Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

இந்த டிப்ஸ மட்டும் ஃபாலோப் பண்ணுங்க… உங்கள் சிபில் ஸ்கோர் எகிறிடும்.!

Gowthami Subramani October 08, 2022 & 19:30 [IST]
இந்த டிப்ஸ மட்டும் ஃபாலோப் பண்ணுங்க… உங்கள் சிபில் ஸ்கோர் எகிறிடும்.!Representative Image.

வங்கிகளில் கடன் பெறுவதற்கு சிபில் ஸ்கோர் என்பது முக்கிய பங்காற்றுகிறது. வங்கிகளில் கடன் வாங்க நினைப்பவர்கள், கட்டாயம் சிபில் ஸ்கோர் என்பதைப் பற்றித் தெரிந்து கொண்டிருப்பது அவசியம் ஆகும். வங்கிகளில் சரியான நேரத்தில், வாங்கிய கடனைச் செலுத்தி வருவதன் மூலம், சரியான சிபில் ஸ்கோரைப் பெற்றிருக்கலாம். இதில், சிபில் ஸ்கோர் குறைவதற்கு ஏகப்பட்ட காரணிகள் இருக்கலாம். பொதுவாக, கிரெடிட் கார்டு என்றாலே பெரும்பாலானோர் கடன் அதிகமாகி விடும் என்ற பயத்தில் வாங்க மாட்டார்கள். ஆனால், கிரெடிட் கார்டை உபயோகப்படுத்தி, சிபில் ஸ்கோரை உயர்த்தலாம். இந்தப் பதிவில் எப்படி என்று பார்ப்போம்…

இந்த டிப்ஸ மட்டும் ஃபாலோப் பண்ணுங்க… உங்கள் சிபில் ஸ்கோர் எகிறிடும்.!Representative Image

சிபில் ஸ்கோர்

சிபில் ஸ்கோர் என்பது, நாம் வங்கிகளில் கடன் வாங்கிய பிறகு, எவ்வாறு நாம் கடன் செலுத்துகிறோம் என்பதைப் பற்றி அறிவதாகும். நாம் வங்கிகளில் கடன் வாங்கிய பிறகு, சரியான நேரத்தில் பெற்ற தொகையை திருப்பிச் செலுத்தி விட வேண்டும். பொதுவாக, சிபில் ஸ்கோரின் அளவு 300 மற்றும் 900-க்கும் இடையே இருக்கும். இதில், அதிகபட்சமாக கடன் தொகை பெறுவதை 900 எனக் குறிப்பிடுகிறது. பொதுவாக, ஒரு நபர் கடன் தொகை பெறுவதற்கு 750 அல்லது அதற்கு மேற்பட்ட சிபில் ஸ்கோரைப் பெற்றிருத்தல் சிறந்தது.

இந்த டிப்ஸ மட்டும் ஃபாலோப் பண்ணுங்க… உங்கள் சிபில் ஸ்கோர் எகிறிடும்.!Representative Image

கிரெடிட் கார்டு பயன்படுத்துதல்

கிரெடிட் கார்டுகள் தற்போது பெரும்பாலானோரால் பயன்படுத்தப்பட்டு வருகிறது. மொபைல் போன்கள், வீட்டிற்குத் தேவையான பொருள்கள் அனைத்துமே தற்போது கிரெடிட் கார்டு மூலம் வாங்குவதைக் கேள்விப்பட்டிருப்போம். அதே போல, நாம் வெளியில் செல்லும் போது ஜவுளிக்கடை, நகைக்கடை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கிரெடிட் உபயோகித்திருப்பதைப் பார்த்திருப்போம். ஒருவரது வங்கியின் சேமிப்புக் கணக்கு மற்றும் பணப்பரிவர்த்தனை சரியாக இருப்பின், வங்கிகள் உங்களுக்கு கிரெடிட் கார்டு ஆஃபரை வழங்கும்

இந்த டிப்ஸ மட்டும் ஃபாலோப் பண்ணுங்க… உங்கள் சிபில் ஸ்கோர் எகிறிடும்.!Representative Image

சரியாக உபயோகித்தல்

கிரெடிட் கார்டுகளை வைத்திருப்பதால் மட்டும் சிபில் ஸ்கோர் பெற முடியாது. கிரெடிட் கார்டுகளை, தேவையான முறையில் உபயோகிக்க வேண்டும். கிரெடிட் கார்டு ஸ்கோரை சரியான விகிதத்தில் வைத்திருப்பதன்  மூலமே, நம்மால் சிபில் ஸ்கோரை சரியாக வைத்திருக்க முடியும்.

