Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

வீட்டில் வேகமாக கொத்தமல்லிச் செடி வளர்ப்பது எப்படி? அதுவும் மூன்றே நாள்களில்… இத மட்டும் பண்ணுங்க….

Gowthami Subramani August 22, 2022 & 16:50 [IST]
வீட்டில் வேகமாக கொத்தமல்லிச் செடி வளர்ப்பது எப்படி? அதுவும் மூன்றே நாள்களில்… இத மட்டும் பண்ணுங்க….Representative Image.

இன்றைய காலகட்டத்தில், வீட்டிலேயே செடிகளை வளர்த்து நன்கு பராமரித்து வளர்த்தி வருகின்றனர். வீடுதோறும் மாடித்தோட்டத்தை வைத்து, நாம் அன்றாட வாழ்வில் உபயோகிக்கக் கூடிய செடிகளை வைத்துள்ளனர். இந்த செடிகளுக்கான பராமரிப்பு பெரும் முக்கியத்துவம் வாய்ந்தது. அந்த வகையில், வீட்டில் கொத்தமல்லி செடிகளை வளர்க்கும் முறையினைப் பற்றி இந்தப் பதிவில் காண்போம். இந்த முறைகளைப் பயன்படுத்தி கொத்தமல்லி செடியை வளர்த்தால், மூன்றே நாள்களில் செடி நன்கு வளரும்.

கொத்தமல்லி செடியை வளர்க்கும் முறை

கொத்தமல்லி செடியை முளைக்க வைக்க கிட்டத்தட்ட 15 நாள்கள் வரை எடுத்துக் கொள்ளும் எனக் கூறப்படுகிறது. ஆனால், இந்த கீழ்க்கண்ட முறைகளைப் பயன்படுத்தி, வெறும் மூன்றே நாள்களில் கொத்தமல்லி முளைப்பைப் பெற முடியும். அந்த வழிமுறைகளைப் பற்றி இந்தப் பதிவில் காண்போம்.

  • முதலில் நல்ல தரமான கொத்தமல்லி விதையை எடுத்துக் கொள்ள வேண்டும்.
  • கொத்தமல்லி விதை முழுதான தோற்றத்தைக் கொண்டிருக்க வேண்டும். அப்படி இல்லாமல் பாதி கொத்தமல்லி போலத் தோற்றமளிக்கும் விதையை எடுத்துக் கொள்ளக் கூடாது.
  • இவ்வாறு இருக்கும் கொத்தமல்லி டேமேஜ் ஆனதாக இருக்கும். எனவே, முழுவதுமாக இல்லாத கொத்தமல்லி விதையை எடுத்துக் கொள்ளக் கூடாது.
  • இவ்வாறு முழு விதையுடன் கூடிய கொத்தமல்லியை எடுத்துக் கொள்ள வேண்டும்.
  • இந்த தரமான கொத்தமல்லி விதைகளை எடுத்துக் கொண்டால், அது இரண்டு விதைகளுடன் காணப்படும்.
  • இந்த விதைகளை அப்படியே போட்டு செடிகளை வளர்க்கலாம். ஆனால், இவ்வாறு செய்யும் போது கொத்தமல்லி முளைப்பதற்கு அதிக நேரம் எடுத்துக் கொள்ளும்.
  • அதே சமயம், இந்த கொத்தமல்லி விதைகளை,ஒரு துணியில் எடுத்துக் கொண்டு மூடி விட வேண்டும்.
  • அதன் பின்னர், கொத்தமல்லி விதைகளை சப்பாத்தி உருளைக் கட்டையால், தேய்க்கும் போது விதை இரண்டாகப் பிளவுறும்.
  • இதனை, தண்ணீரில் போட்டு 2-லிருந்து, 3 மணி நேரம் ஊற வைக்க வேண்டும்.
  • இதனைத் தொடர்ந்து, கொத்தமல்லி செடி வளர்ப்பதற்கு கரிம உரம் தேவைப்படுகிறது.
  • இதனை எடுத்துக் கொண்டு, இதில் ஊறவைத்த கொத்தமல்லி விதைகளைக் கலக்க வேண்டும்.
  • பின், அந்த விதைகளுடன் கூடிய உரத்தில் சிறிதளவு தண்ணீர் ஊற்ற வேண்டும். (ஈரப்பதத்திற்காக).
  • இவற்றை ஒரு காட்டன் துண்டு ஒன்றை எடுத்துக் கொண்டு அதில் அந்த உரத்தைப் போட்டு வைக்க வேண்டும்.
  • பின், அந்த துண்டை மூன்று நாள்கள் வரை வறண்டும் அல்லாமல், மிகவும் ஈரப்பதத்துடனும் அல்லாமல், மிதமான ஈரப்பதத்தில் வைக்க வேண்டும்.
  • 3 நாள்களுக்குப் பிறகு, அந்த துண்டில் முளைப்பு வந்திருப்பதைக் காணலாம்.
  • அதன் பிறகு, ஓட்டையுடன் கூடிய பக்கெட் ஒன்றை எடுத்துக் கொண்டு, அதில் அந்த கரிம உரத்தைப் போட வேண்டும்.
  • ஓட்டையுடன் கூடிய பக்கெட்டில், அதிக அளவிலான தண்ணீர் வெளியே வராது.
  • இவ்வாறு கரிம உரத்தைப் பக்கெட்டில் நிரப்பும் போது, மேலே 1 இன்ச் அளவிற்கு கேப் இருக்க வேண்டும்.
  • பிறகு, நாம் ஏற்கனவே துண்டில் போட்டு முளைக்க வைத்த கரிம உரத்தை இதன் மேல் போட வேண்டும்.
  • பின் இந்த முளைத்த கரிம உரத்திற்கு மேல், மிகவும் சிறிதளவிலான கரிம உரத்தை இட வேண்டும்.
  • அதற்கு மேல், மண் ஈரப்பதம் உள்ளவாறு இருக்குமாறு சிறிது தண்ணீர் விட வேண்டும். அதிக அளவு தண்ணீரை ஊற்றக்கூடாது.
  • அதன் பிறகு, சிறிது நாள்கள் கழித்து பார்க்கும் போது கொத்தமல்லி செடி அடர்ந்து வளர்ந்திருப்பதைக் காணலாம்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.....

How to Grow Koththamalli Plant | How to Grow Coriander Leaves at Home | How to Grow Coriander in 3 days | How to Grow Kothamalli Plant | How to Grow Kothamalli at Home | How to Make Plant Grow Bigger | How to Grow Coriander From Plant | How to Grow Dhaniya Plant | How to Grow Coriander at Home From Stem | How to Grow Coriander at Home From Seeds | How to Grow Coriander in Pots | How to Grow Coriander Indoors | How to Grow Coriander at Home Without Seeds | How to Grow Coriander in Water Bottle | How to Grow Coriander faster at Home | How to Grow Coriander in Water | How to Grow Coriander Leaf at Home | How to Grow Coriander at Home From Coriander Leaves | How to Grow Coriander From Leaves | How can We Grow Coriander at Home | How to Coriander Leaves at Home


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்