Fri ,Jun 14, 2024

சென்செக்ஸ் 76,992.77
181.87sensex(0.24%)
நிஃப்டி23,465.60
66.70sensex(0.29%)
USD
81.57
Exclusive

சும்மா தாறுமாறு...398cc என்ஜின் உடன் களமிறங்கும்...நியூ KTM 390 டியூக் | KTM 390 Duke 2024 Launch Date

Priyanka Hochumin Updated:
சும்மா தாறுமாறு...398cc என்ஜின் உடன் களமிறங்கும்...நியூ KTM 390 டியூக் | KTM 390 Duke 2024 Launch DateRepresentative Image.

இந்தியாவில் மட்டும் இல்லாமல் உலகெங்கிலும் கே.டி.எம் [KTM] பைக் மாடலுக்கு தனி ரசிகர் பட்டாளம் உள்ளது. நம்மால் வாங்க முடியாவிட்டாலும் ஒரு முறையாவது அந்த பைக்கை செயல்படுத்தி பாக்க வேண்டியது தான் பலரின் கனவாக இருந்து வருகிறது. இவர்களுக்காகவே கேடிஎம் நிறுவனம் பட்ஜெட்டிற்கு ஏற்ப மூன்று மாடலை அறிமுகம் செய்துள்ளது. KTM 390 டியூக், KTM 250 டியூக் மற்றும் KTM 125 டியூக் மாடலுக்கு இடையே இருக்கும் வித்தியாசம், அம்சம், விலை உள்ளிட்ட முழு விவரத்தையும் பார்க்கலாம்.

KTM 390 Duke Vs KTM 250 Duke Vs KTM 125 Duke:

KTM 390 டியூக் Vs KTM 250 டியூக் Vs KTM 125 டியூக்

KTM 390 டியூக் [KTM 390 Duke]

KTM 250 டியூக் [KTM 250 Duke]

KTM 125 டியூக் [KTM 125 Duke]

முறுக்கு விசை (Torque)

39 Nm

25 Nm

11 Nm

வெயிட் (Weight)

165kg

165kg

154kg

டேஷ் (Dash)

5-inch TFT Dash

5-inch LCD Dash

5-inch LCD Dash

எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-showroom Price)

Rs. 1.78 Lakh

Rs. 2.38 Lakh

Rs. 2.97 Lakh

 

விவரக்குறிப்புகள்: 

நாம் மிகவும் ஆவலாக எதிர்பார்த்துக் கொண்டிருந்த நியூ 390 டியூக்கின் எஞ்சின் ஆனது 398cc திறன் கொண்டு வருகிறது. இது 44.8எச்பி மற்றும் 39என்எம் டார்க் உடன் 89 மிமீ போர் மற்றும் 64 மிமீ ஸ்ட்ரோக் என மதிப்பிடப்பட்டுள்ளது. மேலும் இந்த மாடல் ரெயின், ஸ்ட்ரீட் மற்றும் ட்ராக் என மொத்தம் மூன்று ரைடிங் மோடுகளைப் பெறுகிறது. இந்த ஒவ்வொரு மோடின் செயல்திறனால் வாகன பயணத்தின் போது நமக்கு பவர் டெலிவரி கிடைக்கும். இதில் குறிப்பாக ட்ராக் மோடில் மட்டும் லான்ச் கன்ட்ரோல் என்னும் ஆப்ஷனை பயன்படுத்தி 7,000rpm வரை ரெவ்களை உருவாக்க முடியும். இதனால் துணிச்சல் இருக்கிறவர்கள் வேகமாக ஓட்டலாம்.

KTM 390 டியூக், KTM 250 டியூக் மற்றும் KTM 125 டியூக் ஆகிய மூன்று மாடல்களும் புளூடூத் இணைப்பைப் பெறுகின்றன. எனவே, KTM ஆப் மூலம் வாகன ஓட்டுநர் டர்ன்-பை-டர்ன் நாவிகேஷன், மியூசிக் பிளேபேக்கைக் கட்டுப்படுத்தலாம். மேலும் இந்த மூன்று மாடல் பைக்கிலும் ஹசார்ட் லைட் சுவிட்ச் [hazard light switch] என்னும் புதிய சுவிட்ச் கியர் வழங்கப்பட்டுள்ளது. அதனை இடது கை சுவிட்ச் க்யூப்பில் கட்டுப்படுத்துவதற்கான ஆப்ஷன் அளிக்கப்பட்டுள்ளது.

இவை மூன்றும் இரண்டு கலர் ஆப்ஷனில் வருகிறது. எல்இடி ஹெட்லைட்டைச் சுற்றியிருக்கும் எல்இடி டிஆர்எல் 'ஐப்ரோ' 390 டியூக்கிற்கு மட்டுமே தனித்துவமானது. மற்ற இரண்டு மாடலுக்கும் வண்ணம் பொருந்திய பிளாஸ்டிக் துண்டுகளைப் பெறுகிறது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்