Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

என்னாது வெறும் ரூ. 5 லட்சத்திற்கே பென்ஸ், ஆடி, பிஎம்டபிள்யூ கார்களை வாங்கலாமா?.. எப்படி? | Luxury Cars Under 5 Lakhs in India

Nandhinipriya Ganeshan Updated:
என்னாது வெறும் ரூ. 5 லட்சத்திற்கே பென்ஸ், ஆடி, பிஎம்டபிள்யூ கார்களை வாங்கலாமா?.. எப்படி? | Luxury Cars Under 5 Lakhs in IndiaRepresentative Image.

இந்த காலத்தில் டுவீலர்கள் வாங்குவோர்களின் எண்ணிக்கையை காட்டிலும் கார் வாங்குவோர்களின் எண்ணிக்கை தான் அதிகம். அதிலும் பலருக்கு கார் வாங்க வேண்டும் என்பதே கனவாகும் இருக்கிறது. அப்படியே வாங்கினாலும் அது சொகுசு காராக தான் இருக்க வேண்டும் என்று நினைப்பதும் உண்டு. பொதுவாக, சொகுசு கார்கள் என்றாலே விலை சற்று அதிகம் தான். ஆனால் விலை அதிகம் என்று சொல்வதெல்லாம் அந்த காலம். தற்போது எல்லாம் மாறிவிட்டது. ஆம்! சொகுசு கார்களின் சந்தை நிலைமை மொத்தமாகவே மாறிவிட்டது. இனி யார் வேண்டுமானாலும் சொகுசு கார்களை வாங்கலாம். அதுவும் வெறும் 5 லட்சத்தில் இருந்தே பென்ஸ், ஆடி, பிஎம்டபிள்யூ போன்ற ப்ரீயம் கார்கள் கிடைக்கின்றன. வாங்க விரிவாக பார்க்கலாம்.

பி.எம்.டபிள்யூ:

குறைந்த விலையில் ஒரு பிஎம்டபிள்யூ கார் வாங்க வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு பி.எம்.டபிள்யூ 3 சீரிஸ் கார்கள் சிறந்ததாக இருக்கும். 2012 - 2013 காலக்கட்டத்தில் வெளியான 90 ஆயிரம் கிலோ மீட்டருக்கும் அதிகமாக ஓடிய கார்களை ரூ. 5 லட்சத்திற்கே வாங்கலாம்.

அதேபோல், பி.எம்.டபிள்யூ 5 சீரிஸ் கார்களும் தற்போது குறைவான விலையில் கிடைக்கின்றன. அதிலும், இ60 2008 மாடல் ரூ. 5 லட்சத்திற்கும் குறைவாக விலையில் கிடைக்கிறது. 90 ஆயிரம் கிலோமீட்டருக்கு மேல் ஓடிய கார்களுக்கு மட்டும் தான் இந்த குறைந்த விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

ஆடி கார்:

ஆடி காரில் சொகுசாக பயணிக்க விரும்புவோருக்கு ஆடி ஏ4 கார்கள் சிறந்த தேர்வாக இருக்கும். 2010 - 2012 காலக்கட்டத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட ஆடி ஏ4 மாடல் காரை தற்போது ரூ. 5 லட்சத்திற்கு வாங்கலாம். 

ஆடி காரில் சொகுசாக பயணிக்க வேண்டும், அதே நேரத்தில் அளவில் பெரியதாகவும் இருக்க வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு, 2012 காலங்களில் வெளியான ஆடி ஏ6 மாடல் கார் சிறந்த தேர்வாக இருக்கும். 60 ஆயிரம் கிலோ மீட்டர் ஓடிய இந்த கார்களை ரூ.9 முதல் 10 லட்சத்திற்கு வாங்க முடியும்.

2013 - 2014 காலங்களில் வெளியான ஆடி Q3 மாடல் காரை 8 லட்ச ரூபாய்க்கு வாங்க முடியும். 70 ஆயிரம் கிலோமீட்டருக்கும் அதிகமாக பயணித்த கார்கள் இந்த விலைக்குக் கிடைக்கிறது.

மெர்சீடிஸ் பென்ஸ்:

வாங்கினால் பென்ஸ் தான் வாங்க வேண்டும் நினைப்பவர்களுக்கு மெர்சீடிஸ் பென்ஸ் சி.எல்.ஏ கார் சிறந்த தேர்வாக இருக்கும். இந்த காரில் 2015 முதல் 2016 வரை உள்ள மாடல்களைத் தேர்ந்தெடுத்தால் ரூ.15 லட்சத்திற்கு வாங்கலாம். ஆனால், அவை 50 ஆயிரம் கிலோமீட்டருக்கு மேல் ஓடியதாக இருக்கும்.

வோல்வோ எக்ஸ்சி:

உலகின் தலைசிறந்த பாதுகாப்பு அம்சங்கள் கொண்ட சொகுசு காரை வாங்க விரும்புவோருக்கு வோல்வோ XC 60 மாடல் அற்புதமான தேர்வாக அமையலாம். தற்போது ஒரு லட்சம் கிலோமீட்டருக்கு மேல் பயன்படுத்திய 2012 முதல் 2014 மாடல் கார்களை ரூ.10 லட்சம் என்ற விலையில் வாங்கலாம்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்