Fri ,May 17, 2024

சென்செக்ஸ் 73,663.72
676.69sensex(0.93%)
நிஃப்டி22,403.85
203.30sensex(0.92%)
USD
81.57
Exclusive

எந்த கிழமையில் குழந்தை பிறந்தால் நல்லது? | Which Day is Good For Baby Birth in tamil

Nandhinipriya Ganeshan Updated:
எந்த கிழமையில் குழந்தை பிறந்தால் நல்லது? | Which Day is Good For Baby Birth in tamilRepresentative Image.

குழந்தை பிறப்பதே அதிர்ஷ்டம் தான். அது எந்த கிழமையில் பிறந்தால் என்ன? என்று தோன்றலாம். பொதுவாக, குழந்தை எந்த ராசி, எந்த நட்சத்திரத்தில் பிறந்துள்ளதோ அதை வைத்து அந்த குழந்தையின் எதிர்காலம் எப்படி இருக்கும் என்பதை சொல்ல முடியும். அதுபோல தான் கிழமையும். ஒரு குழந்தை எந்த கிழமையில் பிறக்கிறதோ அந்த கிழமைக்கு உண்டான பலன்கள் நிச்சயம் அந்த குழந்தைக்கு கிடைக்கும் என்பதே ஐதீகம். ஏனென்றால், ஒவ்வொரு கிழமையும் ஒவ்வொரு கடவுளுக்கு தொடர்புடையவை. அதனால், எந்த கிழமையில் குழந்தை பிறக்கிறதோ அந்த கடவுளின் பலனை பெறுவார்கள். தற்போது, எந்த கிழமையில் குழந்தை பிறந்தால் அதிர்ஷ்டம் என்று பார்க்கலாம்.

ஞாயிற்றுக் கிழமை:

ஞாயிற்றுக் கிழமைக்கு உரிய தெய்வம் சூரியன். இந்த கிழமையில் பிறக்கும் குழந்தை செல்வ செழிப்புடன் வாழ்வார்கள். குறிப்பாக வாழ்க்கையில் 40, 45 வயதிற்கு மேல் நல்ல பேரும் புகழும் மிகுந்த சந்தோஷத்துடன் வாழ்வார்கள். மேலும், ஞாயிற்றுக் கிழமையில் பிறந்தவர்கள் மனதில் என்ன தோன்றுகிறதோ அதை மட்டும் தான் செய்வார்கள். அதேப்போல், எதிலும் ஒளிவு மறைவின்றி வெளிப்படையான குணம் படைத்தவர்களாக இருப்பார்கள். 

திங்கள் கிழமை:

திங்கள் கிழமைக்கு உரிய தெய்வம் சந்திரன். அதனால் திங்கள் கிழமையில் குழந்தை பிறந்தால் வாழ்க்கையில் அனைத்து செல்வங்களையும் பெற்று வாழ்வார்கள். ஒரு முயற்சி எடுத்தாலும் அதில் வெற்றி மட்டுமே பெறுவார்கள். அதேபோல், திங்கள் கிழமையில் பிறந்தவர்கள் சந்திரனை போல அழகான தோற்றத்தை கொண்டிருப்பார்கள். தன்னுடைய வசீகரமான பேச்சால் மற்றவர்களை எளிதில் கவர்ந்திடுவார்கள். நண்பர்களுடன் இருப்பதையே அதிகம் விரும்புவார்கள். உதவி என்றால் ஓடிச் சென்று உதவி செய்வார்கள். 

செவ்வாய் கிழமை:

செவ்வாய் பகவானுக்கு உரிய கிழமையாக விளங்கும் செவ்வாயில் பிறந்த குழந்தை, தனது வாழ்க்கையில் கடுமையான உழைப்பினாலும் சொந்த முயற்சியாலும் முன்னேற்றம் அடையக் கூடியவர்களாக இருப்பார்கள். உழைப்பால் உயர்ந்த உத்தமர் என்ற பெருமையையும் பெறுவார்கள். யாருடனும் வம்பு வழக்கும் செய்ய மாட்டார்கள், ஆனால் வந்த சண்டையை விடவும் மாட்டார்கள். அதனால் இவர்களுடன் பேசும்போது கவனத்தோடே பேச வேண்டும். அடிக்கடி கோபப்பட்டாலும், அனைவரிடமும் அன்பாக பழகும் குணமுள்ளவர்கள்.

