Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

வண்டியின் மெயிண்டனஸ் செலவை எப்படி குறைப்பது? | Maintenance Cost Reduce Tips

Manoj Krishnamoorthi Updated:
வண்டியின் மெயிண்டனஸ் செலவை எப்படி குறைப்பது? | Maintenance Cost Reduce TipsRepresentative Image.

டூவீலரோ அல்லது காரோ எதுவாக இருந்தாலும் இன்ஜின் பராமரிப்பு என்பது அத்தியாவசியம் ஆகும். நம்மில் பல பேருக்கு இன்ஜினை எப்படி பராமரிப்பது என்ற குழப்பம் உண்டாகும். இந்த பதிவில் கொடுத்திருக்கும் தகவலை ஃபாலோ பண்ணினால் இன்ஜின் பெரிய அளவு  செலவு வைக்காது. 

தினமும் காலையில் நம் பைக் அல்லது காரை ஸ்டார்ட் செய்யும்போது பல சமயம் உடனே ஸ்டார்ட் ஆகாது. இதற்கு காரணம் என்னவென்று பார்த்தால் இன்ஜினை  சூடேற்ற வேண்டும் என்பது நமக்கு புரிந்து இருக்கும். இதனாலே பல முறை வண்டியை ஸ்டார்ட் செய்ய வேண்டியதாக இருக்கும். 

வண்டியின் மெயிண்டனஸ் செலவை எப்படி குறைப்பது? | Maintenance Cost Reduce TipsRepresentative Image

மெயிண்டனஸ் செலவை எப்படி குறைப்பது? (Maintenance Cost Reduce Tips)

பொதுவாக வண்டியின் இதயம் என்றால் இன்ஜின் என்று உடனே சொல்லிவிடுவோம். இந்த இதயம் சரியாக இருந்தால் ஒட்டுமொத்த பாகங்களும் நலமான செயல்பாடு உருவாக்கும். சரி... இன்ஜினை எப்படி பராமரிப்பது என்பதை பற்றி பார்ப்போம்.

இன்ஜின் செயல்பாடு பெரியளவு உராய்வு இன்றி இயங்க ஆரம்பித்தால் வண்டியின் பராமரிப்பு செலவு குறையும். முதலில் இன்ஜின் என்றால் என்ன... இன்ஜின் என்பது பல்வேறு சிறிய பாகங்கள் தொடர்ச்சியாக செயல்படுவதால் வண்டி எந்த சிக்கல் இல்லாமல்  செயல்படும். இன்ஜின் எப்போது சிக்கல் இல்லாமல் செயல்பட ஒவ்வொரு முறை வண்டியை ஓட்டி முடித்தபின் வண்டி லூப்ரிகேஷன் அக வேண்டும். இந்த நேரத்தில் இன்ஜின் ஆயில் பாகங்களுக்கு பரவி இன்ஜினை ஓய்வில் ஆழ்த்தும். 

இவ்வாறு வண்டி நின்ற பின நடக்கும் லூப்ரிகேஷன் பராஸ்ஸில் நடக்கும் தடங்கல் இன்ஜின் தரத்தை குறைக்கிறது. இதை தடுக்க ஒரு வழி உண்டு. காலையில் வண்டியை ஸ்டார்ட் செய்த உடனே செல்லாமல் சிறிது நேரம் காத்திருந்து இன்ஜின் சூடான பிறகு சென்றால் பெரும்பாலும் இன்ஜின் செயல்பாடு சிக்கல் வராது.

இதில் ஒரு கேள்வி எழும்... நம் அவசரத்திற்கு போயி வர வாங்கிய வண்டியை எப்படி ஆரா அமர்ந்து உபயோகிப்பது?  சரியான கேள்வி தான், நேரத்தை மிஞ்சப்படுத்தும் பொருட்டோடு எதற்கு நேரத்தை மிச்சமாக்குகிறோம். செல்வம் சேர்க்க தானே, அவசர காலத்தில் இன்ஜின் சூடாகும் வரை காத்திருக்க முடியாது ஆனால் தினசரி பயன்பாட்டில் மேற்கோளிட்ட தகவலை பின்பற்றினால் இன்ஜின் செலவு என்பது பெரியதாக இருக்காது.   


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்