Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

நெல்லை அரிசியாக மாற்றுதல்..! விவசாயிகளுக்கு பலன் அளிக்கும் சிறிய இயந்திரம்..!

Gowthami Subramani [IST]
நெல்லை அரிசியாக மாற்றுதல்..! விவசாயிகளுக்கு பலன் அளிக்கும் சிறிய இயந்திரம்..!Representative Image.

விவசாயிகளுக்கு உதவும் வகையில், பல்வேறு வகையான நலத்திட்டங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. மேலும், விவசாயத் துறையில் பயன்படுத்தப்படும் இயந்திரங்களும் மலிவான விலையிலும், சலுகை முறையிலும் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், நெல்லில் இருந்து அரிசியாக மாற்றக் கூடிய இயந்திரம் ஒன்று பயன்படுத்தப்படுகிறது. இது விவசாயிகளுக்கு பெரிதும் பயனுள்ளதாக அமைவதாகக் கூறப்படுகிறது.

நெல்லை அரிசியாக மாற்றும் இயந்திரம்

விவசாயிகளுக்குப் பெரிதும் பயனுள்ளதாக அமையும், திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் உள்ள வீரநாராயணபுரம் பகுதியைச் சேர்ந்த விவசாயி கே.பி.சின்னி பிரசன்னா இந்த இயந்திரம் குறித்து விளக்கியுள்ளார். இவர் கணினி பட்டதாரி என்பது குறிப்பிடத்தக்கது.

நெல்லை சேதம் எதுவும் இல்லாமல், அரிசியாக மாற்றுவது என்பது பல்வேறு விவசாயிகளுக்குப் பெரும் சவாலாக அமைந்துள்ளது. நெல் விற்பனையை விட நெல்லை அரிசியாக மாற்றி விற்பனை செய்தால் மட்டுமே நல்ல வருமானத்தை ஈட்ட முடியும் எனக் கூறியுள்ளார்.

வருவாய் இழப்பு

ஆனால், நெல்லை அரிசியாக மாற்றுவதில் பெரும்பாலான விவசாயிகள் இழப்பைச் சந்திக்கின்றனர். இவ்வாறு, நெல்லை அரிசியாக மாற்றும் போதும், இருப்பு வைக்கும் போதும், அவர்களுக்கு வருவாய் இழப்பு ஏற்படுகிறது. அதாவது ஆலையில் நெல் அரைக்கும் போது, பதமாக இல்லை என்றால் நொய்யாகி விடும். இதனால், அதனை அரைத்து வீட்டில் வைத்து விற்பதற்குள்ளாயே பூச்சிகள் வந்து விடும் நிலை ஏற்படும்.

இதனைத் தவிர்க்கவே, சந்தை விற்பனைக்கு ஏற்றவாறு 2, 3 நெல் மூட்டைகளை விவசாயிகள் எடுத்துச் சென்று அரைத்து, அரிசியாக மாற்றுவர்.

குறைந்த விலையில்

மேலும், சில அரிசி உரிமையாளர்கள் கூடுதல் நெல் மூட்டைகளை வைத்திருக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. விவசாயிகளின் தேவைக்கேற்ப சிறிய இரக இயந்திரங்களை வாங்கி, நெல்லை அரைத்து அரிசியை மாற்றிக் கொள்ளலாம். அது மட்டுமல்லாமல், இந்த இயந்திரங்களைப் பயன்படுத்தி குறைந்த விலையில் நெல் அரைத்து, அரிசியாகக் கொடுக்கப்படுகிறது என்றும் கூறப்படுகிறது.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.....

Paddy to Rice Conversion Machine | 100 kg Paddy to Rice | Paddy to Rice Conversion Ratio | Paddy to Rice Conversion Ratio in India | Rice Processing Machine | Rice Processing Steps PDF | Paddy Processing Flow Chart | Paddy to Rice Conversion Ratio | Paddy to Rice Conversion Ratio in India | Rice Processing Plant


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்