இந்தியாவில் மிகப்பெரிய கார் உற்பத்தி நிறுவனமான Maruti Suzuki அதன் பிரீமியம் Invicto MPV காரை தற்போது அறிமுகம் (ஜூலை 05) செய்துள்ளது. தற்போது கார் சந்தையில் எஸ்யூவி கார்களின் ஆதிக்கமாக இருந்தாலும், இப்பவும் எம்பிவி கார்களுக்கான வரவேற்பு அதிகரித்துக் கொண்டே தான் இருக்கிறது. அவற்றில் மாருதி நிறுவனம் எப்போதும் தனித்து விளங்குகிறது. இதற்கு காரணம் டொயோட்டா தான். ஆம், மாருதி சுசூகி நிறுவனம் டொயோட்டா உடன் இணைந்து ஏற்கனவே Glanza, Grand Vitara, urban Cruiser, Baleno, Urban Cruiser HyRyder போன்ற கார்களை விற்பனை செய்து வருகின்றன.
இந்த கார்கள் கார் சந்தையில் பெரிய அளவில் வரவேற்பை பெற்று வருகிறது. தற்போது இந்த கூட்டணியில் உருவானது தான் இந்த பிரீமியம் Invicto MPV. அதாவது, Toyota Innova Hycross மாடல் காரை ரீமாடலிங் செய்து Invicto என்ற பெயரில் அறிகமும் செய்துள்ளது. 3 வரிசை கொண்ட பெரிய கார் என்பதாலும், மாருதி சுசூகி-யின் அனைத்து நன்மைகளும் கிடைக்கும் என்பதாலும் இந்த இன்விக்டோ எம்பிவி கார்களை வாங்குவோர் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஸ்டைல்:
இந்த இன்விக்டோ நெக்ஸா பிராண்ட் கார் என்பதால் அதற்கு ஏற்றவாறு கவர்ச்சிகரமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. ஒரு ஷார்ப் லைன் டிசைன் இதன் முன்பக்கம், பின்பக்கம் மற்றும் இரு புறங்களிலும் இருப்பதால் இருக்கிறது. இது காருக்கு புது லுக்கை கொடுக்கிறது. மேலும், NEXA கார்களுக்கே உரித்தான கிரோம் க்ரில் மற்றும் ட்வின் LED ஹெட் லைட், Tre LED டைல் லைட் மற்றும் DRLS உள்ளது.
வசதிகள்:
உள்புறம் மற்றும் வெளிப்புற தோற்றத்தை பொறுத்தவரை, பனோரமிக் சன்ரூஃப், பின்புற சன்ஷேட், காற்றோட்டமான முன் இருக்கைகள், இயங்கும் இருக்கைகள், 6 ஏர் பேக் வசதி, எலக்ட்ரானிக் பார்க்கிங் பிரேக், முன்பக்க மற்றும் பின்பக்க பார்க்கிங் சென்சார், 360 டிகிரி பார்க்கிங் கேமரா, வீல் மேற்புறம் பிளாஸ்டிக் கிளாடிங், அலாய் வீல் டிசைன், புதிய Invicto பேட்ஜ் இடம்பெற்றுள்ளன. மேலும், ஒரு பிரீமியம் டூயல் டோன் பிளாக் அண்ட் பிரவுன் தீம் கொண்ட டேஷ் போர்டு மற்றும் இன்டீரியர் சாப்ட் தீம் உள்ளது. அதில் 10.1 இன்ச் SmartPlay Pro+ டச் ஸ்க்ரீன் இன்போடைன்மெண்ட் சிஸ்டம், வயர்லெஸ் ஆப்பிள் கார் பிளே, ஆண்ட்ராய்டு ஆட்டோ வசதிகள் உள்ளன.
என்ஜின்:
இந்த காரில் 186 PS பவர் மற்றும் 206 NM டார்க்கை வெளிப்படுத்தும் ஒரு 2.0 லிட்டர் TNGA Strong ஹைபிரிட் 4 சிலிண்டர் என்ஜின் உள்ளது. மேலும், லிட்டருக்கு 23.24 கிலோமீட்டர் மைலேஜ் கொடுக்கும் இந்த காரில் 52 லிட்டர் Fuel டேங்க் உள்ளது. இன்விக்டோ ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷனுடன் மட்டுமே வழங்கப்படும் முதல் மாருதி காரும் இதுதான்.
விலை:
இந்த கார் Zeta+ (7 சீட்டர்), Zeta+ (8 சீட்டர்) மற்றும் Aplha+ (7 சீட்டர்) ஆகிய 3 வேரியென்ட்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த வேரியண்ட்களின் விலைகள் முறையே 24.79 லட்சம் ரூபாய், 24.84 லட்சம் ரூபாய், 28.42 லட்சம் ரூபாய் ஆகும். மாருதி சுசூகி-யின் NEXA பிரிவில் 8வது மாடலான இந்த கார், Blue, White, Silver மற்றும் Grey என்ற நான்கு வித வண்ண விருப்பங்களில் வருகிறது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…