Fri ,Mar 29, 2024

சென்செக்ஸ் 73,651.35
655.04sensex(0.90%)
நிஃப்டி22,326.90
203.25sensex(0.92%)
USD
81.57
Exclusive

ஆப்பிஸ் போகும் போது டிராபிக் ஜாம்யை சிக்காமல் செல்வது எப்படி..?

Manoj Krishnamoorthi Updated:
ஆப்பிஸ் போகும் போது டிராபிக் ஜாம்யை சிக்காமல் செல்வது எப்படி..? Representative Image.

காலை எழுந்து அவசரமாக கிளம்பி நம்ம ஆப்பிஸ் போக நினைத்தால் அங்கு தான் ஒரு பிரச்சனை வரும். என்னனு தெரியுமா... அதாங்க டிராஃபிக் சிக்கனல். கார் அல்லது பைக்கை எடுத்து நாம் அவசரமாக இலக்கை நோக்கி ஓடினால் நம்ம வேகத்தில் ஒரு வேகத்தடையாக போக்குவரத்து நெரிசல் இருக்கும். 

கடந்த சில வருடஙகளாக டிராஃபிக் பிரச்சனை  அதிகமாக தான் உள்ளது. பைக் மற்றும் கார்களின் அதிகரிப்பு இன்றைய நாளில் போக்குவரத்து நெரிசலை உருவாக்குகிறது. இதை சமாளிப்பதற்கான வழியை இந்த பதிவில் காண்போம். 

ஆப்பிஸ் போகும் போது டிராபிக் ஜாம்யை சிக்காமல் செல்வது எப்படி..? Representative Image

இப்போது எல்லாம் ரோட்டில் காலை மற்றும்  மாலை வேளையில் இருக்கும் பிரச்சனை டிராஃபிக் தான். இவ்வாறு நாம் சிக்கனலில் சிக்கி அவதிப்படும் போது தான் நமக்கு கோபம் தலைக்கு ஏறும். இந்த பிரச்சனைக்கு காரணம் இன்றளவு ஒரு வீட்டில் குறைந்த பட்சம் 2 இரு சக்கர வாகனமாவது உள்ளது. இந்த வண்டிகள் எல்லாம் சாலையில் ஒரே நேரத்தில் வந்தால் டிராபிக் சிக்கனல் தான், இதில் எப்படி தப்பிப்பது பார்க்கலாம் வாங்க....

முதல் ஏற்பாடாக நமக்கு எப்போதும் தேவைப்படுவது திட்டமிடல். தினமும் நாம் ஆப்பிஸ் செல்வது என்பது வழக்கமானது ஆகும். அப்போது  நம் பயணத்தில் சிக்கனல் தொல்லை பெரும்பாலும் இருக்காது.  பொதுவாக சாலையில் காலை 8:30- 10:00 மணி வரை நெரிசல் இருக்கும். இந்த நேரத்தில் சிக்கி கொள்ளாதவாறு பயணத்தை முன்னரே ஆரம்பித்து கொள்வது நல்லது.

முக்கியமான ஒன்று குறுகிய சாலை அல்லது ஒன் வே போன்ற சாலை தவிர்த்து கொள்வது நல்லது. இவ்வாறு தவிர்த்து கொள்வதால் சாலையில் ஏதாவது சிக்கல் ஏற்பட்டால் உடனே பயணத்தில் மாற்றம் செய்து கொள்ளலாம். சாலையில் பின்வாங்குவது என்பது இரு வாகனங்களுக்கு அதிக நேரம் கைகொடுக்கும் ஆனால் காரில் செல்பவர்களுக்கு அது சிக்கலான ஒன்று. 

இந்த சிக்கலை சமாளிக்க டிராபிக் விவரங்களை தெரிந்து வைத்து கொள்வது நல்லது. இந்த விவரத்தை ஸ்மார்ட்போன் மூலமே அறிந்து கொள்ளலாம். இன்னும் எளிமையாக FM மூலம் டிராஃபிக் அப்டேட்களை சுலபமாக தெரிந்து கொள்ளலாம். எனவே இந்த மாதிரியான சில டிப்ஸ் மூலம் ரோட்டில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலில் மாட்டி தவிக்காமல் செல்ல வழிவகுக்கும்.  


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்