Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

ஈஸியாக, வேகமாக வீட்டில் கறிவேப்பிலை செடியை வளர்க்கும் முறை..!

Gowthami Subramani [IST]
ஈஸியாக, வேகமாக வீட்டில் கறிவேப்பிலை செடியை வளர்க்கும் முறை..!Representative Image.

மாசுபாடு காரணமாக, பெரும்பாலானோர் வீட்டிலேயே சமைப்பதற்குத் தேவையான செடிகளை வளர்த்து  உபயோகித்து வருகின்றனர். நம் வீட்டின் மாடித்தோட்டத்திலேயே ஏராளமான செடிகளை வளர்க்கலாம். இவை அனைத்துமே அவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். உணவுப் பொருள்களில் சத்து மிகுந்தவையாகக் கருதப்படுவது கறிவேப்பிலைச் செடி ஆகும். இதனை வீட்டிலேயே முறையாக வளர்த்தால் நல்ல சத்து மிகுந்த காய்கறிகளைப் பெறலாம்.

அந்த வகையில், கறிவேப்பிலைச் செடியை வீட்டில் எளிதாக வளர்க்கும் முறைகள் பற்றி இந்தப் பதிவில் காண்போம். கறிவேப்பிலை பொதுவாக எளிதாக கிடைக்கக் கூடியவையாக இருந்தாலும், வீட்டில் இல்லாத சமயத்தில் கடைக்குச் சென்று வாங்கி வர வேண்டிய நிலைமை உண்டு. ஒரு சில நேரம் கறிவேப்பிலை கிடைக்காமல் போவதற்கான வாய்ப்பும் உள்ளது. இதனால், வீட்டுத் தோட்டத்திலேயே கறிவேப்பிலைச் செடியை வளர்க்கும் முறைகளைப் பற்றி காணலாம்.

கறிவேப்பிலை வளர்க்கும் முறைகள்

கறிவேப்பிலை பொதுவாக மூன்று முறைகளில் வளர்க்கப்படுகிறது.

  • விதை
  • கட்டிங்க்ஸ்
  • நாற்று

கறிவேப்பிலை செடி வளர்க்கு முறை

கறிவேப்பிலை விதைகள் பொதுவாக பெரிய மரங்களில் காய்க்கும்.

இவ்வாறு காய்க்கும் போது, முதலில் பச்சை நிறத்தில் காய்ந்து, நாளடைவில் கருஞ்சிவப்பு நிறமாக மாறிவிடும்.

விதையை உறித்துப் போடலாமா என்ற சந்தேகம் அனைவரும் எழும். விதை விதைக்கும் போது அப்படியே உறிக்காமல் போடலாம். ஆனால், இதன் மூலம் செடி வளர்வதற்கு சிறிது காலம் எடுத்துக்கொள்ளும்.

விதைகள் வெடித்து வரும் போது, அது புதிய புதிய செடிகளைத் தரும்.

கன்னு –ஆக வேண்டும் என்றாலும், கறிவேப்பிலை செடியை வேரோடு எடுத்து மண்ணில் வைப்பதன் மூலம் வளர்த்தலாம்.

குச்சி வைத்து வளர்த்தல் என்பது கறிவேப்பிலை குச்சியை நட்டு வைப்பதன் மூலம் வளர்த்துவதாகும்.

இந்த முறையில், செடி வளர்ப்பதற்கு வைக்கப்படும் குச்சி மொத்தமாக இருக்க வேண்டும். பெரிய குச்சியாகவும், மொத்தகமாகவும் எடுத்து வைத்தால் மட்டுமே கறிவேப்பிலை செடி வளரும். குச்சி கண்டிப்பாக மெலிதாக இருக்கக் கூடாது.

இவ்வாறு மொத்தக் குச்சியை எடுத்துக் கொண்டு, அதன் ஒரு முனையில் சிறிது Cross ஆக வெட்டிக் கொள்ள வேண்டும்.

அந்தப் பகுதியை கற்றாழையின் ஜெல்லில் விட்டு எடுக்க வேண்டும் அல்லது மஞ்சள் தூளில் டிப் செய்து கொள்ளலாம்.

இவ்வாறு டிப் செய்த பிறகு, அதைத் தொட்டியில் மண் போட்டு வைத்து அதில் வளர்க்கலாம்.

இதில் வளர்த்தும் போது, செடியினை மிதமான வெப்பநிலையில் வைத்து வளர்க்கலாம்.

கறிவேப்பிலைச் செடியை வேகமாக வளர்க்கும் முறை

  • கறிவேப்பிலைச் செடி பொதுவாக பனிக்காலத்தில், முழுமையாக வளர்ச்சி முறையை நிறுத்திக் கொள்ளும்.
  • அதாவது அக்டோபர் மாதம் முதல் ஜனவரி மாதம் வரையிலுமே இந்த செடி அப்படியே இருக்கும். இந்த காலத்தில், செடி வளர்ச்சியும் ஆகாமல், காய்ந்தும் போகாமல் இருக்கும்.
  • வெயில் நன்றாக அடித்த பிறகு, வேகமாக கறிவேப்பிலைச் செடி வளர்ந்து விடும்.
  • செடியின் வளர்ச்சியை வேகப்படுத்த, செடியின் கீழ்ப்பகுதியில் உள்ள சிறு இலைகளை எடுத்து விடலாம். இதன் மூலம், கீழே இருந்து பெறக்கூடிய சத்துக்கள் செடியின் மேற்புறத்திற்கு வேகமாக சென்று செடியை நன்றாக வளர விடும்.
  • செடிகள் குட்டையாக இருக்கும் போது, இலைகளும் சிறியதாக இருக்கும். செடி வளர வளர அதன் இலைகளும் பெரிதாகும்.
  • அதே போல, விதைகள் போடும் போது, ஒரு இடத்தில் மட்டும் வைக்காமல், சுற்றி பரவலாக விதைப்பது நல்லது. இவ்வாறு விதைப்பதன் மூலம், விதை பரவியுள்ள இடங்களில் எல்லாம் செடி வளரும்.
  • குறிப்பாக, விதை போடும் போது, அது மரத்திலேயே நன்றாக பழுத்திருக்க வேண்டும். அப்போது தான் அந்த விதை செடிகளுக்கு நல்ல வளர்ச்சியைக் கொடுக்கும்.
  • இது போன்ற எளிமையான முறையில் நம் வீட்டிலேயே கறிவேப்பிலைச் செடியை வேகமான வளர்ச்சியுடன் வளர்க்கலாம்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.....

How to Grow Curry Leaves Plant from Stem | How to Grow Curry Leaves at home Without Seeds | How to Grow Kadi Patta Without Seeds | How to Grow Curry Leaves faster | my Curry leaf Plant not Growing | Curry Leaves Plant at home vastu | How to Grow Curry Leaves from Stem in water | Curry leaf Plant near me | How to Grow Curry Leaves Plant at home in uk | How to Grow Curry Leaves Plant at home in tamil | How Can We Grow Curry Leaves at home | Is It Good to Grow Curry Leaves at home | Can you Grow your own Curry Leaves | Curry Leaves Plant Growing tips | Can We Grow Curry Leaves at home as per vastu | Can I Grow Curry Leaves at home | How to make Curry leaf Plant Grow faster | Can We keep Curry Leaves Plant at home | How to make Curry leaf Plant Grow


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்