Fri ,May 17, 2024

சென்செக்ஸ் 73,917.03
253.31sensex(0.34%)
நிஃப்டி22,466.10
62.25sensex(0.28%)
USD
81.57
Exclusive

மாடித்தோட்டம் டிப்ஸ்: விதையிலிருந்து முலாம் பழம் செடி வளர்ப்பது எப்படி? | How to Grow Muskmelon from Seed in Tamil

Nandhinipriya Ganeshan Updated:
மாடித்தோட்டம் டிப்ஸ்: விதையிலிருந்து முலாம் பழம் செடி வளர்ப்பது எப்படி? | How to Grow Muskmelon from Seed in TamilRepresentative Image.

கோடைக்காலம் வந்துவிட்டாலே நாம் முதலில் தேடிவடுவது நீர்ச்சத்து அதிகமாக உள்ள பழங்களை தாங்க. அதிலும் தர்பூசணிக்கு அடுத்து கோடைக்காலங்களில் அதிகம் விரும்பி சாப்பிடும் பழங்களில் ஒன்று முலாம் பழம். இதை கிர்ணி பழம் என்று சொல்வார்கள். இந்த பழத்தில் 60% நீர்ச்சத்து நிறைந்துள்ளது. இந்த பழத்தை நம் வீட்டிலேயே எளிமையான முறையில் வளர்க்க முடியும். இதற்காக, அதிக நாட்களும் தேவையில்லை. சரி வாங்க நீர்ச்சத்து நிறைந்த முலாம் பழம் செடியை விதையிலிருந்து வளர்ப்பது எப்பது என்று விரிவாக பார்க்கலாம்.

முலாம் பழம் ஒரு கொடி வகையை சேர்ந்த ஒரு தாவரம். மற்ற கொடிவகை தாவரங்களுக்கு பந்தல் அமைக்க வேண்டியது அவசியம். ஆனால், இந்த முலாம் பழம் கொடியை வளர்க்க பந்தல் அமைக்க வேண்டிய அவசியம் இல்லை. வெறும் மூன்றே மாதத்தில் [45 - 90 நாட்கள்] அறுவடைக்கு வரக்கூடிய பழம். எனவே, கோடைக்காலம் வருவதற்கு ஒரு 3-4 மாதங்களுக்கு முன்பாகவே விதையை விதைத்துவிட வேண்டும். 

மாடித்தோட்டம் டிப்ஸ்: விதையிலிருந்து முலாம் பழம் செடி வளர்ப்பது எப்படி? | How to Grow Muskmelon from Seed in TamilRepresentative Image

விதையிலிருந்து முலாம் பழம் வளர்ப்பது எப்படி?

முதலில் ஒரு கணிந்த முலாம் பழத்தை கடையில் வாங்கி; அதை வெட்டி அதிலிருந்து அனைத்து விதைகளையும் எடுத்துக்கொள்ள வேண்டும்.

பின்னர், அந்த விதைகளை நிழலில் உலர்த்திக் கொள்ள வேண்டும். இந்த விதைகளில் ஒருசில விதைகள் முளைக்கும் தன்மையற்றதாக (பதர்) இருக்கும். 

அதை எப்படி கண்டுபிடிக்க வேண்டுமென்றால், ஒரு பாத்திரத்தில் தண்ணீரில் எடுத்துக்கொண்டு அதில் நாம் காயவைத்து எடுத்த விதைகளை சிறிது நேரம் ஊறவைத்துவிடுங்கள். 

முளைக்கும் தன்மையற்ற விதைகள் மட்டும் தண்ணீருக்கு மேலே மிதந்துக்கொண்டிருக்கும். அதைமட்டும் நீக்கிவிட்டு அடியில் மூழ்கியிருக்கும் விதைகளை மட்டும் எடுத்துக் கொள்ளுங்கள்.

மாடித்தோட்டம் டிப்ஸ்: விதையிலிருந்து முலாம் பழம் செடி வளர்ப்பது எப்படி? | How to Grow Muskmelon from Seed in TamilRepresentative Image

மாடித்தோட்டத்தில் வளர்ப்பு:

மாடித்தோட்டத்தில் வளர்ப்பதாக இருந்தாக ஒரு 2-3 விதைகளை மட்டும் விதைத்தால் போதுமானது. அதற்கு முதலில் நாம் தரமான மண் தயார் செய்ய வேண்டும்.

