Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Down Payment for Home Loan | வீட்டுக் கடன் வாங்குவதற்கு முன்பணம் எவ்ளோ செலுத்த வேண்டும் தெரியுமா?

Priyanka Hochumin Updated:
Down Payment for Home Loan | வீட்டுக் கடன் வாங்குவதற்கு முன்பணம் எவ்ளோ செலுத்த வேண்டும் தெரியுமா?Representative Image.

எப்படியாவது சொந்த வீடு வாங்க வேண்டும் என்று ஆசைப்படுபவர்கள் சரியான திட்டமிடல் இல்லையென்றால் அது அவங்களுக்கு பாதகமாக மாறிவிடும். ஏனெனில் எப்படியும் வீட்டுக் கடன் வாங்கி தான் வீடு வாங்கப் போவார்கள். ஆனால் அதற்கான மொத்த பணத்தையும் வங்கிகள், நிதி நிறுவனங்கள் நமக்கு தராது என்று பலருக்கும் தெரிவதில்லை. இந்த பதிவில் வீட்டுக் கடன் வாங்குவதற்கு ரிசர்வ் வங்கி என்னென்ன விதிமுறைகள் அமைத்துள்ளது, அதற்கு முன்பு நாம் என்னென்ன ஏற்பாடு செய்திருக்க வேண்டும் என்பதை தெரிந்துகொள்வோம்.

Down Payment for Home Loan | வீட்டுக் கடன் வாங்குவதற்கு முன்பணம் எவ்ளோ செலுத்த வேண்டும் தெரியுமா?Representative Image

முன்பணம் ஏற்பாடு | Down Payment

வீட்டுக் கடன் வாங்க இருக்கும் நபர்கள் சுமார் 20% முதல் 30% வரை தங்கள் கையில் இருக்கும் பணத்தை முன்பணமாக போட வேண்டும். வீட்டுக் கடன் வழங்கும் பொதுத்துறை மற்றும் தனியார் வங்கிகள், வீட்டு வசதி நிறுவனங்கள், வங்கிசாரா நிதிச் சேவை நிறுவனங்களில், வீட்டின் மதிப்பில் இருந்து 20% தொகையை வீடு வாங்குபவர் முன்பணமாக செலுத்த வேண்டும் என்பது ரிசர்வ் பேங்க் ஆஃப் இந்தியாவின் விதிமுறையாகும்.

தெளிவாக சொல்ல வேண்டும் என்றால், நீங்கள் புது வீடு கட்டப்போகிறீர்கள் என்றால் முதலில் உங்கள் கையில் இருக்கும் பணத்தை வைத்து கட்ட ஆரம்பிக்க வேண்டும். பின்னர் பில்டிங் எழுந்த உடன் மீதமுள்ள பணத்தை வீட்டுக் கடன் வாங்கிய வங்கிகள் தருவார்கள். இதுவே கட்டின வீட்டை வாங்க வேண்டும் என்றால் அதற்கும் முன்பணம் நீங்கள் தான் செலுத்த வேண்டும். அட்வான்ஸ் அல்லது முதல் தவணை பணத்தை உங்கள் கையில் இருக்கும் பணத்தில் தான் கொடுக்க வேண்டும். ஏனெனில் இது வங்கிகளுக்கும் வீட்டுக் கடன் வாங்குபவர்களுக்கும் நம்பிக்கை ஏற்படுத்தும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.

Down Payment for Home Loan | வீட்டுக் கடன் வாங்குவதற்கு முன்பணம் எவ்ளோ செலுத்த வேண்டும் தெரியுமா?Representative Image

மதிப்பீடு | Loan to Value Ratio

பொதுவாக கடன் வழங்குபவர்கள் கடனுக்கும் வீட்டின் மதிப்புக்கும் உள்ள விகிதத்தை தான் LTV என்று அழைப்பார்கள். இது அவ்வப்போது சந்தையின் நிதிநிலைக்கு ஏற்ப ஆர்.பி.ஐ மாற்றி அமைக்கும். அதே போல் வீட்டுக் கடன் வாங்க இருப்பவர்கள் செலுத்தும் முன்பணமும் வங்கிகள் மற்றும் வீட்டு வசதி நிறுவனங்கள், எவ்ளோ தொகை கடனாக வாங்கப்பட்டுள்ளது மற்றும் கடனைத் திரும்ப செலுத்தும் தகுதியின் அடிப்படையில் மாறலாம். தற்போது இருக்கும் சந்தை நிதியின் அடிப்படையில் ரிசர்வ் வங்கி வீட்டுக் கடனுக்கு அமைத்துள்ள விதிமுறைகள் என்ன என்று பாப்போம்.

ரூ.30 லட்சத்துக்கு கீழ் - நீங்கள் கடன் தற்போது ரூ.30 லட்சத்திற்கு கீழ் வாங்கினால், வீடு அல்லது அடுக்குமாடிக் குடியிருப்பின் மதிப்பில் 90% வரை நமக்கு கிடைக்கும். மீதமுள்ள சதவீதமானது நாம் முன்பணமாக செலுத்த வேண்டும்.

