Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

துணி எடுக்க பணம் வேணாம்….கிரிப்டோகரன்சி கொடுங்க.. கிரிப்டோகரன்சியை அனுமதித்த உலகின் மிகப் பெரிய நிறுவனம்…!

Gowthami Subramani [IST]
துணி எடுக்க பணம் வேணாம்….கிரிப்டோகரன்சி கொடுங்க.. கிரிப்டோகரன்சியை அனுமதித்த உலகின் மிகப் பெரிய நிறுவனம்…!Representative Image.

கூச்சி ஆடை நிறுவனம், பணம் செலுத்தாமல் வாடிக்கையாளர்களை கிரிப்டோகரன்சி மூலம் துணிகளை வாங்குவதற்கு அனுமதிகிறது. இந்த நிறுவனம் அமெரிக்க கடைகளில் மட்டும் வாடிக்கையாளர்களை பிட்பே மூலம், ஏப்காயினைப் பயன்படுத்தி, இந்த நிறுவனத்திற்கான தயாரிப்புகளுக்கு பணம் செலுத்த அனுமதிக்கிறது.

கிரிப்டோகரன்சியைப் பயன்படுத்தி

ஏப்காயின் என்பது, அமெரிக்காவில் பயன்படுத்தப்படக் கூடிய கிரிப்டோகரன்சி வகையாகும். இது டிஜிட்டல் தளங்களின் மூலம், பணத்திற்கு பதில், டிஜிட்டல் பரிவர்த்தனைக்காகப் பயன்படுத்தப்படுகிறது. அந்த வகையில், கூச்சி துணி கடையில் கிரிப்டோகரன்சி கொடுத்து பணத்துக்குப் பதில் பயன்படுத்திக் கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது. அதன் படி, உலகளவில் கிரிப்டோகரன்சியை ஏற்றுக் கொள்ளக்கூடிய முதல் பெரிய நிறுவனம் இந்த கூச்சி ஆடை நிறுவனமே ஆகும்.

அரசுக்கு எதிரானது

உலகளில் கிரிப்டோகரன்சிகள், பல்வேறு அரசுகளால் எதிர்க்கப்பட்டு வருகிறது. இருந்தபோதிலும், சில நிறுவனங்கள், கிரிப்டோகரன்சிகள் மூலம் பரிவர்த்தனை செய்வதற்கான முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. இதன் ஒரு படியாகவே, கூச்சி ஆடை நிறுவனம் தற்போது, அமெரிக்காவில் உள்ள அந்த நிறுவனத்தின் கடைகளில் மட்டும் பிட்பே மூலம் ஏப்காயினைப் பயன்படுத்தி, பணத்திற்குப் பதில் கிரிப்டோகரன்சிகளைச் செலுத்த அனுமதிக்கிறது.

இது குறித்து, கூச்சி நிறுவனம் தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டதன் படி, “இப்போது, பிட்பே வழியாக, ஏப்காயின் மூலம் பரிவர்த்தனை செய்யலாம். இது தற்போது அமெரிக்காவில் உள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட கூச்சி கடைகளில் மட்டுமே இந்த வசதியை விரிவுபடுத்துகிறோம்” என்று குறிப்பிட்டுள்ளது.

பிட்பே என்றால் என்ன?

கிரிப்டோகரன்சி பரிமாற்றத்திற்கான அடிப்படை தயாரிப்பே பிட்பே என கூறப்படுகிறது. இது பிளாக்செயினுடன் பதிவு செய்யப்பட்ட நிறுவனமாகச் செயல்படுகிறது. பணப் பரிவர்த்தனைக்கு பதில் கிரிப்டோகரன்சிகளைப் பரிவர்த்தனை செய்வதற்காக இருப்பதே பிட்பே என கூறப்படுகிறது. இதனைப் பயன்படுத்தி, கிரிப்டோகரன்சிகளை பணமாக வாங்கலாம் மற்றும், அவற்றை பாதுகாப்பான பணப்பைக்கு மாற்றலாம்.

டிஜிட்டல் நாணயம்

நிதித்துறையில் புரட்சியை ஏற்படுத்தும் விதமாக அமைந்த இந்த பிட்காயினின் திறனைக் கண்ட பின், உலகில் பல்வேறு பகுதிகளில் இதனைப் பற்றி தெரிந்து கொள்ள கூடிய ஆர்வமும் அதிகரித்துள்ளது. மேலும், இது பிளாக்செயின் கட்டண தொழில்நுட்பத்தை உருவாக்குவதில் முன்னோடியாகத் திகழ்கிறதும் என்றும் கூறப்படுகிறது.

இவ்வாறு, டிஜிட்டல் நாணயத்தைப் பல்வேறு நாடுகள் ஏற்றுக் கொண்டு வருகின்றனர். இதன் காரணமாக, இந்த ஆண்டு மே மாதம் முதலே, கூச்சி நிறுவனம் கிரிப்டோகரன்சிகளைப் பயன்படுத்தி பணப் பரிவர்த்தனைகள் செய்வதற்கு தொடங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.....

Cryptocurrency in Gucci Town | Cryptocurrency in Gucci Wallet | Cryptocurrency in Gucci Store | Cryptocurrency in Gucci game | Cryptocurrency in Gucci Town roblox | lowest Transaction fee Cryptocurrency exchange in india | Cryptocurrency Transaction Fees List 2021 in india | Which Cryptocurrency Is best for Transactions | Is Cryptocurrency approved by RBI | Cryptocurrency Transactions per second | Crypto number of Transactions | Cryptocurrency Transaction process | Cryptocurrency charges


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்