ஒரு அகலமான பெரிய பிளாஸ்டிக் டப்பாவில் செம்மண் மற்றும் காய்ந்த சாணம் இரண்டையும் நன்றாக கலந்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி கலந்துக் கொள்ள வேண்டும்.

அதிகமாக தண்ணீர் ஊற்ற கூடாது; ஏனென்றால் விதை அழுகிப்போக வாய்ப்புள்ளது. எனவே, லேசாக தண்ணீர் மட்டும் விட்டு கலந்துக் கொள்ள வேண்டும். மண் தயார்.

இப்போது 2-3 விதைகளை மட்டும் எடுத்து அந்த மண்ணில் 1/4 இன்ச் அளவிற்கு மண்ணில் நட்டு வைத்துக் கொள்ள வேண்டும். 

பின்னர், தினமும் இரண்டு வேளையும் சிறிதளவு தண்ணீர் தெளித்துவிட வேண்டும். தண்ணீர் ஊற்ற கூடாது. இப்படி தொடர்ந்து தண்ணீர் தெளித்து வந்தால் 8-12 நாட்களில் செடி முளைக்க தொடங்கிவிடும். 

1 மாதத்திற்கு பிறகு வாரத்திற்கு ஒருமுறை சிறிதளவு உரம் போட்டுக்கொண்டே இருக்க வேண்டும். அதற்காக கடையில் சென்று வாங்க வேண்டிய அவசியம் இல்லை.

காய்ந்த சாணம், காய்ந்த வெங்காய தோல் இரண்டையும் கலந்து தூவிவிட்டாலே போதும். 1 மாதத்திற்கு பிறகு செடியின் அளவிற்குகேற்ப தண்ணீர் விட வேண்டும்.

இப்படி தொடர்ந்து பராமரித்து வந்தால் 45 - 90 நாட்களுக்குள் அறுவடைக்கு தயார் ஆகிவிடும்.

மாடித்தோட்டம் டிப்ஸ்: விதையிலிருந்து முலாம் பழம் செடி வளர்ப்பது எப்படி? | How to Grow Muskmelon from Seed in TamilRepresentative Image

முலாம் பழம் தோட்டம்:

ஒருவேளை உங்க வீட்டிற்கு அருகில் செடி வைக்கின்ற அளவிற்கு இடம் இருந்தால் முலாம் பழம் நாற்று நட்டு அதை எடுத்து வைத்துக்கொள்ளலாம்.

மேலே கூறியது போலவே மண் தயார் செய்து இரண்டு இரண்டு விதைகளாக நட்டு 1/4 இன்ச் அளவிற்கு 2 இன்ச் இடைவெளிவிட்டு மண்ணில் நட்டு வைத்துக் கொள்ள வேண்டும். 

பின்னர், அவற்றிற்கு இரண்டு வேளையும் மறக்காமல் தண்ணீர் தெளிக்க வேண்டும்.

10 - 12 நாட்கள் கழித்து செடி முளைக்க ஆரம்பித்துவிடும். முதலில் மண்ணை பதப்படுத்திக் கொள்ள வேண்டும். காய்ந்த சாணம், காய்ந்த வெங்காய தோல் ஆகியவற்றை தூவி தண்ணீர் தெளித்து தயார் செய்துக்கொள்ள வேண்டும். 

அதன்பிறகு, நாற்றை பிடுங்கி அதில் வைத்து மறக்காமல் இரண்டு வேளையும் தண்ணீர் தெளிக்க வேண்டும். வாரத்திற்கு ஒருமுறை உரம் தூவ வேண்டும்.

இதை முறையாக கடைப்பிடித்தால், கொத்துக்கொத்தாக முலாம் பழம் காய்க்கும். 

மாடித்தோட்டம் டிப்ஸ்: விதையிலிருந்து முலாம் பழம் செடி வளர்ப்பது எப்படி? | How to Grow Muskmelon from Seed in TamilRepresentative Image

பூக்கள் உதிராமல் இருக்க டிப்ஸ்..

சில சமயங்களில் கொடியில் மலரும் பூக்கள் (கிட்டத்தட்ட 47 நாட்களில்) உதிர்ந்துக் கொண்டே அந்த சமயத்தில் காய்ந்த இலைகளை எரித்து அந்த சாம்பலை கொடியின் மீது தூவிவிடலாம். இப்படி செய்வதன் மூலம் பூ உதிராமல், காய்விட ஆரம்பிக்கும். 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்