Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

ஃபிக்ஸ்டு டெபாசிட் போட போறீங்களா..? அப்ப இதெல்லாம் நீங்க கட்டாயம் தெரிஞ்சிக்கணும்…!

Gowthami Subramani Updated:
ஃபிக்ஸ்டு டெபாசிட் போட போறீங்களா..? அப்ப இதெல்லாம் நீங்க கட்டாயம் தெரிஞ்சிக்கணும்…!Representative Image.

ஃபிக்ஸ்டு டெபாசிட் முறை மூலம் சேமிக்கும் நபர்களா நீங்கள்… இந்த முறை மூலம் சேமிப்பதற்கு முன் நீங்கள் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டியவை.

ஃபிக்ஸ்டு டெபாசிட் போட போறீங்களா..? அப்ப இதெல்லாம் நீங்க கட்டாயம் தெரிஞ்சிக்கணும்…!Representative Image

ஃபிக்ஸ்டு டெபாசிட்

ஒருவர் தான் சம்பாதிக்கக் கூடிய தொகையை பிற்காலத்திற்காக சேமிக்க விரும்பும் போது, எந்த முறையில் சேமிக்கலாம் என்பதைப் பற்றி சிந்திப்பர். அந்த வகையில், பல்வேறு முறைகளின் மூலம் எதிர்கால வாழ்விற்காக நிகழ்காலத்தில் சம்பாதிப்பதை சேமிக்கலாம். அதன் படி, சேமிப்பு வகையில் ஃபிக்ஸ்டு டெபாசிட் என்ற வழியும் உள்ளது. வங்கியில் ஃபிக்ஸ்டு டெபாசிட் செய்து வைப்பதன் மூலம், எதிர்காலத்தில் குறிப்பிட்ட தொகைக்கான வட்டியுடன் சேமிப்புத் தொகையைப் பெறலாம்.

ஃபிக்ஸ்டு டெபாசிட் போட போறீங்களா..? அப்ப இதெல்லாம் நீங்க கட்டாயம் தெரிஞ்சிக்கணும்…!Representative Image

தனியார் வங்கிகளும்

தனியார் வங்கிகள் ஃபிக்ஸ்டு டெபாசிட் மூலம் வட்டியுடன் கூடிய சேமிப்புத் தொகையை ஒரு குறிப்பிடப்பட்ட காலத்திற்கேற்ப வழங்கி வருகிறது. இதில், தனியார் வங்கிகளும் இணைந்து தற்போது அதிக அளவிலான வட்டியை வழங்க தொடங்கி உள்ளன. இதன் மூலம், மக்கள் தனியார் வங்கியிலும் டெபாசிட் செய்வதன் மூலம், அந்த தொகைக்கு ஏற்ப வட்டித் தொகையுடன் கூடிய சேமிப்புத் தொகையைப் பெற முடியும். இந்த அற்புத திட்டமான ஃபிக்ஸ்டு டெபாசிட் செய்வதற்கு முன்பு, கீழே கொடுக்கப்பட்ட விஷயங்களைத் தெரிந்து கொண்டிருப்பதும் அவசியமாகும். அவற்றைப் பற்றி இந்தப் பதிவில் காணலாம்.

ஃபிக்ஸ்டு டெபாசிட் போட போறீங்களா..? அப்ப இதெல்லாம் நீங்க கட்டாயம் தெரிஞ்சிக்கணும்…!Representative Image

எத்தனை ஆண்டுகள்

பொதுவாக, வங்கிகளில் ஃபிக்ஸ்டு டெபாசிட் செய்பவர்கள் எத்தனை ஆண்டுகளுக்கு முதலீடு செய்யப் போகிறார்கள் என்பதை முடிவு செய்து கொள்ள வேண்டியது அவசியமாகும். வங்கிகளில் சேமிக்க வேண்டிய ஆண்டுகளுக்கு ஏற்ப காலம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதன் படி, முதலீட்டாளர்கள் தங்களுக்கு ஏற்ப காலத்தை நிர்ணயித்துப் பின் முதலீடு செய்யலாம். அனைத்து வங்கிகளுமே, சிறப்பு டெபாசிட் திட்டங்களை வைத்து இயங்கி வருகிறது. இந்த சிறப்பு டெபாசிட் திட்டங்களின் மூலம் இணையும் நபர்களுக்கு கூடுதல் வட்டி பெற வாய்ப்பு கிடைக்கும்.

