Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Cibil Score Meaning in Tamil: கடன் வாங்குவதற்கு முன், சிபில் ஸ்கோர் பற்றி தெரிந்து கொள்வது மிக அவசியம்…! இல்லைனா உங்களுக்கு தான் கஷ்டம்…!

Gowthami Subramani June 20, 2022 & 12:00 [IST]
Cibil Score Meaning in Tamil: கடன் வாங்குவதற்கு முன், சிபில் ஸ்கோர் பற்றி தெரிந்து கொள்வது மிக அவசியம்…! இல்லைனா உங்களுக்கு தான் கஷ்டம்…!Representative Image.

Cibil Score Meaning in Tamil: பொதுவாக, கடன் சம்பந்தப்பட்ட விஷயத்தில், முதலில் அனைவரும் முக்கியமாகத் தெரிந்து கொள்வது சிபில் ஸ்கோர். சிபில் ஸ்கோரைப் பற்றி எல்லோரும் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியமாகும். 

சிபில் என்றால் என்ன? (What is CIBIL?)

CIBIL என்பதன் விரிவாக்கம் Credit Information Bureau (India) Limited (CIBIl Full Form). இந்த நிறுவனம் கடன் பெறுவோர் விவரங்களைப் பற்றி அளிக்கக் கூடிய இந்தியாவின் முதல் தகவல் நிறுவனமாக உள்ளது (CIBIl Score Meaning in Tamil).

அதாவது, கடன் பெறுவோர் விவரங்களைக் கொண்ட ஒரு தலமாகச் செயல்படுகிறது. அதன் படி, வங்கிகள் மற்றும் தனியார் நிதி நிறுவனங்களின் மூலம் கடன் பெறும் நபர்கள் விவரங்கள் அனைத்தும் குறிப்பிடப்பட்ட வங்கிகள் அல்லது நிறுவனங்களின் அடிப்படையில், சிபில் நிறுவனத்தில் அப்டேட் செய்யும் (What is Meant by CIBIL Score in Tamil). அதன் படி, வங்கிகள் ஒவ்வொரு மாதமும் இந்த அப்டேட்டை சிபில் நிறுவனத்திற்கு வழங்குகின்றன. மேலும், இதில் சில வங்கிகளில் கடன் பெறுவோர் அப்டேட் செய்வது 60 நாட்களுக்கு ஒரு முறையும் நிகழும் (What is CIBIL Score in Tamil).

குறிப்பாக யாருடைய விவரங்கள்

கிரெடிட் கார்டு, பெர்சனல் லோன், கார் லோன், ஹோம் லோன், கல்விக் கடன் அல்லது வேறு வகைக் கடன்களை வங்கிகளிலோ அல்லது வங்கி சாராத தனியார் நிறுவங்களிலோ கடன் பெறும் நபர்களை பற்றிய விவரங்கள் சிபில் நிறுவனத்தில் இருக்கும். இதன் மூலம், எந்த நபர் சரியாக கடன்களைத் திரும்பச் செலுத்துகிறார்கள் என்ற தகவலைப் பெற முடியும் (CIBIL Score Importance for Personal Loan).

சிபில் பயன்கள்

கல்விக்கடன், வீட்டுக் கடன், கிரெடிட் கார்டு போன்ற பல்வேறு விதமான கடன்களுக்கு விண்ணப்பிக்கும் போது, சிபில் ஸ்கோர் தகவல்களைப் பெற உதவும். எந்த வங்கி அல்லது நிதி நிறுவனத்தில் கடன் தொகை பெற நினைக்கிறோமோ.. அந்த வங்கி அல்லது நிதி நிறுவனம் கடன் வாங்கும் நபர்களின் சிபில் ஸ்கோர் அளவு, அவர்களின் கடன் விவரங்கள், மற்றும் கடனைத் திருப்பிச் செலுத்தி இருக்கக்கூடிய விதம் போன்றவை பார்க்கப்பட்டு அந்த நபருக்கு கிரெடிட் கார்டு அல்லது கடன் தொகை கொடுக்கலாமா என்பதை முடிவு செய்யும். இவ்வாறு ஒரு குறிப்பிட்ட நபர்களுக்கு கடன் கொடுப்பதற்கு முன், அவருடைய விவரங்களைத் தெரிந்து கொள்வதன் மூலம் பிரச்சனையைத் தவிர்க்க முடியும் (CIBIL Score Check in Tamil).

விவரங்களை சிபில் பெறும் விதம்

ரிசர்வ் வங்கியின் உத்தரவு படி, வங்கி மற்றும் தனியார் நிதி நிறுவனங்கள் கடன் பெறக் கூடிய நபர்கள் குறித்த அனைத்து விவரங்களைத் தானாகவே சிபில் நிறுவனத்திற்கு அளிக்கும் (How to Improve CIBIL Score Immediately).

இதில், ஒருவரின் தனிப்பட்ட தகவல்களான, அவர்களின் கடன் வகை, கடனாக பெற்ற தொகை, கடனைத் திருப்பி செலுத்த வேண்டிய காலம், குறிப்பிடப்பட்ட கால இடைவெளியில் சரியாக கடன் செலுத்தி இருக்கிறார்களா? மற்றும் தாமதமாக செலுத்துதல் போன்ற முக்கிய தகவல்கள் சிபில் நிறுவனத்தில் இடம் பெறும்.

அதனைத் தொடர்ந்து கடன் முழுவதும் செலுத்தப்பட்டு விட்டதா? அல்லது இன்னும் செலுத்தப்படாத கடன் தொகை எவ்வளவு போன்ற முக்கிய தகவல்களுடன் இவை இடம் பெறும் (Best CIBIL Score for Loan).

சிபில் ஸ்கோரின் அளவு (CIBIL Score Range)

சிபில் ஸ்கோர் 300 முதல் 900 வரை அளவைக் கொண்டிருக்கலாம். சிபில் ஸ்கோரின் அளவு 750-க்கும் அதிகமாகக் கொண்டிருக்கும் நபர்களுக்கு எளிதில் கடன் கிடைக்கும் (CIBIL Score Maximum Range). மேலும், இவர்களுக்கு வட்டியும் குறைவாக இருக்கும். ஆனால், 750-க்கும் கீழ் சிபில் ஸ்கோர் கொண்ட நபர்கள் கடன் வாங்குவது கடினமாக இருக்கும். மேலும், இவர்களுக்குக் கொடுத்த போதிலும் வட்டி விகிதம் அதிக அளவிலேயே இருக்கும் (CIBIl Score Minimum Range).

இவ்வாறு ஒருவர் கடன் பெறுவதற்கு முன் அவர்களுக்கு சிபில் ஸ்கோர் எந்த அளவு உள்ளது என்பதைச் சரிபார்த்த பிறகே, கடன் தொகை வழங்கப்படும்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.....


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்