Tue ,Apr 16, 2024

சென்செக்ஸ் 72,943.68
-456.10sensex(-0.62%)
நிஃப்டி22,147.90
-124.60sensex(-0.56%)
USD
81.57
Exclusive

வீட்டிலேயே தர்பூசணி வளர்க்கணுமா.? இப்படி பண்ணுங்க..!| How to Grow Watermelon at Home

Gowthami Subramani Updated:
வீட்டிலேயே தர்பூசணி வளர்க்கணுமா.? இப்படி பண்ணுங்க..!| How to Grow Watermelon at HomeRepresentative Image.

தர்பூசணி அனைவராலும் விரும்பப்படும் உணவுப் பொருள்களில் ஒன்றாகும். இந்தியாவில், இதன் உற்பத்தி சுமார் 300 ஆண்டுகளுக்கு முன்னதாகவே துவங்கியது. வெயில் காலங்களில் தர்பூசணி பழம் அனைவருக்கும் மிகவும் பிடித்தவையாகவும், உடல் உஷ்ணத்தைக் குறைக்கக் கூடியவையாகவும் இருக்கும். வெயில் காலம் வந்து விட்டாலே, தர்பூசணிக்கு மக்கள் தேடி அலைவர். வாட்டி வதக்கும் வெயிலில், தர்பூசணி சாப்பிட வெளியே எங்கும் செல்ல வேண்டும். வீட்டிலேயே தர்பூசணியை எப்படி வளர்க்கலாம் என்பதைப் பற்றி இதில் காணலாம்.

வீட்டிலேயே தர்பூசணி வளர்க்கணுமா.? இப்படி பண்ணுங்க..!| How to Grow Watermelon at HomeRepresentative Image

தர்பூசணி பயிரிடும் முறை

முதலில், தர்பூசணியை பயிரிடுவதற்கு முன்னர், அதற்காக தேர்வு செய்யப்பட்ட நிலத்தை நன்றாக உழுது சமன் செய்து கொள்ள வேண்டும்.

பிறகு நான்கு அடி இடைவெளிகளில் 1 அடி ஆழம், 1 அடி நீளம், 1 அடி அகலம் உடைய குழிகளைத் தோண்டி வைத்துக் கொள்ளலாம்.

இவ்வாறு பரித்த குழிகள் ஒவ்வொன்றிலும் 1 கிலோ ஆடு உரம், 2 கிலோ மண்புழு உரம் மற்றும் ¼ கிலோ வெப்பம் புண்ணாக்கு போட்டு அதன் மேல் மண்ணை கிளறி விட்டு குழியை மூடிக் கொள்ள வேண்டும்.

இவ்வாறு, ஒரு நாள் விட்டு ஒரு நாள் என 10 நாள்கள் வரை தண்ணீர் தெளிக்க வேண்டும்.

வீட்டிலேயே தர்பூசணி வளர்க்கணுமா.? இப்படி பண்ணுங்க..!| How to Grow Watermelon at HomeRepresentative Image

தயார் செய்யப்பட்ட குழிகளில், பத்து நாள்கள் தேர்வு செய்யப்பட்ட விதைகளை குழிக்குள் நான்கு விதைகள் வீதம் நட வேண்டும்.

அதன் படி, 500 கிராம் விதைகளை ஒரு ஏக்கர் நிலத்திற்கு வீதம் பயன்படுத்தலாம்.

பிறகு, 1 வாரம் கழித்து, நட்டு வைத்த நான்கு விதைகளில் நன்றாக வளர்ந்த செடிகளை மட்டும் விட்டு விட்டு மீதி செடிகளை நீக்கி விட வேண்டும்.

இது நீர் தாவரமாக இருப்பதால், வாரம் ஒரு முறை நீர் பாய்ச்சினால் போதுமானது.

வீட்டிலேயே தர்பூசணி வளர்க்கணுமா.? இப்படி பண்ணுங்க..!| How to Grow Watermelon at HomeRepresentative Image

இந்த செடி வளர்ப்பில் இரண்டு வாரம் கழித்து அதன் தேவையற்ற களைகளை நீக்கி விட வேண்டும். அதன் பின், செடியின் வளர்ச்சிக்கு ஏற்றவாறு அவற்றை நீக்க வேண்டும்.

இவ்வாறு மாதம் ஒரு முறை, குழி ஒன்றிற்கும் தேவையான அளவு தொழு மற்றும் ஆட்டு உரங்களை இட்டு நீர் பாய்ச்ச வேண்டும். இவ்வாறு நன்கு இயற்கை உரங்களை இட்டு, களைகளை நீக்கி பராமரிக்கும் போதே விளைச்சல் நன்றாக வரும்.

இந்த விளைச்சலானது, ஏக்கர் ஒன்றிற்கு சராசரியாக 15 டன் பழங்களை அறுவடை செய்ய முடியும்.

இவ்வாறு தர்பூசணி செடியை வீட்டிலேயே இயற்கையாகவே வளர்க்கலாம்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்