Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Soilless Farming in Low Cost: மண் இல்லாம விவசாயம் செய்ய முடியுமா..? அதுவும் இவ்வளவு விலை கம்மியா..!

Gowthami Subramani May 11, 2022 & 23:00 [IST]
Soilless Farming in Low Cost: மண் இல்லாம விவசாயம் செய்ய முடியுமா..? அதுவும் இவ்வளவு விலை கம்மியா..!Representative Image.

Soilless Farming in Low Cost: ஒவ்வொரு துறையிலும் அதன் செயல்களை மேலோங்க வைக்க தொழில்நுட்பம் பெரிதும் உதவுகிறது. அதே போல, விவசாயத்தையும் முன்னேற்றப் பாதையில் எடுத்துச் செல்ல பல்வேறு தொழில்நுட்பங்கள் உருவாக்கப்பட்டுள்ளது. அது மட்டுமல்லாமல், குறைந்த விலையில் அதிக அளவிலான மகசூலைப் பெறுவதற்கான வழிமுறைகளும் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வருகின்றன. விவசாயத்தில் மகசூலை அதிகரிப்பதற்கான நுட்பங்கள் பற்றியும் பயிற்சிகள் வழங்கப்படுகின்றன. பல விவசாயிகள் இந்த முறையைக் கொண்டு பலனடைவது மட்டுமல்லாமல், செயற்கை உரங்களைத் தவிர்த்து, இயற்கை உரங்களைக் கையாள முயல்கின்றனர்.

தொழில்நுட்பம் உயர்ந்து கொண்டு வரும் நிலையில், விவசாயம் செய்வதற்கு மண்ணைப் பயன்படுத்தாமல் தண்ணீரை மட்டுமே பயன்படுத்தும் முறியயான ஹைட்ரோபோனிக்ஸ் முறை வரவேற்கப்பட்டுள்ளது. இதன் மூலம், நிலமில்லாமல் விவசாயம் செய்ய நினைப்பவர்கள் மிகுந்த பலன்களைப் பெறுவர்.

மண்ணைப் பயன்படுத்தாமல் விவசாயம்

காற்றில் உள்ள ஈரப்பதத்தின் மூலமாகவோ அல்லது தண்ணீர் மூலமாகவோ உணவுப் பொருள்களை விளையச் செய்வது ஹைட்ரோ போனிக்ஸ் ஆகும். அதாவது, ஹைட்ரோபோனிக்ஸ் என்பது மண்ணைப் பயன்படுத்தாமல் சாகுபடி செய்யும் முறையாகும்.

இந்த முறையின் மூலம், வளரக்கூடிய பயிர்களின் நீர்த் தேவையை 70% வரை குறைக்கலாம். அது மட்டுமல்லாமல், நிலம் மற்றும் மண் தேவையையும் குறைக்கலாம். மேலும், இதில் செங்குத்து அல்லது பல்லடுக்கு என்ற பண்ணை முறை உபயோகிக்கப்படுகிறது. இதனால், காய்கறி உற்பத்தியை 10 மடங்கு அதிகரிக்கச் செய்யலாம்.

செங்குத்து பண்ணைய முறை

மலையோர நகரங்கள், பாலைவனங்கள், மற்றும் பெரு நகரங்களில் பல தரப்பட்ட காய்கறிகளை விளைவிப்பதற்கு இந்த முறை பெருமளவு கைகொடுக்கிறது. இதன் மூலம், இயற்கை வளங்களை பாதுகாக்க முடியும் மற்றும் நிலப் பயன்பாட்டினை அதிகரிக்கச் செய்யவும் முடியும். இவ்வாறு, நுகர்வும், உணவு உற்பத்தியும் ஒரே இடத்தில் நிகழ்வதால் இந்த எளிதான விவசாய தொழில்நுட்ப முறை பயன்படுத்தப்படுகீறது.

ஹைட்ரோபோனிக்ஸின் மூலம் விவசாயம் செய்வதற்குக் குறைந்த அளவிலான செலவு ஆகிறது. இருந்த போதிலும், மகசூல் அதிக அளவிற்குக் கிடைப்பதால் மண்ணில்லா விவசாய முறைக்கான வரவேற்பு அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இந்த முறை பெரும்பாலும் விவசாயம் செய்ய நினைக்கும் நிலம் இல்லாதவர்களுக்குப் பயனுள்ளதாக அமைகிறது.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்....


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்