ஃபிக்ஸ்டு டெபாசிட் போட போறீங்களா..? அப்ப இதெல்லாம் நீங்க கட்டாயம் தெரிஞ்சிக்கணும்…!Representative Image

வட்டி விகிதத்தை அறிதல்

அதே போல, ஃபிக்ஸ்டு டெபாசிட் போட நினைப்பவர்கள், அதற்கான வட்டி விகிதத்தை அறிந்து கொள்வதும் அவசியமாகும். அதாவது, வட்டி விகிதமானது, முதலீடு செய்யப்படும் தொகை மற்றும் அதன் கால அளவிற்கேற்ப மாறுபடும். இதில் டெபாசிட் செய்யக் கூடிய வங்கி அல்லது வங்கி அல்லாத நிதி நிறுவனமானது, கடந்த காலங்களில் வட்டி விகிதம் இல்லாமல் எப்படி செயல்பட்டது என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டியது அவசியமாகும். முதலீடு மீதான வட்டி எப்போது முதலீடு செய்பவர்களுக்குத் தேவை என்பதை முன் கூட்டியே முடிவு செய்து,

அதற்கு தகுந்தாற்போல முதலீடு செய்ய வேன்டும். மேலும், முதலீட்டிற்கான வட்டி விகிதம் எப்படி தேவை என்பதையும் முன்கூட்டியே முடிவு செய்து கொள்ள வேண்டும். அதாவது ஃபிக்ஸ்டு டெபாசிட் செய்யப்படும் வங்கிக் கணக்கில் காலாண்டுக்கு ஒரு முறை வட்டி விகிதம் வரவு வைக்கப்படும். மேலும், ஆண்டுக்கு ஒரு முறையும் வட்டி விகிதம் வழங்கப்படும். அதே சமயம், ஆண்டுக்கு ரூ.10,000-ற்கு அதிகமாக வட்டி வருமானம் கிடைக்கும் போது, முதலீட்டாளர்கள் அதற்கான வருமான வரி செலுத்த வேண்டும்.

ஃபிக்ஸ்டு டெபாசிட் போட போறீங்களா..? அப்ப இதெல்லாம் நீங்க கட்டாயம் தெரிஞ்சிக்கணும்…!Representative Image

அபராதம் விதிக்கப்படும்

ஃபிக்ஸ்டு டெபாசிட் செலுத்துபவர்கள், அதற்கான காலத்தை சரியாக முன்கூட்டியே தெரிந்து பதிவு செய்ய வேண்டும். இதில் டெபாசிட் செய்பவர்கள் முதலீட்டு காலம் முடிவதற்கு முன்பே டெபாசிட்டை திரும்ப பெற்றால், அதற்கு சில வங்கிகள் கட்டணம் விதிக்கின்றன. அதாவது, ஃபிக்ஸ்டு டெபாசிட் காலம் முதிர்வடைதற்கு முன்னதாகவே, சில தவிர்க்க முடியாத காரணத்தினால் எடுக்கும் போது அதற்கு அபராதம் இருக்கும். அதே சமயம், இந்த அபராதத் தொகை எவ்வளவு என்பதையும் தெரிந்து வைத்துக் கொள்வது அவசியமாகும்.

ஃபிக்ஸ்டு டெபாசிட் போட போறீங்களா..? அப்ப இதெல்லாம் நீங்க கட்டாயம் தெரிஞ்சிக்கணும்…!Representative Image

நிறுவனங்களின் ரேட்டிங்

ஃபிக்ஸ்டு டெபாசிட் செய்யக் கூடியவர்கள், வங்கி அல்லாத நிதி நிறுவனங்களில் டெபாசிட் செய்யும் போது, அதற்கான ரேட்டிங் என்ன என்பதையும் கவனிக்க வேண்டும். அதன் படி, ஏஏஏ ரேட்டிங் டெபாசிட் திட்டங்களில் முதலீட்டாளர்கள் முதலீடு செய்யலாம். இதில், கிரேடிங், ரேட்டிங் பல நிறுவனங்கள் வழங்கி வருகின்றன. இந்த நிதி நிறுவனங்களுக்கு ICRA, CRISIL உள்ளிட்ட நிறுவனங்கள் அதற்கான ரேட்டிங்கை வழங்கி வருகிறது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்