Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

குறைந்த விலையில் அதிக வசதிகள் கொண்ட டைகர் இவி 200 எலக்ட்ரிக் கார்.. | Tiger EV 200 Electric Car

Nandhinipriya Ganeshan Updated:
குறைந்த விலையில் அதிக வசதிகள் கொண்ட டைகர் இவி 200 எலக்ட்ரிக் கார்.. | Tiger EV 200 Electric CarRepresentative Image.

திருப்பூரை சேர்ந்த கார் தயாரிப்பு நிறுவனமான நியூ எனர்ஜி வேகன், 'டைகர் இவி 200' என்ற புதிய எலக்ட்ரிக் காரை அறிமுகம் செய்துள்ளது. இரண்டு வகைகளில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்த கார்கள் தான் எலக்ட்ரிக் கார்களில் தற்போது இருப்பதிலேயே குறைந்த விலையில், அதிக வசதிகள் உள்ள கார்களாக விளங்குகின்றன. உறுதியான கட்டமைப்புடன் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த கார் 8 வித நிறங்களில் இந்த கார் வாங்க கிடைக்கிறது.

பயணிகளின் பாதுகாப்புக்காக இந்த காரில் இரண்டு ஏர் பேக்குகள், ஏபிஎஸ் உள்ளிட்ட வசதிகள் இடம் பெற்றுள்ளன. பயணிகள் அமர விசாலமான இட வசதி உள்ளது. இந்த காரில் மணிக்கு 110 கி.மீ வேகத்தில் செல்ல முடியும். டைகர் EV 200 இன் அதிகபட்ச வேகம் மணிக்கு 120 கிமீ ஆகும்

இரண்டு வகைகளில், முதல் வகை 9 மணி நேரம் சார்ஜ் செய்தால் 230 கிமீ தூரம் வரை பயணிக்கலாம். அதுவே, மற்றொரு வகை ஒரு மணி நேரம் சார்ஜ் செய்தாலே 369 கிமீ தூரம் வரை பயணம் செய்ய முடியும். விலையை பொறுத்தவரையில், முதல் வேரியண்ட் விலை ரூ. 9.86 லட்சம் மற்றும் டாப் வேரியண்ட் விலை ரூ. 13.93 லட்சம் ஆகும்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்