ரூ.30 - ரூ.75 லட்சம் - உங்கள் வீட்டின் கடன் ரூ. 30 முதல் ரூ. 75 லட்சத்துக்குள் இருந்தால், வீட்டின் மதிப்பில் 80% வரை வங்கிகளில் இருந்து கிடைக்கும். அதே போல் மீதம் முன்பணமாக கொடுக்க வேண்டும்.

ரூ.75 லட்சத்திற்கு மேல் இருந்தால் - அதாவது நீங்கள் கடன் வாங்கும் வீட்டின் மதிப்பு ரூ.75 லட்சத்திற்கு மேல் இருந்தால் வீட்டின் மதிப்பில் 75% வரை கடனாக கிடைக்கும். இங்கேயும் மீதமுள்ள தொகையானது முன்பணமாக செலுத்த வேண்டி இருக்கும்.

முக்கிய குறிப்பு - கடனுக்கும் வீட்டின் மதிப்புக்கும் உள்ள விகிதத்தைக் கணக்கிட சில முக்கிய ஆவணங்கள் தேவைப்படும் என்பதால் அதற்கான கட்டணங்கள் கணக்கீட்டில் சேர்க்கப்படமாட்டாது என்பது ரிசர்வ் வங்கியின் விதிமுறையாகும். அந்த கட்டணங்கள் - சொத்துப் பதிவுக்கான கட்டணம், முத்திரைக் கட்டணம், இதர ஆவணக் கட்டணம், தரகர் கட்டணம் ஆகியவையாகும்.

Down Payment for Home Loan | வீட்டுக் கடன் வாங்குவதற்கு முன்பணம் எவ்ளோ செலுத்த வேண்டும் தெரியுமா?Representative Image

பிளஸ் மற்றும் மைனஸ் | Guidance for Home Loan

கடன் வாங்குபவர்கள் இந்த முன்பணத்தை முன்பே தயார் செய்துக்கொள்வது புத்திசாலித்தனம். மேலும் ஆர்.பி.ஐ அறிவித்துள்ள விதிமுறை தாண்டியும் உங்களால் முன்பணம் செலுத்த முடியும் என்றால் நீஎங்கள் தாராளமாக செலுத்தலாம். அது உங்களுக்கு மாத தவணை தொகையும் குறைக்க உதவும்.

நீங்க ஏற்கனவே கடன் வாங்கியுளீர்கள் அல்லது மெயின் ஏரியாவில் வீடு இல்லை என்றால் கடன் தரும் நிறுவனம் கூடுதல் முன்பணம் கேட்கும் வாய்ப்புள்ளது. எனவே, அதனை கவனித்துக்கொள்ளுங்கள். ஆனால் நீங்கள் எந்த கடனும் இதுவரை வாங்கவில்லை, வீடு நல்ல இடத்தில் அமைத்திருக்கிறது, இல்லை நீங்கள் வாங்கப்போகும் வீடு முதன்மை பில்டரால் கட்டப்பட்டுள்ளது என்றால் குறைவான முன்பணம் கேட்கவும் வாய்ப்புள்ளது.

Down Payment for Home Loan | வீட்டுக் கடன் வாங்குவதற்கு முன்பணம் எவ்ளோ செலுத்த வேண்டும் தெரியுமா?Representative Image

அதுவும் ஒரு சில நிறுவனங்கள் வீட்டின் மதிப்பை உயர்த்திக்காட்டி 100% தொகையையும் தரலாம். அப்படி இருந்தால் அது நமக்கு ஆபத்து, ஏனெனில் முழு தொகையையும் கடனாக தந்தாள் கடன் வாங்குபவர்களுக்கு வீட்டின் மீது பிடிமானம் இருக்காது. மேலும் கடன் வாங்கிய பின்னர் ரியல் எஸ்டேட் மந்தமாக இருக்குமேயானால் நமக்கு நஷ்டம் ஏற்படவும் வாய்ப்புகள் உள்ளது. பின்னர் நம்மால் வாங்கிய கடனை அடைக்க முடியாது பட்சத்தில் நிறைய இன்னல்கள் நேரிடும். வீட்டை விற்று, கடன் அடைக்க முடியாமல், வட்டி அதிகமாகி சிரமத்திற்கு ஆளாவீர்கள்.

அதே போல் கிரெடிட் ஸ்கோர் குறைவாக இருந்தால், அதிக வட்டிக்கு வீட்டுக் கடன் தரப்படும். மேலும் முன்பணம் அதிகமாக தந்தாள் கடனுக்கான வட்டி குறைவாக இருக்கும். எனவே, இவ்ளோ விஷயங்கள் இருக்கிறது வீட்டுக் கடன் வாங்குவதில். எந்த வங்கியில் வீட்டுக் கடன் வாங்குகிறீர்களா தெளிவாக கேட்டு எது வேண்டும் எது முக்கியம் என்பதில் கவனம் செலுத்தி வாங்குங்கள்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்