Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

மாருதி கார் உற்பத்தியில் ஏற்பட்ட கோளாறு... காரை ஓட்ட வேண்டாம் என எச்சரிக்கை..!

Manoj Krishnamoorthi Updated:
மாருதி கார் உற்பத்தியில் ஏற்பட்ட கோளாறு... காரை ஓட்ட வேண்டாம் என எச்சரிக்கை..!Representative Image.

இந்திய ஆட்டோமொபைல் நிறுவனங்களில் மாருதி சுசூகி மிகவும் பிரபலமானது. இந்தியாவில் அதிகமான கார்களை விற்பனை செய்யும் பெருமை கொண்ட Maruti Suzuki நிறுவனத்தின் கார்களின் உற்பத்தியில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. 

குறைந்த விலையில் நல்ல மைலேஜ் அளிக்கும் மாருதி சுசூகி கார்கள் தான் இந்தியாவில் அதிகமான நபர்களின் சாய்ஸாக உள்ளது. இதன் விற்பனைக்கு காரணமாக இருப்பது குறைவான விலை, மற்றும் அதிகமான சர்வீஸ் சென்டர் தான், ஆனால் பாதுகாப்பு அம்சங்களில் மாருதி சுசூகி கார்கள் கோட்டைவிடும். 

மாருதி சுசூகி கார்களின் தரத்தை ஆராய்ந்தால் பாதுகாப்பு குறை நிச்சயம் இருக்கும். இருப்பினும் இதன் விற்பனை இன்றுவரை இந்தியாவில் உச்சத்தில் தான் உள்ளது. கடந்த 2022 ஆண்டு டிசம்பரில் தயாரித்த சில கார்களில் ஏர்பேக்  கண்ட்ரோலர் யூனிட்டில் சிறிய பிர்ச்சனை இருக்கலாம் என்பதால் மாருதி நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனால் காரின் தரத்தில் சந்தேகம் இருப்பதால் வாடிக்கையாளர்கள் தங்கள் காரின் தரத்தை பரிசோதித்து கொள்வது நல்லது. 

விபத்து நடக்கும் வேளையில் ஏர்பேக் வெளியே வராது. இந்த கோளாறு மாருதி சுசூகி நிறுவனம் இலவசமாக சரி செய்து தருவதாக கூறியுள்ளது. இதுவே  கார் ரீகால் (Car Recall) ஆகும். 2022  டிசம்பர் 8 இல் இருந்து உற்பத்தி செய்யப்பட்ட காரில்  ஏர்பேக் கண்ட்ரோலர் யூனிட்டில்  சிக்கல் ஏற்பட்டு இருக்கலாம் என மாருதி நிறுவனம் யூகித்துள்ளது. இந்த பிரச்சனை ஒருபுறம் இருந்தாலும் மாருதி சுஸூகி ஜிம்னி மற்றும் ப்ரான்க்ஸ் கார்களின் முன்பதிவு அலைமோதுகிறது.

 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்