மேலே கூறப்பட்டது போல, ஒரு கிரெடிட் ஸ்கோர் 300 முதல் 900 வரை இருக்கும். இதில், 750-க்கும் அதிகமான ஸ்கோர் இருந்தாலே, அது நல்ல ஸ்கோராக கருதப்படுகிறது. முதல் முறையாக கிரெடிட் கார்டு வாங்கி உபயோகிப்பவர்களுக்கு இந்த சிபில் ஸ்கோரைப் பற்றி தெரிந்து கொள்வது அவசியமாகும்.

இந்த டிப்ஸ மட்டும் ஃபாலோப் பண்ணுங்க… உங்கள் சிபில் ஸ்கோர் எகிறிடும்.!Representative Image

கிரெடிட் கார்டு மூலம் சிபில் ஸ்கோரை மேம்படுத்துவதற்கான முறைகள்

கிரெடிட் கார்டு வைத்திருப்பது மட்டுமல்லாமல், அதனை சரியான முறையில் உபயோகிப்பதன் மூலம் மட்டுமே சிபில் ஸ்கோரை சரியாக வைத்திருக்க முடியும். இதற்கு சில வழிமுறைகள் உள்ளன. அவற்றைப் பற்றி இதில் காண்போம்.

இந்த டிப்ஸ மட்டும் ஃபாலோப் பண்ணுங்க… உங்கள் சிபில் ஸ்கோர் எகிறிடும்.!Representative Image

சரியான நேரத்தில் கடனைச் செலுத்துதல்

கிரெடிட் கார்டைப் பயன்படுத்தி, கடன் பெறுவோர்கள் சரியான நேரத்தில் கடன்களைச் செலுத்தி விட வேண்டும். அதன் படி, முதலில் இஎம்ஐ-க்களை தாமதாகவோ அல்லது செலுத்தாமலோ இருக்கக் கூடாது. இவ்வாறு சரியான முறையில் கடன் செலுத்தாமல் விடுவதன் மூலம் சிபில் ஸ்கோர் குறைகிறது. எனவே, கிரெடிட் கார்டின் மூலம் பெறப்பட்ட இஎம்ஐ-க்கள் மற்றும் நிலுவைத்தொகையைச் சரியான நேரத்தில் செலுத்தி சிபில் ஸ்கோரை அதிகப்படுத்தலாம்.

இந்த டிப்ஸ மட்டும் ஃபாலோப் பண்ணுங்க… உங்கள் சிபில் ஸ்கோர் எகிறிடும்.!Representative Image

ஆடம்பர செலவை ஒத்தி வைத்தல்

பண்டிகைக் காலங்களில் கிரெடிட் கார்டுகளைப் பயன்படுத்தினால், ஒரு சில ஆஃபர்கள் வெளியிடப்படும். இந்த ஆஃபர்களைப் பயன்படுத்தி, கிரெடிட் கார்டின் மூலம் கடன் பெற்று, தேவையற்றதைக் கூட வாங்க நினைப்பர். ஆனால், இவ்வாறு செய்வதன் மூலம், உங்கள் கிரெடிட் கார்டில் கடன் தொகை பெருகுவதுடன் சிபில் ஸ்கோரும் குறைந்து விடும். இதனால், தேவையில்லாத பொருள்களை வாங்குவதைத் தவிர்ப்பது நல்லது.

இந்த டிப்ஸ மட்டும் ஃபாலோப் பண்ணுங்க… உங்கள் சிபில் ஸ்கோர் எகிறிடும்.!Representative Image

முழுத்தொகையையும் செலுத்துதல்

கிரெடிட் கார்டைப் பயன்படுத்தி வாங்கும் எந்தவொரு கடனாக இருந்தாலும், அதற்கான தொகையுடன் வட்டியையும் முறையாக செலுத்த வேண்டும். அதன் படி, மாதந்தோறும் வரும் குறைந்தபட்ச தொகையை செலுத்துவது கிரெடிட் ஸ்கோரைப் பாதிக்காது. அதே சமயம், இந்த கிரெடிட் கார்டுக்கான பில்லிங் சுழற்சியில் முழுத்தொகை எவ்வளவு என்பதை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.

இதில், குறிப்பாக உங்களது கிரெடிட் கார்டு வாங்கும் போது அதற்கான வட்டிவிகிதம் எவ்வளவு? எவ்வளவு தொகையைப் பெறலாம்? இலவச கார்டா அல்லது ஆண்டு தோறும் தொகை செலுத்த வேண்டுமா..? உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் தெரிந்து கொள்வது அவசியம் ஆகும்.

இவ்வாறு கிரெடிட் கார்டுகளை முறையாக உபயோகப்படுத்துவதன் மூலம், மாதாந்திர EMI களை முறையாக செலுத்துவதன் மூலமும், சிபில் ஸ்கோரை உயர்த்த முடியும்.

 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்