்ளிக்கிழமையில் சித்திரை மாதம் 01-ம் தேதி (14.04.2023) கிருஷ்ணபட்சத்து நவமி திதியில் மேல்நோக்குள்ள திருவோண நட்சத்திரம் 2ஆம் பாதத்திலும் மகர ராசியில் சிம்மம் லக்னத்திலும், சுக்கிரன் ஓரையிலும் மந்தயோகத்திலும் சந்திர மகாதசையில் ராகு புத்தி, ராகு அந்தரத்தில் சோபகிருது வருஷமான தமிழ் புத்தாண்டு மதியம் 01.57 மணிக்கும், திருக்கணிதப் பஞ்சாங்கத்தின் படி மதியம் 02.59 மணிக்கும்,  வாக்கிய பஞ்சாங்கத்தின் படி மதியம் 02.03 மணிக்கும் பிறக்கிறது.

தமிழ் புத்தாண்டு வழிபாடு செய்ய நல்ல நேரம் எது?

நாளைய தினம் ஏப்ரல் 14 ஆம் தேதி காலை 10.30 மணி முதல் 12 மணி வரைக்கும் ராகும் காலம். எனவே, தமிழ் புத்தாண்டு சித்திரை கனி காணுதல் அல்லது புத்தாண்டு வழிபாடு செய்ய நினைப்பவர்கள் பிரம்ம முகூர்த்த வேளையில் வழிபாடு செய்துக் கொள்வது நல்லது. அப்படி செய்ய முடியாதவர்கள் காலை குளித்து முடித்துவிட்டு, காலை 6 மணி தொடங்கி 10.20 மணிக்குள் வழிபாட்டை செய்து முடித்துவிட வேண்டும்.

பகல் வேளையில் கடவுளுக்கு படையல் வைத்து வழிபாடு செய்யலாம். இதற்கு நல்ல நேரம் என்று பார்த்தால் பகல் 12.30 மணி தொடங்கி 2 மணி வரை உள்ளது. ஒருவேளை பகலில் வழிபாடு செய்ய முடியாவதர்கள் மாலை 6 மணிக்கு பின்னர் இரவு 8 மணி வரைக்கும் விளக்கேற்றி வழிபாடு செய்யலாம். குறிப்பாக நாளைய தினம் அரிசி, உப்பு, மஞ்சள், வெல்லம் இவற்றில் ஒன்றையாவது வாங்கி சாமி திருவுருபடத்திற்கு முன்னால் வைத்து வழிபாடு செய்யுங்கள்.

ஆடை நிறம்: 

அதேபோல், வெள்ளை நிற பட்டாடை, வெள்ளை கரையமைந்த ஆடைகளை அணிந்துக் கொள்வதும் நன்மை சேர்க்கும்.

அணியும் ஆபரணம்:

முத்து மற்றும் வைரம் பதிந்த ஆபரணங்களை அணிய வேண்டும்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்