Tue ,Apr 16, 2024

சென்செக்ஸ் 72,991.59
-408.19sensex(-0.56%)
நிஃப்டி22,165.90
-106.60sensex(-0.48%)
USD
81.57
Exclusive

ரிசர்வ் வங்கியால் மீண்டும் மக்கள் அவதி...ரெப்போ விகிதத்தின் அதிரடி தாக்கம்!

Priyanka Hochumin Updated:
ரிசர்வ் வங்கியால் மீண்டும் மக்கள் அவதி...ரெப்போ விகிதத்தின் அதிரடி தாக்கம்!Representative Image.

நாட்டில் ஏற்பட்டு வரும் பணவீக்கத்தை குறைக்க ரிசர்வ் வங்கி, ரெப்போ விகிதத்தை உயர்த்தியது. இதனால் நடுத்தர மற்றும் சாமானிய மக்கள் வாங்கிய வீட்டு கடன் வட்டி விகிதம் அதிகரித்துள்ளது. மாத வருமானத்தை வைத்து குடும்பத்தை நடத்த சிரமப்பட்டு கொண்டிருக்கும் போது இப்படி வடியும் அதிகரித்தால் சாமானிய மக்களால் எப்படி வாழ முடியும்.

இந்த ஆண்டு மட்டுமே இந்திய ரிசர்வ் வங்கி 5வது முறையாக ரெப்போ விகிதத்தை அதிகரித்துள்ளது. எனவே, அரசாங்க வங்கிகளும் வட்டி விகிதத்தை அதிகரித்து வருகின்றனர். ரிசர்வ் வங்கி ரெப்போ விகிதத்தை 35 அடிப்படை புள்ளிகள் அதிகரித்து 6.25 சதவீதமாக அறிவித்துள்ளது. எந்தெந்த வங்கியில் அதிகரித்துள்ளது என்று இந்த பதிவில் பாப்போம்.

பாங்க் ஆப் பரோடா (Baroda Repo Linked Lending Rate) வங்கியில் சில்லறை கடன்களுக்கான குறைந்தபட்ச வட்டி விகிதம் 6.25 சதவீதத்தில் இருந்து 8.85 சதவீதமாக அதிகரித்துள்ளது. சுமார் 2.60% அதிகரித்ததால் மக்கள் அதிர்ச்சியில் உள்ளனர். மேலும் இந்த மாற்றங்கள் டிசம்பர் 8 ஆம் தேதி முதல் நடைமுறைக்கு கொண்டு வரும் என்று கூறப்படுகிறது.

இந்தியன் ஓவர்சீஸ் வங்கியிலும் வீட்டு கடனுக்கான வட்டி அதிகரித்துள்ளது. Marginal Cost of Funds Based Landing Rate அதாவது MCLR 15-35 அடிப்படை புள்ளிகள் உடன் வங்கி ரெப்போ இணைக்கப்பட்ட கடன் விகிதத்தையும் (Repo Linked Lending Rate (RLLR)) 9.10 சதவீதமாகக் அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த மாற்றம் டிசம்பர் 10 ஆம் தேதி முதல் அமலுக்கு வரும்.

பேங்க் ஆஃப் இண்டியா வங்கியில் ரிசர்வ் பேங்க் ரெப்போ விகிதத்தை அதிகரித்த உடன் RBLR 9.10 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. இத்துடன் பல வட்டி விகிதங்களும் அதிகரிக்கப்பட்டதாக தகவல் வெளியாகின. அதிலும் குறிப்பாக 1 ஆண்டுக்கான எம்சிஎல்ஆர் 8.15% ஆகவும், 6 மாத எம்சிஎல்ஆர் 7.90% ஆகவும் அதிகரிக்கப்பட்டது. இது டிசம்பர் 7 ஆம் தேதி முதல் பின்பற்ற படுகிறது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்