Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

100 Days Velai Thittam: 100 நாள் வேலைத் திட்டம் – இத செய்யலான சம்பளம் இல்லை… இத செய்ய மறந்துடாதீங்க....

Gowthami Subramani June 09, 2022 & 16:40 [IST]
100 Days Velai Thittam: 100 நாள் வேலைத் திட்டம் – இத செய்யலான சம்பளம் இல்லை…  இத செய்ய மறந்துடாதீங்க....Representative Image.

100 Days Velai Thittam: மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் உள்ள நபர்களுக்கு அரசு ஒரு முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இதனைச் செய்யாவிட்டால், இனி சம்பளம் இல்லை எனவும் குறிப்பிட்டுள்ளது.

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் பணிபுரியும் பணியாளர்கள் ஏராளக்கணக்கானோர் உள்ளனர். இந்தத் திட்டம் இந்திய அரசின் வேலை உறுதியளிப்புத் திட்டம் ஆகும். இந்தத் திட்டம் கடந்த 2005 ஆம் ஆண்டு அமல்படுத்தப்பட்டது. இதன் பெயர் தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டம் ஆகும். மேலும், இது 2009 ஆம் ஆண்டு மகாத்மா காந்தியைப் பெருமிதப் படுத்தும் வகையில், மகாத்மா காந்தி அவர்களின் பிறந்த நாளில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டம் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது (Mahatma Gandhi National Rural Employment Gurantee).

100% - 100 நாள்கள் வேலை உறுதி

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தின் படி, ஒரு நிதியாண்டில் பொதுமக்களுக்கு 100 நாட்கள் கட்டாயம் வேலை வாய்ப்பு கிடைக்கப்பட வேண்டும் (100 Days Work Details in Tamil). அதன் படி, இந்தத் திட்டத்தின் கீழ் உள்ள பொதுமக்கள் பல்வேறு பணிகளில் ஈடுபடுவார்கள். அதன் படி, கிராமகங்களில் உள்ள ஏரி மற்றும் குளங்கள் தூர்வாரப்படுதல், நீர் வழித்தடங்களை சீரமைப்பது, மரக் கன்றுகளை நட்டு வனங்களை வளமாக்குதல், நீர் போகும் இடங்களில் வழித் தடங்களைச் சீரமைப்பது போன்ற பல்வேறு பணிகள், இந்தத் திட்டத்தில் கீழ் உள்ள மக்களுக்கு வழங்கப்படுகிறது (100 Days Work Scheme in Tamilnadu).

புதிய அறிவிப்பு

இந்தத் திட்டத்தின் கீழ் உள்ள பொதுமக்கள் (மாற்று திறனாளிகள் உட்பட) எல்லோரும் காலை மற்றும் மதிய நேரங்களில் தங்களின் வருகையினைத் தவறாமல் பதிவு செய்ய வேண்டும். அதன் படி, மாவட்ட ஆட்சியர் ஜெ,மேகநாதரெட்டி குறிப்பிட்டதாவது, NMMS APP வாயிலாக பொதுமக்கள் பதிவு செய்தால் மட்டுமே அவர்கள் பணிக்கு வருகை தந்துள்ளனர் என்று உறுதி செய்யப்படும். மேலும், அவ்வாறு உறுதி செய்யப்படுபவர்களுக்கு மட்டுமே சம்பளம் வழங்கப்படும் (Benefits on NMMS App).

எப்போது முதல் மற்றும் எவ்வாறு செய்வது?

இந்த அறிவிப்பு வருவதற்கு முன் வரை, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் பணிபுரியும் பணியாளர்களின் வருகை அவர்கள் கையால் பதிவு செய்வதைப் பொறுத்தே ஊதியம் வழங்கப்பட்டு வந்தது.

இவ்வாறு புதிதாக அறிவிக்கப்பட்ட திட்டத்தின் படி, பணிகள் மற்றும் பணிபுரியும் பொதுமக்கள் வருகை போன்ற விவரங்கள் வெளிப்படைத் தன்மையுடன் இருக்கும். அந்த வகையில், அரசு விதிமுறைகளின் படி உரிய நேரத்தில் பணிபுரிதலை உறுதி செய்யப்படுவதற்கு Nrega என்ற இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும் (100 Days Velai Thittam in Tamil).

இந்த Nrega இணையதளத்தில் இருக்கும் National Mobile Monitoring System (NMMS) என்ற அப்ளிகேஷன் வாயிலாக பதிவு செய்ய முடியும். அதன் படி, பணிகள் மற்றும் பணிபுரியும் பணியாளர்கள் போன்றோரின் முழு விவரங்களை இந்த அப்ளிகேஷனில் நிரப்ப வேண்டும். மேலும், இந்தத் திட்டம் மே மாதம் 16 ஆம் நாள் தொடங்கியுள்ளது (Mandatory for 100 Days Work Scheme).

ஆட்சியர் அறிவிப்பு

இந்த வேலை உறுதித் திட்டத்தின் கீழ் பணிபுரியக் கூடிய பணியாளர்கள் அனைவருமே தவறாமல் இந்த அப்ளிகேஷனுக்குச் சென்று விவரங்களைப் பதிவிட வேண்டும். இவ்வாறு செய்தால் மட்டுமே பணிகள் மற்றும் பணியாளர்கள் அனைவருமே உறுதி செய்யப்படுவார்கள்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.....


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்