புதன் கிழமை:

புதன் கிழமைக்கு உரிய கிரகம் புதன். இந்த கிழமையில் பிறந்தவர்கள் ஏதேனும் ஒரு துறையில் சிறப்பு வாய்ந்தவராக திகழ்வார்கள். அதேபோல், எப்போதும் எதையாவது எழுதி கொண்டும், படித்து கொண்டும் இருப்பார்கள். சுருக்கமாக சொல்ல வேண்டுமென்றால் படிப்பாலியாகவும் திறமைசாலியாகவும் இருப்பார்கள். ஒரு விஷயம் தேவையில்லை என்றாலும் கூட அதை அறிந்துக்கொள்ளும் ஆர்வம் படைத்தவராக இருப்பார்கள். இயற்கையாகவே கொஞ்சம் கூச்சசுபாவம் உடைய இவர்கள் நண்பர்களைகூட தேர்ந்தெடுத்துதான் பழகுவார்கள். ஆனால், நண்பனுக்காக எதையும் செய்யக் கூடியவர்.

வியாழக்கிழமை: 

குரு பகவானுக்கு உரிய கிழமையாக வியாழன் இருக்கிறது. இந்த கிழமையில் பிறந்தவர்கள் மற்றவர்களுக்கு மதிக்கும் குணப்படைத்தவராக இருப்பார்கள். மற்றவர்களுக்காக தங்களுடைய வாழ்க்கையையும் தியாகம் செய்துக் கொள்வார்கள். அதேபோல், நன்னெறிக்கு இருப்பிடமாக திகழும் இவர்கள் தேவையில்லாத பிரச்சனைகளில் அவ்வளவு சீக்கிரமாக சிக்கிக்கொள்ள மாட்டார்கள். இருந்த இடத்தில் இருந்து கொண்டே அனைத்தையும் தெரிந்துக் கொள்ளும் திறமை இவர்களிடம் இருக்கும். இதனாலேயே இவரை சிலர் கர்வம் பிடித்தவர்கள் என்றும் சொல்வார்கள். எதிர்கால வாழ்க்கையை தெளிவாக திட்டமிடுவதில் திறமைசாலி. இதுவே அவருடைய வெற்றியை நோக்கி அழைத்துச் செல்லும்.

வெள்ளிக் கிழமை:

சுக்கிரனுக்கு உரிய கிழமையாக வெள்ளி திகழ்கிறது. இந்த கிழமையில் பிறந்தவர்கள் வாழ்க்கை வாழ்வதற்காகவே என்று சகல சுகங்களையும் அனுபவிக்கக்கூடியவர்கள். அதனால், மனதில் என்ன நினைக்கிறார்களோ அதை எப்பாடுபட்டாவது அடைந்தே தீருவார்கள். கடினமாக உழைத்து சம்பாதித்தாலும் அவையனைத்தும் மற்றவர்களையே போய் சேரும். இவர்களுக்கு புகழ்புவர்களை கண்டால் மிகவும் பிடிக்கும். அதனால், எளிதில் மற்றவர்களை நம்பிவிடுவார்கள். வெள்ளிக்கிழமையில் பிறந்த குழந்தை பெண் குழந்தையாக இருந்தால் வளர வளர செல்வம் பெருகும்.

சனிக்கிழமை:

சனி பகவானுக்கு உரிய கிழமையாக இருக்கும் சனிக்கிழமையில் பிறந்தவர்களுக்கு அதிகளவு சமயோஜித புத்தி இருக்கும். ஒரு முயற்சியில் ஈடுபடாதவரை சோம்பேறியாக இருப்பார்கள். ஆனால், முயற்சியில் இறங்கிவிட்டால் ஜெயித்தே தீர வேண்டும் கடினமாக உழைக்கக் கூடியவர்கள். நண்பர்களுக்காக எதையும் செய்யும் குணம் படைத்தவர்களாக இருப்பார்கள். அனைவரிடமும் அன்பாக பழகும் குணப்படைத்தவர் என்பதால் இவரை அனைவருக்கும் மிகவும் பிடிக்கும். இதுவே இவர்களின் தனித்துவம்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்