Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

School Latest News: அரசுப் பள்ளி குழந்தைகளுக்கு பரிசு….. கல்வி இயக்குனரின் அதிரடி உத்தரவு..?

Gowthami Subramani June 06, 2022 & 16:40 [IST]
School Latest News: அரசுப் பள்ளி குழந்தைகளுக்கு பரிசு….. கல்வி இயக்குனரின் அதிரடி உத்தரவு..?Representative Image.

School Latest News: அரசுப் பள்ளிக் குழந்தைகளுக்கு ஊக்கப் பரிவு வழங்க வேண்டும் என தொடக்கக் கல்வி இயக்குனர் உத்தரவு அளித்துள்ளார்.

குழந்தைகளின் எதிர்காலத்தைப் போற்றி அவர்களுக்கு கல்வி பயில்வதில் ஆர்வத்தை ஏற்படுத்தும் வகையில் இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. அது மட்டுமல்லாமல், அரசு பள்ளிகளில் குழந்தைகள் சேருவதை ஊக்குவிக்கும் வகையில், அவர்களுக்கு ஊக்கப்பரிசு வழங்க வேண்டும் என்று தொடக்கக் கல்வி இயக்குனர் தெரிவித்துள்ளார் (School Latest News).

அரசு பள்ளிகளில் சேர

தற்போது, ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளை எல்கேஜி, யுகேஜி, ப்ரிகேஜி என தனியார் பள்ளிகளில் சேர்த்து விடுகின்றனர். இதனால், அரசு பள்ளிகளில் தொடக்கக் கல்வி பயிலும் மாணவர்கள் குறைவாகவே உள்ளனர். இதனை ஊக்குவிக்கும் பொருட்டு, ஐந்து வயதுக்கு உட்பட்ட அனைத்து குழந்தைகளையும், அரசு பள்ளிகளில் சேர வைப்பதற்கான முயற்சியில் ஈடுபட வேண்டும். மேலும், அரசு பள்ளிகளில் இலவச கல்வி தரமான வகையில் வழங்கப்படுவதை பொது மக்களுக்கு அறிவிக்கும் பொருட்டு பேனர்கள் வைத்தும், துண்டு பிரச்சாரங்கள் வைத்தும் விழிப்புணர்ச்சியை ஏற்படுத்த வேண்டும் என மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு, தொடக்கக் கல்வி இயக்குனர் தெரிவித்துள்ளார் (Government School Student Schemes).

A picture containing person, concert band, crowd

Description automatically generated

விழிப்புணர்வு பேரணி

தமிழ் மற்றும் ஆங்கில வழிப்பிரிவுகளில் கல்வி கற்கும் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி வழங்கப்படுவதை எடுத்துக் கூறினார். மேலும், இதற்கான விழிப்புணர்வை மக்களுக்கு ஏற்படுத்தி, மாணவர் சேர்க்கை நடைபெறும் முன்னரே, அதாவது பள்ளிகள் திறப்பதற்கு மூன்று நாள்களுக்கு முன்னதாகவே நடத்த வேண்டும் (Latest Scheme for School Students).

அங்கன்வாடி குழந்தைகள்

மேலும், ஒற்றை இலக்க எண்ணிக்கையில் மாணவர்கள் இருக்கும் பட்சத்தில், அந்த பள்ளிகளின் ஆசிரியர்கள் இது போன்ற விழிப்புணர்வுகள் அர்ப்பணிப்பு உணர்வுடன் ஏற்படுத்தி, மாணவர்களின் எண்ணிக்கையை உயர்த்துவதற்கான வழிவகைகளை மேற்கொள்ள வேண்டும். மேலும், அங்கன்வாடியில் உள்ள குழந்தைகளில் ஐந்து வயது அடைந்தவரைக் கண்டறிந்து பின், அந்த குழந்தைகளையும், அவர்கள் வீட்டிற்கு அருகில் இருப்பவர்களையும் சேர்ந்து கண்டறிந்து மாணவர் சேர்க்கைக்கு உதவியாக இருக்க வேண்டும் (Government School Students Schemes in Tamil).

A picture containing text, bedroom

Description automatically generated

குழந்தைகளுக்கான ஊக்கப் பரிசு வழங்கும் திட்டம் (Incentive Scheme for Children)

குழந்தைகளுக்குப் பயன்பெறும் வகையில், அமையக் கூடிய அரசு நலத்திட்டங்களைப் பெறுவதற்கான வழிகளைப் பெறலாம். மேலும், இவ்வாறு பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிப்பதற்கு ஊக்கப் பரிசு வழங்குவது சிறந்த முறையாகும் (Incentive Schemes for Government School Students Tamil). எனவே, பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்கள், அரசுப் பள்ளிகளின் சிறப்பைப் பற்றியும், நலத்திட்டங்கள், கல்வி உதவித் தொகைகள், கட்டமைப்பு வசதிகள் மற்றும் இன்னும் பிற முக்கிய அம்சங்களை வீடு வீடாகச் சென்று பெற்றோர்களிடம் அரசுப் பள்ளியின் பெருமிதத்தை எடுத்துக் கூற வேண்டும்.

மேலும், பள்ளி மேலாண்மைக் குழு சார்பில் ஊக்கப்பரிசுகள் வழங்கலாம் (Latest Scheme for Students). அது மட்டுமல்லாமல், நூறு சதவீத மாணவர் சேர்க்கையை வழங்கும் அலுவலர்களுக்குப் பாராட்டு சான்றிதழ் வழங்கி கௌரவப்படுத்தலாம் என அறிக்கையில் கூறியுள்ளார்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.....!


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்