Fri ,Apr 19, 2024

சென்செக்ஸ் 72,718.77
229.78sensex(0.32%)
நிஃப்டி22,047.30
51.45sensex(0.23%)
USD
81.57
Exclusive

மாட்டுப் பொங்கலின் சிறப்பு என்ன? எப்படி கொண்டாட வேண்டும்? | How to Celebrate Mattu Pongal 2023

Nandhinipriya Ganeshan Updated:
மாட்டுப் பொங்கலின் சிறப்பு என்ன? எப்படி கொண்டாட வேண்டும்? | How to Celebrate Mattu Pongal 2023Representative Image.

ஒவ்வொரு வருடமும் பொங்கல் பண்டிகையின் மூன்றாவது நாளாக மாட்டுப் பொங்கல் கொண்டாடப்படுவது வழக்கம். இந்த பண்டிகையானது விவசாயிகளுக்கு பக்கபலமாக நின்ற கால்நடைகளையும், உழவு பொருட்களையும் அலங்கரித்து வழிபடுவது தமிழர்களின் பாரம்பரிய மரபாக இருந்து வருகிறது. இதனை 'பட்டிப் பொங்கல்',  'கன்று பொங்கல்' என்று என்று வட்டார வழக்கத்துக்கு ஏற்ப மக்கள் அழைப்பதுண்டு. ஆண்டு முழுவதும் விவசாயத்துக்கு பேருதவியாக இருக்கும் காளையும், அவற்றின் உழைப்பையும் நன்றி தெரிவிக்கும் விதமாக இந்த பெருநாள், இந்த ஆண்டு ஜனவரி 16 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. 

மாட்டுப் பொங்கலின் சிறப்பு என்ன? எப்படி கொண்டாட வேண்டும்? | How to Celebrate Mattu Pongal 2023Representative Image

மாட்டுப் பொங்கலன்று என்ன செய்ய வேண்டும்?

மாட்டுப் பொங்கல் நாளன்று கால்நடைகள் கட்டப்படும் தொழுவத்தினை சுத்தம் செய்து, ஆடு மற்றும் மாடுகளை குளிப்பாட்டிவிட வேண்டும். அத்தோடு உழவுக்கு பயன்படுத்திய உபகரணங்களையும் சுத்தம் செய்ய வேண்டும். அதன்பின்னர், ஆடு மற்றும் மாடுகளுக்கு புது கயிறுகளை மாட்டி, கொம்புகளை சீவி புது வர்ணம் பூசி, சந்தனம், குங்குமத்தால் பொட்டு வைத்து மாலை அணிவிக்க வேண்டும். 

இதேபோல், உழவுப்பொருட்களையும் அலங்கரித்துக் கொள்ள வேண்டும். பல இடங்களில் இந்த நாளில் மாடுகளுக்கு குஞ்சம் அல்லது சலங்ககைகளையும் கட்டிவிடுவார்கள். 

மாட்டுப் பொங்கலின் சிறப்பு என்ன? எப்படி கொண்டாட வேண்டும்? | How to Celebrate Mattu Pongal 2023Representative Image

மாட்டுப் பொங்கல் வழிபாடு:

எல்லாம் ரெடியானதிற்கு பிறகு கால்நடைகள் கட்டப்படும் இடத்திலேயே தோட்டத்தில் விளைந்த காய்கறிகள், பயிர்களை வைத்து பூஜை பொருட்களாக பழம், பூ, தேங்காய், நாட்டுச் சர்க்கரை, கரும்பு வைத்து பூஜை செய்ய வேண்டும். இந்த நாளில் பொங்கல் வைப்பவர்கள் பொங்கல் ரெடியான பிறகு கால்நடைகளுக்கு தீபாரதணைக் காட்டி அவற்றுக்கு பழம், பொங்கல் கொடுக்க வேண்டும். 

மாட்டு பொங்கல் வைக்க உகந்த நேரம்:

காலை 6.30 முதல் 7.30 வரை | Morning 6.30 AM to 7.30 AM

மாலை 4.30 முதல் 5.30 வரை | Evening 4.30 PM to 5.30 PM

மாட்டுப் பொங்கலின் சிறப்பு என்ன? எப்படி கொண்டாட வேண்டும்? | How to Celebrate Mattu Pongal 2023Representative Image

வீர விளையாட்டு ஜல்லிக்கட்டு:

தமிழர்களின் பாரம்பரியத்தை எடுத்துக்கூறும் விதமாக இந்த மங்கலகரமான நாளில் பல்வேறு இடங்களில் ஒவ்வொரு ஆண்டும் ஜல்லிக்கட்டு நிகழ்வு வெகு சிறப்பாக நடைபெறும். அதுவும், 2017 ஆம் ஆண்டில் வெடித்த ஜல்லிக்கட்டு போராட்டத்திற்கு பிறகு தமிழகத்தில் மக்கள் மத்தியில் நம் நாட்டு மாடுகள், ஜல்லிக்கட்டு பற்றிய விழிப்புணர்வு அதிகமாகிவிட்டது. இதன் விளைவாக தொடர்ந்து நாட்டு மாடுகள் வளர்ப்பில் பலரும் ஆர்வம் காட்டி வருகின்றனர். 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்