Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

How to Link Aadhaar with IRCTC Account in Tamil: ஆதார் எண்ணுடன் எவ்வாறு ஐஆர்சிடிசி எண்ணை எவ்வாறு இணைக்கலாம்..? இவ்வாறு இணைப்பதால் கிடைக்கும் பயன்கள்…?

Gowthami Subramani June 19, 2022 & 20:20 [IST]
How to Link Aadhaar with IRCTC Account in Tamil: ஆதார் எண்ணுடன் எவ்வாறு ஐஆர்சிடிசி எண்ணை எவ்வாறு இணைக்கலாம்..? இவ்வாறு இணைப்பதால் கிடைக்கும் பயன்கள்…?Representative Image.

How to Link Aadhaar with IRCTC Account in Tamil: ஐஆர்சிடிசி வைத்திருப்பவர்கள், அதன் கணக்குகளை ஆதார் எண்ணுடன் இணைக்க வேண்டும் என தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளது. இவ்வாறு ஆதார் எண்ணுடன் ஐஆர்சிடிசி கணக்குகளை இணைப்பதால் 12 டிக்கெட்டுகள் முதல் 24 டிக்கெட்டுகள் வரை முன்பதிவு செய்ய முடியும் என கூறப்பட்டிருந்தது.

ஐஆர்சிடிசி (IRCTC)

ஐஆர்சிடிசி என்பது இந்திய ரயில்வே கேட்டரிங் மற்றும் சுற்றுலா கழகம். இதன் மூலம் ரயில்களில் செல்வதற்கு டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ய முடியும். ஐஆர்சிடிசி மூலம் ரயில்களில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து அதன் மூலம் பயணம் செய்யலாம். இத்துடன் ஆதார் எண் இணைக்கப்படலாம் எனக் குறிப்பிடப்பட்டிருந்தது (How to Link Aadhaar with IRCTC Account in Tamil).

முன்பதிவு செய்தல்

ஐஆர்சிடிசி உடன் ஆதார் எண்ணை இணைப்பதன் மூலம் மாதத்திற்கு 12 டிக்கெட்டுகள் முதல் 24 டிக்கெட்டுகளை வரை முன்பதிவு செய்து கொள்ளலாம் என்று கூறப்பட்ட நிலையில், அதனை எவ்வாறு இணைப்பது என்பது பற்றி பார்க்கலாம் (Link Aadhaar with IRCTC).

மேலும், ஆதார் எண்ணை இணைக்காத ஐஆர்சிடிசி கணக்குகளில் ஆறு டிக்கெட்டுகளில் இருந்து 12 டிக்கெட்டுகள் வரை முன்பதிவு செய்ய முடியும் என்றும் கூறப்பட்டிருந்தது.

அவ்வாறு ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்ட ஐஆர்சிடிசி கணக்கில் இருந்து இரண்டு மடங்கு டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ய முடியும் என அறிவிப்பு வெளியானதால் பெரும்பாலானோர் தங்களது ஐஆர்சிடிசி கணக்குடன் ஆதார் எண்ணை இணைத்து வருகின்றனர்.

தற்போது, ஐஆர்சிடிசி கணக்கில் ஆதார் எண்ணை எவ்வாறு இணைக்கலாம் என்பது பற்றிய விவரங்களைப் பற்றி இதில் காண்போம்.

ஐஆர்சிடிசி கணக்குடன் ஆதார் எண்ணை எவ்வாறு இணைப்பது? (How to Link Aadhaar and IRCTC)

  • முதலில் ஐஆர்சிடிசி அக்கவுண்ட் வைத்திருக்கும் நபர்கள் ஐஆர்சிடிசி-யின் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் செல்ல வேண்டும்.
  • அதில் உங்களது அக்கவுண்ட் பெயர் மற்றும் பாஸ்வோர்டை குறிப்பிட்டு Login செய்ய வேண்டும் (Benefits of Linking Aadhaar with IRCTC).
  • பின் அதன் முகப்புப் பக்கத்தில் உள்ள My Account என்பதைக் க்ளிக் செய்து அதில் Link Your Aadhar என்ற ஆப்ஷனைக் க்ளிக் செய்ய வேண்டும்.
  • அதன் பிறகு, ஆதார் எண்ணில் உள்ள பெயரைச் சரியாகக் குறிப்பிட்டு அதன் பின் அதில் கேட்கும் விவரங்களைப் பூர்த்தி செய்ய வேண்டும்.
  • பிறகு ஓடிபி ஆப்ஷனைக் க்ளிக் செய்து, உங்கள் மொபைலுக்கு வந்த ஓடிபி எண்ணை ஐஆர்சிடிசி-யில் பதிவு செய்ய வேண்டும். பின், அதனை Verify செய்ய வேண்டும்.
  • அதற்குப் பின்னர், KYC விவரங்களைச் சரிபார்க்க வேண்டும். அதன் பிறகே, ஐஆர்சிடிசி ஆதார் இணைப்பு நிறைவு அடையும். இவ்வாறு ஆதார் எண்ணுடன் ஐஆர்சிடிசி கணக்கு இணைப்பை உறுதி செய்யப்பட்டதை மெசேஜ் மூலம் உங்கள் கம்ப்யூட்டரில் Pop-Up Message தோன்றும் (Benefits of Linking IRCTC with Aadhaar).

இவ்வாறு மேற்கண்ட வழிமுறைகளைப் பயன்படுத்தி ஐஆர்சிடிசி கணக்குடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலமாக மாதத்திற்கு 24 டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து கொள்ளும் வசதியினைப் பெறலாம்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.....


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்