Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

அடேங்கப்பா! இத்தனை ஆயிரம் முன்பதிவுகளை தட்டித்தூக்கிய ஹார்லி டேவிட்சன் எக்ஸ்440.. | Harley Davidson X440 Bookings Update

Nandhinipriya Ganeshan Updated:
அடேங்கப்பா! இத்தனை ஆயிரம் முன்பதிவுகளை தட்டித்தூக்கிய ஹார்லி டேவிட்சன் எக்ஸ்440.. | Harley Davidson X440 Bookings UpdateRepresentative Image.

ஹார்லி டேவிட்சன் என்றாலே அதிக விலை இருக்கும் என்று தான் மக்கள் நினைத்திருந்தனர். ஆனால், இந்திய வாகன நுகர்வோரில் உள்ள நடுத்தர பயனர்களுக்காக தாங்களும் ஏதாவது செய்ய வேண்டும் என்று நினைத்ததோ என்னவோ ஹார்லி நிறுவனம். அதற்காகவே ஹார்லி நிறுவனம் இந்திய வாகன தயாரிப்பு நிறுவனமான ஹீரோ உடன் கூட்டு சேர்ந்து தனது முதல் விலை மலிவான ரெட்ரோ பைக்கான ஹார்லி டேவிட்சன் எக்ஸ்440 பைக்கை ஜூலை 4,2023 அன்று இந்தியா முழுவதும் அறிமுகம் செய்தது. 

தனித்துவமான டிசைன், பல மேம்பட்ட அம்சங்களை கொண்டுள்ள இந்த பைக்கிற்கான முன்பதிவுகள் ஜூலை 4,2023 அன்று நாடு முழுவதும் தொடங்கப்பட்டது. அன்றிலிருந்து இதுவரையிலும் 25,597 முன்பதிவுகளை பெற்றுள்ளதாக ஹீரோ மோட்டோகார்ப் தெரிவித்துள்ளது. ஹார்லி டேவிட்சன் பைக்கில் X440 டெனிம், X440 விவிட், X440 எஸ் என மொத்தம் மூன்று வேரியண்ட்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. 

அடேங்கப்பா! இத்தனை ஆயிரம் முன்பதிவுகளை தட்டித்தூக்கிய ஹார்லி டேவிட்சன் எக்ஸ்440.. | Harley Davidson X440 Bookings UpdateRepresentative Image

இவற்றில் டாப் வேரியண்டான எக்ஸ்440 எஸ் (X440 S) தான் 65 சதவீத முன்பதிவுகளை பெற்றுள்ளது. தற்போது இந்த மாடலுக்கான முன்பதிவு மூடப்பட்டுவிட்டதாகவும், மீண்டும் முன்பதிவுகள் விரைவில் அறிவிக்கப்படும் என்றும் ஹீரோ மோட்டோகார்ப் தெரிவித்துள்ளது. மேலும், இந்த முன்பதிவுக்கான தயாரிப்புகளை வரும் செப்டம்பர் மாதத்தில் தொடங்கவுள்ளதாகவும், டெலிவரிகள் அக்டோபர் முதல் தொடங்கப்படும் எனவும் தெரிவித்துள்ளது. 

தலைமை செயல் அதிகாரி நிரஞ்சன் குப்தா இது பற்றி தெரிவிக்கையில், 'X440 மாடலுக்கான வாடிக்கையாளர்களின் வரவேற்பில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். இந்த பிரிவில் வாடிக்கையாளர்கள் காட்டிய நம்பிக்கையைப் பார்ப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. மேலும், எங்களது முன்பதிவுகளில் பெரும்பாலானவை டாப் எண்ட்  S மாடலுக்கு வந்துள்ளது. இது வாடிக்கையாளர்கள் சரியான பிராண்டுக்கு விலை கொடுக்கத் தயாராக உள்ளனர் என்பதை தெளிவாக காட்டுகிறது. பிரீமியம் பிரிவில் வெற்றி பெறுவதற்கான எங்கள் பயணத்தின் ஆரம்பம் இதுவே' என குறிப்பிட்டார்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்