பொதுவாக ஒரு ஆணையும் ஒரு பெண்ணையும் இணைக்கும் இந்த அற்புதமான திருமண பந்தத்தை மேலும் சிறப்பாக்குவதற்காக திருமணத்தின் போது 16 பொருத்தங்கள் பார்க்கப்படும். அவற்றில் குறைந்தது ஐந்து பொருத்தமாவது சரியாக இருக்க வேண்டும். அப்படி இருந்தால் மட்டுமே அந்த தம்பதியின் வாழ்க்கையில் எந்த பிரச்சனையும் இல்லாமல் மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழ முடியும் என்கிறது ஜோதிடம். இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த பொருத்தங்களில் இந்த பெயர் பொருத்தம் பார்ப்பதும் ஒன்று. பொதுவாக, இந்த பெயர் பொருத்தமாவது ஆணுக்கோ பெண்ணுக்கோ ஜாதகம் இல்லாத பட்சத்தில் பார்க்கப்படுகிறது. தற்போது இந்த பதிவில் திருமண பெயர் பொருத்தம் பார்ப்பது எப்படி என்பதை விரிவாக பார்க்கலாம்.
கல்யாண பெயர் பொருத்தம் பார்ப்பது எப்படி?
திருமண பெயர் பொருத்தம் என்பது பெயர்களை வைத்து பொருத்தம் பார்ப்பது. அதாவது ஒருவரின் முதல் எழுத்தையும், அவருடைய துணையாக வர உள்ளவர் பெயரின் முதல் எழுத்தையும், அதற்கான நட்சத்திரத்தையும் வைத்து பார்ப்பதாகும். ஆனால், பெயரை பொருத்தத்தை வைத்து திருமணம் செய்வது என்பது மிகவும் தவறானது.
ஏனென்றால், அந்த காலத்தில் நட்சத்திரத்தின் அடிப்படையில் அதற்கான முதல் எழுத்துக்களை வைத்து பெயர் வைத்தார்கள். ஆனால் தற்போதுள்ள காலத்தில் ஒருவரின் பெயருக்கும் அவரின் நட்சத்திரத்திற்கும் சம்பந்தம் இருக்கிறதா என்பதே சந்தேகமாக உள்ளது. ஏனென்றால், அவர்களுக்கு பிடித்த அல்லது எண் கணித அடிப்படையில் அல்லது குல தெய்வ பெயர் வைத்துக் கொள்கின்றனர். இப்படி வைக்கும்போது அவரின் பெயருக்கும் அவருக்கான நட்சத்திரத்திற்கும் சம்பந்தமே இல்லாமல் இருக்கும்.
அதனால், இந்த காலத்தில் பெயர் பொருத்ததை அடிப்படையாக கொண்டு திருமணம் செய்வது மிகவும் தவறு. ஒருவேளை ஜாதகம் இல்லாவிட்டாலும் பரவாயில்லை, ஜோதிடரை அணுகி அதற்கான வேறு வழிகள் என்ன என்பதை ஆலோசித்து திருமணம் செய்யலாமே தவிர, பெயர் பொருத்தத்தைப் பார்த்து திருமணம் செய்வதை தவிர்க்கவும்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…