Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

இதுக்காக தான இத்தன நாளா வெயிட்டிங்.. வருகிறது ராயல் என்ஃபீல்டின் எலக்ட்ரிக் பைக்.. | Royal Enfield Electric Bike Launch

Nandhinipriya Ganeshan Updated:
இதுக்காக தான இத்தன நாளா வெயிட்டிங்.. வருகிறது ராயல் என்ஃபீல்டின் எலக்ட்ரிக் பைக்.. | Royal Enfield Electric Bike LaunchRepresentative Image.

பைக் என்றாலே அது ராயல் என்ஃபீல்டு பைக்காக இருக்க வேண்டும் என்பது தான் தற்போது இளம்தலைமுறையின் விருப்பமாக இருக்கிறது. இதற்கு காரணம் ராயல் என்ஃபீல்டு நிறுவனம் தனது வாடிக்கையாளர்களின் தேவைகளை உணர்ந்து தொடர்ந்து, பல்வேறு புதிய மாடல்களை உற்பத்தி செய்து வருகிறது. அதிலும், ட்ரெண்டுக்கு ஏற்ப தொடர்ந்து தன்னை அப்டேட் செய்து வருவதே ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின் இம்மாபெரும் வளர்ச்சிக்கு காரணம். அந்த வரிசையில், பிரீமியம் லைஃப்ஸ்டைல் பிரிவில் அனைத்து மாடல்களையும் கலமிறக்கி வரும், ராயல் என்ஃபீல்டு அடுத்ததாக எலக்ட்ரிக் பைக்குகளையும் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது.

இந்திய சந்தையில் தற்போது எலக்ட்ரிக் வாகனங்களுக்கு நல்ல வரவேற்பு கிடைக்கத் தொடங்கியுள்ளது. இதனால், முன்னணி நிறுவனங்கள் பலவும் எலக்ட்ரிக் பைக்குகளை உற்பத்தி செய்யும் முயற்சிகளிலும் ஈடுபட்டுள்ளன. அந்த வரிசையில் தான் தற்போது ராயல் என்ஃபீல்டு நிறுவனம் இறங்கியுள்ளது. இதுதொடர்பான விவரங்கள் ஏற்கனவே இணையத்தில் வெளியாகி மக்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதுக்காக தான இத்தன நாளா வெயிட்டிங்.. வருகிறது ராயல் என்ஃபீல்டின் எலக்ட்ரிக் பைக்.. | Royal Enfield Electric Bike LaunchRepresentative Image

ராயல் என்ஃபீல்டு நிறுவனம் தனது முதல் எலக்ட்ரிக் பைக்கை தயாரிக்க ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த நிறுவனமான ஸ்டார்க் பியூச்சர் என்ற நிறுவனத்துடன் கைக்கோர்த்துள்ளது. தற்போது இந்த இரு நிறுவனமும் சேர்ந்து எலக்ட்ரிக் வாகனங்கள் தயாரிக்க அடிப்படை பணிகளை தொடங்கியுள்ளனர். இந்திய சந்தை மட்டுமல்லாது, சர்வதேச சந்தைகளையும் குறிவைத்துதான் ராயல் என்பீல்டு நிறுவனம் எலக்ட்ரிக் பைக்குக்களை உருவாக்கவுள்ளது. மேலும், ராயல் என்ஃபீல்டு உருவாக்கி வரும் இந்த எலக்ட்ரிக் பைக் 'L1A' எனும் குறியீட்டு பெயர் கொண்டிருக்கும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. 

இதற்கிடையில், ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின் சிஇஓ சித்தார்த்தலால் நிறுவனத்தின் முதல் எலக்ட்ரிக் பைக் அடுத்த இரண்டு ஆண்டுகளில் அறிமுகப்படுத்தப்படும் என தெரிவித்துள்ளார். மேலும், இதற்கான பணிகளை ஏற்கனவே உள்ள ஊழியர்களை வைத்து செய்யாமல் இதுக்காக தனியாக 100 ஊழியர்களை வேலைக்கு அமர்த்தி அவர்கள் மூலம் இந்த பணிகளை செய்து வருவதாகவும் தெரிவித்துள்ளார். 

ராயல் என்ஃபீல்டு நிறுவனம் தற்போது எலக்ட்ரிக் பைக்கில் மட்டுமல்லாமல், பேட்டரி மேனேஜ்மெண்ட் சிஸ்டம், மோட்டார் கண்ட்ரோலர் யூனிட் சிஸ்டம் மற்றும் அதன் துணைக் கருவிகளுக்கான டிசைன் ஆகியவற்றை செய்து வருகிறது. முதற்கட்டமாக, நிறுவனம் 1.5 லட்சம் எலெக்ட்ரிக் பைக்குகளை தயாரிக்க திட்டமிட்டுள்ளது. எனவே, ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின் இந்த முதல் எலெக்ட்ரிக் பைக் நிச்சயமாக மார்க்கெட்டில் ஒரு புரட்சியை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்